அமைச்சர் சண்முகம் உறுதி

‘சமய நம்பிக்கைகளின் அடிப்படையில் கொள்கை முடிவுகளை எடுப்பதில்லை’

அமைச்­ச­ர­வை­யும் ஒட்­டு­மொத்த பொதுச் சேவைத் துறை­யும் தங்­க­ளது சமய நம்­பிக்­கை­க­ளின் அடிப்­ப­டை­யில் கொள்கை முடி­வு­களை எடுப்­ப­தில்லை என்று சட்ட, உள்­துறை அமைச்­சர் கா.சண்­மு­கம் தெரி­வித்­துள்­ளார்.

அர­சாங்க உய­ர­தி­கா­ரி­கள் இப்­போ­தும் எதிர்­கா­லத்­தி­லும் சம­யப் பாகு­பாடு காட்­டு­வ­தற்­கான சாத்­தி­யம் குறித்து எதிர்க்­கட்­சித் தலை­வர் பிரித்­தம் சிங் நாடா­ளு­மன்­றத்­தில் நேற்று முன்தினம் கேள்வி எழுப்­பி­னார்.

அதற்­குப் பதி­ல­ளித்த அமைச்­சர் சண்­மு­கம் நடு­நி­லை­யு­ட­னும் நியா­ய­மா­க­வும் நடந்­து­கொள்­வது மிக முக்­கி­யம் என்­றும் இல்­லை­யேல் மக்­க­ளின் நம்­பிக்­கையை அர­சாங்­கம் விரை­வில் இழந்­து­வி­டும் என்­றும் சொன்­னார்.

இப்­போ­தைய அர­சாங்க உய­ர­தி­காரி­கள் எவ­ரே­னும் நாண­யக் குறை­வாக நடந்­து­கொள்­வ­தற்­குச் சான்று இருந்­தால், அது தெரி­விக்­கப்­பட்டு, நட­வ­டிக்கை எடுக்­கப்­பட வேண்­டும் என்று திரு சண்மு­கம் கூறி­னார்.

16 வயது கிறிஸ்­துவ இளை­யர் ஒரு­வர் இரு பள்­ளி­வா­சல்­கள் மீது பயங்­க­ர­வா­தத் தாக்­கு­தல் நடத்­தத் திட்­ட­மி­ருந்­த­தைக் குறிப்­பிட்ட திரு சிங், அர­சாங்­கத்­தின் கொள்கை கண்­டிப்­பாக சம­யச் சார்­பற்­றது எனச் சிங்­கப்­பூ­ரர்­க­ளுக்கு உறு­தி­ய­ளிக்க வேண்­டி­யி­ருக்­க­லாம் என்­றார்.

அர­சாங்­கக் கொள்­கை­களை வகுப்­ப­தில் சம­யப் பற்­றுள்ள மனி­தர்­கள் நுணுக்­க­மான தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தும் அபா­யம் உள்­ளதா என்­றும் பாட்­டா­ளிக் கட்­சித் தலை­வ­ரான திரு சிங் கேட்­டார்.

அதற்­குப் பதி­லு­ரைத்த அமைச்­சர் சண்­மு­கம், “சம­யச் சார்­பின்­மைக் கோட்­பா­டு­களும் சம­யங்­க­ளுக்கு இடை­யிலான நடு­நி­லைத்­தன்­மை­யும் சிங்­கப்­பூ­ரின் கொள்­கை­களை வகுக்­கும் பொன்­னி­ழை­களில் ஒன்­றா­கத் திகழ்­கின்­றன. அதுவே சிங்­கப்­பூர் இன்­றுள்ள நிலைக்கு முக்­கிய கார­ணம்,” என்­றும் குறிப்­பிட்­டார்.

அர­சாங்க உய­ர­தி­கா­ரி­கள் தங்­க­ளது சம­யத்­தின் அடிப்­ப­டை­யில் பார­பட்­சத்­து­டன் நடந்­து­கொள்­ளக்­கூ­டும் எனும்­ப­டி­யாக திரு சிங்­கின் கருத்து தவ­றா­கப் புரிந்­து­கொள்­ளப்படலாம் என்­றும் அவர் சொன்­னார்.

