சிங்கப்பூரின் முதல் திறந்த இதய அறுவை சிகிச்சையை செய்தவர் காலமானார்

முதன்­மு­த­லாக சிங்­கப்­பூ­ரில் திறந்த இதய அறுவை சிகிச்­சை­யைச் செய்த டாக்­டர் யோங் நென் கியோங், தமது 93வது வய­தில் நேற்று முன்­தி­னம் கால­மா­னார்.

இவர் பிஸி­னஸ் டைம்ஸ் பத்­திரி­கை­யில் 'வைன்' மது­பா­னம் பற்­றிய வாராந்­திர பத்­தியை 30 ஆண்­டு­க­ளாக எழுதி வந்­தார்.

இத­யத்­தி­லி­ருந்து உட­லுக்கு ரத்­தத்­தைக் கொண்டு சேர்க்­கும் பிர­தான ரத்த நாளத்­தின் சுவ­ரில் வழக்­கத்­திற்கு மாறான வீக்­கம் இருப்­பது ஈராண்­டுக்கு முன்­னர் கண்­ட­றி­யப்­பட்­டது. இருப்­பி­னும், 'என்கே யோங்' என்று செல்­ல­மாக அழைக்­கப்­பட்ட இவர், தமது வயது கார­ணத்­தால் அறுவை சிகிச்சை செய்­து­கொள்­ள­வில்லை.

சிங்­கப்­பூ­ரில் 1965ல் முதல் திறந்த இதய அறுவை சிகிச்­சை­யைச் செய்த பெருமை இவ­ரையே சாரும். சிங்­கப்­பூர் மருத்­து­வக் கழ­கத்­தின் தலை­வ­ரா­க­வும் 1980களில் பணி­யாற்­றி­யுள்­ளார். 1984ஆம் ஆண்­டி­லி­ருந்து 1986ஆம் ஆண்­டு ­வரை தென்­கி­ழக்­கா­சிய நாடு­க­ளுக்­கான மருத்­து­வக் கழ­கத்­தின் தலை­வ­ரா­க­வும் இருந்­தார் இவர்.

'வைன்' மது­பா­னம் சேக­ரிப்­ப­தில் இவர் பேரார்­வம் கொண்­ட­வர்.

டாக்­டர் யோங்­கின் இறு­திச் சடங்கு நாளை நடை­பெ­ற­வுள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!