ஜூரோங்கில் மறுசுழற்சி விற்பனை இயந்திரங்கள்

பிளாஸ்­டிக் போத்தல்கள், அலு மினிய பானக் கலன்­கள் ஆகி­ய­வற்­றைக் கொடுத்து, அவற்­றுக்­குப் பதி­லாக பற்­றுச்­சீட்­டு­களை வழங்­கும் வகை­யில் ஜூரோங்­கில் அதி­க­மான மறு­சு­ழற்சி விற்­பனை இயந்­தி­ரங்­கள் நிறு­வப்­படும்.

ஒவ்­வொரு 40 கலன்­க­ளுக்­கும் அல்­லது 25 போத்­தல்­க­ளுக்­கும் 550 கிராப் வெகு­ம­திப் புள்­ளி­கள் வழங்­கப்­படும். இதைக் கொண்டு கிராப் டாக்சி பய­ணத்­தில் அல்­லது கிராப் உணவு விநி­யோ­கச் சேவை­யில் $1 கழிவு பெற­லாம்.

அத்­து­டன், ஒவ்­வொரு 50 கலன்­க­ளுக்­கும் அல்­லது 32 போத்­தல்­க­ளுக்­கும் ‘ஓம்’ மின்­வி­நி­யோக நிறு­வ­னம் வழங்­கும் $30 மதிப்­பு­டைய பற்­றுச்­சீட்­டு­க­ளைப் பெற­லாம்.

தேசிய சுற்­றுப்­புற வாரி­ய­மும் ‘எஃப் அண்ட் என் ஃபுட்ஸ்’ நிறு­வ­ன­மும் இணைந்து 2019 அக்­டோ­பர் முதல் 2020 ஜூன் வரை தீவு முழு­வ­தும் 50 மறு­சு­ழற்சி விற்­பனை இயந்­தி­ரங்­களை நிறு­வின. அதன் விரி­வாக்­க­மாக ஜூரோங் வட்­டா­ரத்­தில் அத்­த­கைய இயந்­தி­ரங்­கள் வைக்­கப்­ப­ட­வுள்­ளன.

யூஹுவா உணவு நிலை­யத்­தில் நேற்­றுக் காலை நடந்த நிகழ்ச்­சி­யில் பங்­கேற்­றுப் பேசிய நீடித்த நிலைத்­தன்மை, சுற்­றுப்­புற அமைச்­சர் கிரேஸ் ஃபூ, இந்த வெகு­ம­தித் திட்­டம் மக்­களை ஊக்­கு­விக்­கும் என்­றார்.

“இந்­தத் திட்­டம் வெற்­றி­பெ­றும் பட்­சத்­தில், மற்ற வட்­டா­ரங்­க­ளி­லும் இதை மேற்­கொள்ள ஊக்­கு­விக்­க­லாம். அப்­ப­டிச் செய்­வ­தன்­மூ­லம் மறு­சு­ழற்சி வச­தி­களை வீடு­க­ளுக்­கும் கடை­க­ளுக்­கும் அரு­கில் கொண்­டு­செல்ல முடி­யும்,” என்று திரு­வாட்டி ஃபூ சொன்­னார்.

யூஹுவா உணவு நிலை­யம், பைனி­யர் கடைத்­தொ­குதி, சிங்கப்பூர் அறி­வி­யல் நிலை­யம் உள்­ளிட்ட ஐந்து இடங்­களில் மறு­சு­ழற்சி விற்­பனை இயந்­தி­ரங்­கள் நிறு­வப்­படும். மற்ற இரு இடங்­கள் எவை என்­பது பின்­னர் தெரி­விக்­கப்­படும்.

இம்­மாத இறு­திக்­குள் அந்த ஐந்து இயந்­தி­ரங்­களும் நிறு­வப்­பட்­டு­வி­டும் என எதிர்­பார்ப்­ப­தாக கழிவு மேலாண்மை நிறு­வ­ன­மான ‘அல்பா டபிள்யூ அண்ட் எச்’ தெரி­வித்­தது.

ஜூரோங் வட்­டா­ரத்­தில் ஏழு ஆண்­டு­க­ளுக்­குக் கழிவு சேக­ரிக்­கும் ஒப்­பந்­தம் அந்­நி­று­வ­னத்­திற்கு வழங்­கப்­பட்­டுள்­ளது.

“சிங்­கப்­பூ­ரில் மறு­சு­ழற்சி குறித்த விழிப்­பு­ணர்வை ஏற்­படுத்தி, அவ்­வி­கி­தத்தை அதி­கப்­ப­டுத்­து­வதே எங்­க­ளது இலக்கு. அடுத்த சில ஆண்­டு­களில் இங்கு அதி­க­ள­வில் மறு­சு­ழற்சி விற்­பனை இயந்­தி­ரங்­களை நிறுவ விரும்­பு­கி­றோம்,” என்­றார் அந்­நி­று­வ­னத்­தின் தலைமை நிர்­வாகி ஜேக்­கப் லேம்ஸ்­டார்ஃப்.

பானக் கலன்­க­ளைப் போட்ட பிறகு, பற்­றுச்­சீட்டு மதிப்­பைப் பெற இயந்­தி­ரத்­தில் தோன்­றும் விரை­வுத் தக­வல் (கியூ­ஆர்) குறி­யீட்டை ஒரு கைபே­சிச் செயலி கொண்டு வருட வேண்­டும்.

பொருள்­களை முறை­யாக மறு­சு­ழற்சி செய்­யும்­படி மக்­களை ஊக்­கு­விக்க, இயந்­தி­ரங்­களை வைக்க சரி­யான இடங்­க­ளைக் கண்­ட­றிய வேண்­டி­யது முக்­கி­யம் என அமைச்­சர் ஃபூ குறிப்­பிட்­டார்.

“பய­னீட்­டா­ளர்­க­ளுக்­கும் சேக­ரிப்­பா­ளர்­க­ளுக்­கும் தோதான இட­மா­கத் திகழ வேண்­டும்,” என்­றார் திரு­வாட்டி ஃபூ.

கலன்­க­ளி­லும் போத்­தல்­க­ளி­லும் எது­வும் எஞ்­சி­யி­ரா­த­படி, பய­னீட்­டா­ளர்­கள் அவற்­றைச் சுத்­தம் செய்­த­பின் இயந்­தி­ரத்­தி­னுள் போடு­வர் என நம்­பு­வ­தா­க­வும் அவர் சொன்­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!