தமிழ் முரசு நாளிதழுக்கு மறுவடிவம் கொடுத்த நிபுணர் பீட்டர் வில்லியம்ஸ் காலமானார்

காலத்­திற்­கேற்ப மாறி­வ­ரும் தமிழ் முரசு நாளி­த­ழின் தற்­போ­தைய அச்சு வடி­வம், அதன் சின்­னம், 75, 80, 85ஆம் ஆண்டு நிறை­வைக் குறிக்­கும் சின்­னங்­களை உரு­வாக்­கிய கலை­ஞ­ரும் ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளி­த­ழின் ஓவி­யப் பிரி­வின் தலைவருமான 48 வயது பீட்­டர் வில்­லி­யம்ஸ் நேற்று முன்­தினம் கால­மா­னார்.

உடல்­ந­லக் குறை­வால் பாதிக்­கப்­பட்­டி­ருந்த அவ­ரது உயிர் சிங்­கப்­பூர் பொது மருத்­து­வ­ம­னை­யில் பிரிந்­தது. அவ­ரது மனைவி ஆர்த்தி முல்­சந்த் வில்­லி­யம்ஸ், நான்கு மாத மகன் ஸய்ன் இரு­வ­ரை­யும் இவர் விட்­டுச்­சென்­றார்.

அயர்­லாந்­தைச் சேர்ந்த சிங்­கப்­பூர் நிரந்­த­ர­வாசியான திரு பீட்­டர், ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளி­த­ழின் வடி­வ­மைப்­பை­யும் சிங்­கப்­பூர் பிரஸ் ஹோல்­டிங்ஸ் நிறு­வ­னத்­தின் இதர செய்­தித்­தாள்­கள், சின்­னங்­களையும் வடி­வ­மைத்த திறன்­மிக்க கலை­ஞர்.

இவ­ரது மறைவு நிறு­வ­னத்­தின் ஊழி­யர்­கள் அனை­வ­ரை­யும் அதிர்ச்சி­யில் ஆழ்த்­தி­யது.

கடந்த 2001ஆம் ஆண்டு வடி­வமைப்­பா­ள­ராக ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் நிறு­வ­னத்­தில் திரு பீட்­டர் சேர்ந்­தார். அதற்கு முன்­னர் அயர்­லாந்­தில் வரை­கலை வடி­வ­மைப்­பா­ள­ரா­க­வும் வரை­கலை வடி­வ­மைப்­பைக் கற்­பிக்­கும் ஆசி­ரி­ய­ரா­க­வும் பணி­யாற்­றி­னார்.

படிப்­ப­டி­யாக முன்­னேற்­றம் கண்டு 2014ஆம் ஆண்­டில் ஓவியப் பிரிவின் தலைவராகப் பதவி உயர்வு பெற்­றார். 2017ஆம் ஆண்­டில் எஸ்­பி­எச் நிறு­வ­னத்­தின் ஆங்­கில, மலாய், தமிழ் ஊட­கப் பிரி­வின் ஓவிய, புகைப்­பட, காணொ­ளிப் பிரி­வு­களை மேற்­பார்­வை­யிட்டு வந்­தார்.

தமிழ் மொழி­யை­யும் வார்த்­தை­களின் அர்த்­தங்­க­ளை­யும் அவர் அறி­யா­விட்­டா­லும் கடந்த 2010ஆம் ஆண்டு தமிழ் முரசு நாளி­த­ழுக்கு மறு­வ­டி­வம் கொடுக்­கும் முயற்­சி­யில் முழு­மை­யாக திரு பீட்­டர் ஈடு­பட்­டதை நினை­வு­கூர்ந்­தார் தமிழ் முர­சின் ஆசி­ரி­யர் திரு ஜவ­ஹ­ரி­லால் ராஜேந்­தி­ரன்.

“நிபு­ணத்­து­வம் நிறைந்த அவர் அந்­தப் பணி­யில் ஈடு­பட்­டு­க் கொண்டே நிறைய கற்­றார். முழு வடி­வம் கிடைப்­ப­தற்­குள் பலமுறை எங்­களுடன் மிக­வும் பொறு­மை­யா­கப் பணி­யாற்­றி­னார். வேலை­யைத் தாண்­டிய சேவை­யா­கவே இவர் தமிழ் முரசு வடி­வ­மைப்­புப் பணி­யைச் செய்­தார்.

“கலா­சா­ரங்­க­ளைப் புரிந்து நட்பை உரு­வாக்­கி­க்கொண்டார். மிக அரு­மை­யான மனி­த­ராக எங்­க­ளின் நன்­ம­திப்­பைப் பெற்ற பீட்­ட­ருக்கு நாங்­கள் என்­றும் கட­மைப்­பட்­டுள்­ளோம்,” என்­றார் திரு ராஜேந்­தி­ரன்.

முந்­தைய ‘மை பேப்­பர்’ இத­ழின் ஓவி­யப் பிரிவு தலைவர், ‘தப்லா’ வார இதழை வடி­வ­மைத்­தது, ‘தி நியூ பேப்­பர்’ இதழை வடி­வ­மைத்­தது போன்­றவை கடந்த ஆண்­டு­களில் பீட்­டர் ஆற்­றிய பணி­கள்.

சென்ற ஆண்டு கிட்­டத்­தட்ட 150 ஊடக நிறு­வ­னங்­கள் பயன்­படுத்­திய ‘உலக செய்தி தினம்’ இயக்­கத்­தின் சின்­னத்தை உரு­வாக்­கி­ய­வ­ரும் இவரே. தமது சொந்த நேரத்­தி­லேயே அதை வடி­வமைத்த இவர், ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் பள்ளி கைக்­காசு நிதி­யின் சின்­னத்­தை­யும் அவ்­வாறே உரு­வாக்­கி­னார்.

