சுகாதார விதிமுறைகளை 10ல் ஆறு சிங்கப்பூரர்கள் தொடரக்கூடும்

கொவிட்-19 சூழ­லுக்­குப் பிற­கும் தற்­போது நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள சுகா­தார விதி­மு­றை­களை பத்­தில் ஆறு சிங்­கப்­பூ­ரர்­கள் தொட­ரக்­கூ­டும் என்று நன்­யாங் தொழில்­நுட்­பப் பல்­க­லைக்­க­ழ­கம் இணை­யம் மூலம் நடத்­திய ஆய்­வில் தெரி­ய­வந்­துள்­ளது.

கொவிட் -19 சூழ­லுக்­குப் பிற­கும் சிங்­கப்­பூ­ரர்­கள் பலர் வெளி யே செல்­லும்­போது தொடர்ந்து முகக்­க­வ­சங்­களை அணி­யக்­கூ­டும் என்று தெரி­விக்­கப்­பட்­டது.

அது­மட்­டு­மல்­லாது, கிருமி நாசினி திர­வத்­தைப் பயன்­ப­டுத்­து­வது, மக்­கள் கூட்­டம் அதி­க­முள்ள இடங்­க­ளைத் தவிர்ப்­பது, பாது­காப்­பான தூர இடை­வெ­ளி­யைக் கடைப்­பி­டிப்­பது போன்ற விதி­மு­றை­களை அவர்­கள் தொடர்ந்து கடைப்­பி­டிப்­ப­தற்­கான சாத்­தி­யம் அதி­கம் இருப்­ப­தாக ஆய்வு தெரி­வித்­தது.

இன்க்யூப் என்று அழைக்­கப்­படும் தேசிய தொழில்­நுட்­பப் பல்­க­லைக்­க­ழ­கத்­தின் தக­வல் நாண­யம், இணைய மையத்­தின் தலை­மை­யில் நடத்­தப்­பட்ட ஆய்­வில் 1,606 பேர் பங்­கெத்­த­னர்.

இணை­யத்­தில் நேர்­மை­யு­டன் நடந்­து­கொள்­வதை மேம்­ப­டுத்த இந்தப் புதிய ஆய்வு மையம் அமைக்­கப்­பட்­டுள்­ளது.

ஆய்­வில் பங்­கெ­டுத்­த­வர்­க­ளின் சரா­சரி வயது 40. அவர்­களில் பாதி பேர் ஆட­வர்­கள்.

கடந்த ஆண்டு டிசம்­பர் 16ஆம் தேதி­யி­லி­ருந்து 31ஆம் தேதி வரை ஆய்வு நடத்­தப்­பட்­டது.

கொவிட்-19 சூழல் கார­ண­மாக மக்­க­ளின் நடத்­தை­யில் ஏற்­படும் நீண்­ட­கால பாதிப்பு பற்றி அறிந்­து­கொள்ள இந்த ஆய்வு நடத்­தப்­பட்­டது.

அதன் ஒரு பகு­தி­யா­கத்­தான் சுகா­தார விதி­மு­றை­கள் தொடர்­வது பற்­றிய கேள்­வி­கள் கேட்­கப்­பட்­டன.

பாது­காப்­பான தூர இடை­வெளி விதி­முறை, கூட்­ட­மான இடங்­க­ளைத் தவிர்ப்­பது ஆகிய விதி­மு­றை­க­ளைத் தொடர்ந்து கடைப்­பி­டிக்க இருப்­ப­தாக ஆய்­வில் பங்­கெ­டுத்த பத்­தில் ஏழு பேர் கூறி­னர்.

கலை­நி­கழ்ச்­சி­கள் போன்ற கூட்­டம் அதி­கம் உள்ள இடங்­க­ளுக்­குச் செல்ல இருப்­ப­தாக ஆய்­வில் பங்­கெ­டுத்த பத்­தில் மூன்று பேர் மட்­டுமே தெரி­வித்­த­னர்.

வெளி­யி­டங்­களில் இருக்­கும்­போது முகக்­க­வ­சம் அணி­யும் பழக்­கத்­தைத் தொடர இருப்­ப­தாக 64 விழுக்­காட்­டி­னர் தெரி­வித்­த­னர்.

கிருமி நாசினி திர­வத்­தைத் தொடர்ந்து பயன்­ப­டுத்த இருப்­ப­தாக 68 விழுக்­காட்­டி­னர் கூறி­னர்.

வேலைக்­கும் பள்­ளிக்­கும் இணை­யம் வழி கலந்­து­ரை­யா­டல்­க­ளைத் தொடர்ந்து நடத்த இருப்­ப­தாக 62 விழுக்­காட்­டி­னர் கூறி­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!