சிங்­கப்­பூ­ரின் இப்­போ­தைய அர­சாங்க உய­ர­தி­கா­ரி­கள் நாண­ய­மா­க­வும் நேர்­மை­யா­க­வும் பொதுச் சேவை­யாற்ற தங்­க­ளது வாழ்க்கை முழு­வ­தை­யும் அர்ப்­ப­ணித்து இருப்­ப­தா­க­வும் திரு சண்­மு­கம் குறிப்­பிட்­டார்.

எல்­லா­ருமே புனி­த­ராக இருப்­பர் என எதிர்­பார்க்க முடி­யாது என ஒப்­புக்­கொண்ட அவர், சில வேளை­களில் ஒரு சிலர் தங்­க­ளது சமய நம்­பிக்கை அல்­லது தனிப்­பட்ட அபிப்­பி­ரா­யத்­தின் அடிப்­ப­டை­யில் சில­வற்­றைப் பார்க்­கக்­கூ­டும் என்­றும் கூறி­னார். அது அமைச்­சர்­கள் முதல் கடை­நிலை அதி­கா­ரி­கள் வரை என எல்­லா­ருக்­கும் பொருந்­தும் என்­றும் அவர் சொன்­னார்.

இதை­ய­டுத்து, ஒரு சில அர­சாங்க உய­ர­தி­கா­ரி­கள் பார­பட்­ச­மாக நடந்­து­கொள்­கின்­ற­னர் என்றோ, அவர்­க­ளின் பணி­யை­யும் மன­உ­று­தி­யை­யும் குறைத்­துச் சொல்­லும் எண்ணமோ இல்லை என்­றும் திரு சிங் தெளி­வு­ப­டுத்­தி­னார்.

சம­யச் சார்­பின்மை மீதான தனது கடப்­பாட்டை அர­சாங்­கம் மறு­உ­று­திப்­படுத்­தச் செய்­வதே தமது நோக்­கம் என்­றும் அவர் சொன்­னார்.

ஓரின, இரு­பா­லின, திரு­நங்கை (LGBT) சமூ­கத்­தி­னர் மீதான பாகு­பாடு குறித்­தும் திரு சிங் கவலை தெரி­வித்­தார். ஆட­வர் ஒரு­வர் அந்­தச் சமூ­கத்­தைக் குறிக்­கும் கொடியை ஓர் உண­வ­கத்­தின் ஊழி­யர்­கள் மீது எறிந்து, அவர்­க­ளைப் பழித்த சம்­ப­வத்தை திரு சிங் சுட்­டிக்­காட்­டி­னார்.

அதை­ய­டுத்து, தங்­க­ளின் நம்­பிக்­கை­கள் எது­வாக இருந்­தா­லும், சிங்­கப்­பூ­ரில் உள்ள அனை­வ­ரும் பாது­காக்­கப்­ப­டு­வர் என்­றும் சம­மாக நடத்­தப்­ப­டு­வர் என்று அமைச்­சர் சண்­மு­கம் உறு­தி­யா­கத் தெரி­வித்­தார்.

எந்த ஒரு பாலி­னச் சமூ­கத்­தை­யும் அல்­லது சம­யத்­தி­ன­ரை­யும் இழி­வா­கப் பேசு­வோர் மீது நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்­றும் அவர் சொன்­னார்.

சமூக நல்­லி­ணக்­கம் குறித்து வெள்ளை அறிக்­கை வெளி­யிட வேண்­டும் என்ற திரு சிங்­கின் யோசனைக்கு, அர­சாங்­கம் அத்­த­கைய நட­வ­டிக்­கையை நிரா­க­ரிப்­ப­தற்கு இல்லை என திரு சண்முகம் தெரி­வித்துள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!