தமிழ் முரசு அதன் 75ஆம் ஆண்டு நிறைவை 2010ஆம் ஆண்­டில் கொண்­டா­டி­ய­போது நாளி­தழின் அச்­சுப் பிரதி, மறு­வ­டி­வ­மைப்­பு­டன் வெளி­வந்­தது.

புதிய வண்­ணங்­களில் கண்­கவர் வடி­வில் வெளி­யான அந்த வடி­வமைப்­பைக் கொண்­டு­வர தமிழ் முர­சின் தலைமை உதவி ஆசி­ரி­யர் திரு அண்.சிவ. குணா­ள­னு­டன் திரு பீட்­டர் இணைந்து பணி­யாற்­றி­னார்.

“திரு பீட்­ட­ரின் மறைவு ஒரு பேரி­ழப்­பா­கும். இன்று நம் கைகளில் தவ­ழும் தமிழ் முர­சின் அழ­கிய வடி­வ­மைப்பு, திரு பீட்­ட­ரின் எண்­ணத்­தில் உதித்­த­வை­தான். 2010ஆம் ஆண்டு தமிழ் முர­சின் வடி­வ­மைப்­பைப் புதுப்­பிக்­கும் பணி­யில் திரு பீட்­ட­ரு­டன் அணுக்­க­மா­கப் பணி­யாற்­றிய இனிய அனு­ப­வத்தை என்னால் மறக்க முடி­யா­து,” என்று புக­ழா­ரம் சூட்­டி­னார் திரு குணா­ளன்.

“தமிழ் நாளி­த­ழான தமிழ் முர­சின் வடி­வ­மைப்பு மாற்­றி­ய­மைக்­கப்­ப­டும்­போது தமிழ் சார்ந்த கலா­சா­ரத்­தை­யும் பண்­பாட்­டை­யும் இவர் அறிந்து அதற்­கேற்ற முறை­யில் செயல்­பட்­டது எனக்கு வியப்­பாக இருந்­தது. அத்­து­டன் செய்­தி­யைப் படிக்­கும் வாச­கர்­க­ளின் கண்­கள் நோகா­மல் எழுத்­து­ரு­வும் பத்­தி­களும் அமைய வேண்­டும் என்­ப­தில் கவ­ன­மாக இருந்­தார். அதற்­கேற்­ற­வாறு எழுத்­து­ருக்­க­ளைத் தேர்ந்­தெ­டுக்க அறிவுறுத்தினார். மொத்­தத்­தில் அனைத்­து­ல­கத் தரத்­திற்கு ஒப்­பான வடி­வ­மைப்பை தமிழ் முரசு கொண்­டி­ருக்க வேண்­டும் என்­ப­தில் உறுதி­யாக இருந்­தார்,” என்று திரு பீட்டர் பற்­றிய தமது எண்­ணங்­க­ளைப் பகிர்ந்­தார் திரு குணாளன்.

இளம் தலை­மு­றை­யி­னரை மேம்­படுத்­து­வ­தி­லும் மிகுந்த கவ­னம் செலுத்­தி­ய­வர் திரு பீட்­டர் என்று கூறி­னார் தமிழ் முரசின் செய்­தி­யா­ளர் எஸ்.வெங்­க­டே­‌ஷ்­வ­ரன், 28.

“தமிழ் முர­சில் நான் சேர்ந்து அப்­போது ஏறத்­தாழ ஆறு மாத காலம்­தான் இருக்­கும். ‘ஏக்­கர்ஸ் (ACRES)’ அமைப்பு 51 இந்­திய நட்­சத்­திர ஆமை­களை இந்­தி­யா­விற்­குக் கொண்டு சென்ற முயற்சி­யைப் பற்­றிய செய்­திக் கட்­டு­ரைக்­கான தக­வல் வரை­ப­டத்தை உரு வாக்க வழி­காட்­டி­னார் திரு பீட்­டர்.

“அந்த செய்தி குறித்த காணொளியையும் தயாரித்தோம். இவர் கொடுத்த தைரி­யத்­தில் காணொ­ளியைத் தயாரித்து, பிறகு அந்தச் செய்­திக்கு உன்­னத செய்­திக்­கான விரு­தும் பெற்­றேன். அதுவே செய்­தித்­து­றை­யில் நான் பெற்ற முதல் விருது,” என்று தமது நினை­வ­லை­க­ளைப் பகிர்ந்­தார் திரு வெங்­க­டே­‌ஷ்­வ­ரன்.

திரு பீட்­டர் உல­கத்தரம் வாய்ந்த வடி­வ­மைப்­பா­ளர் என்­றும் அழிக்­க­மு­டி­யாத முத்­தி­ரை­யைப் பதித்­துள்­ளார் என்­றும் புக­ழா­ரம் சூட்­டி­னார் ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளி­த­ழின் ஆசி­ரி­ய­ரும் எஸ்­பி­எச் ஆங்­கில, மலாய், தமிழ் ஊட­கப் பிரி­வின் முதன்மை ஆசி­ரி­ய­ரு­மான திரு வாரன் ஃபெர்னாண்­டஸ்.

மின்­னி­லக்க முறை­யில் இயங்க ஏது­வாக ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் அலு­வ­ல­கம் கடந்த 2019ஆம் ஆண்­டில் புதுப்­பிக்­கப்­பட்­ட­போது, அதன் மறு­வ­டி­வ­மைப்­புக்­குத் தலை­மைத் தாங்­கி­ய­வர் திரு பீட்டர் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!