இளம் செய்தியாளர் விருது: பரிந்துரைக்கப்பட்டதே மகிழ்ச்சி தருகிறது

தலை­சி­றந்த இளம் செய்­தி­யா­ளர் விரு­துக்­குப் பரிந்துரைக்­கப்­பட்டு இறு­திச் சுற்­றுக்கு முன்­னே­றிய இரு­வ­ரில் நானும் ஒரு­வன். கடந்த புதன்­கிழமை நடந்த விருது வழங்­கும் மெய்­நி­கர் நிகழ்ச்­சி­யில் வெற்றி­ யா­ள­ராக ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளி­தழின் செய்­தி­யா­ளர் சூ யுன் டிங் அறி­விக்­கப்­பட்­டார்.

சிங்­கப்­பூர் பிரஸ் ஹோல்­டிங்ஸ் (எஸ்­பி­எச்) நிறு­வ­னத்­தின் ஆங்­கில, மலாய், தமிழ் ஊட­கப் பிரி­வில் உள்ள செய்தித்தாள்கள் அனைத்­தி­லும் பணி­யாற்­றும் நூற்­றுக்­க­ணக்­கான செய்­தி­யா­ளர்­களில் அடை­யா­ளம் காணப்­பட்டு, விரு­துக்­கு பரிந்துரைக்­கப்­பட்ட இரு­வ­ரில் நானும் ஒரு­வன் என்­ப­தில் பெரு­ம­கிழ்ச்சி.

முதன்­மு­றை­யாக இந்த விரு­துக்கு தமிழ் முரசு செய்­தி­யா­ளர் ஒரு­வர் பரிந்துரைக்­கப்­பட்­டி­ருப்­பதை அறிந்து தமிழ் முரசு நிர்­வா­கம், ஊழி­யர்­கள் அனை­வ­ரும் இன்ப அதிர்ச்­சி­ அடைந்தனர்.

பல ஊட­கங்­களில் இருந்­தும் ஏரா­ள­மான செய்­தி­யா­ளர்­கள் களத்­தில் இருந்த பட்­சத்­தில் செய்தி அறிவு, தொடர்­புத் திறன், சுவா­ர­சிய செய்­தித் திட்­டம் தீட்­டு­தல், வர்த்­தக மேம்­பாடு, நிர்­வா­கம், மின்­னி­லக்க முறை மாற்­றம் போன்ற பல்­வேறு அம்­சங்­களில் சென்ற ஆண்டு ஆற்­றிய பங்­க­ளிப்­பு­க­ளைச் சீர்­தூக்கி அதில் முன்­னணி இளம் செய்­தி­யா­ள­ராக உரு­வெ­டுத்­த­தில் பெருமை கொள்­கி­றேன்.

இதில் இரு­மொழி ஆற்­றல் முக்கிய பங்­காற்­றி­யது. ‘வினாக்­களை சுமக்­கும் நினை­வ­கம்’ எனும் எனது செய்­தி­யும் ‘2020க்கான தலை­சிறந்த செய்தி’ எனும் விரு­துக்கு பரிந்­து­ரைக்­கப்­பட்­டது.

தமிழ் முரசு செய்­தி­யா­ளர்­க­ளாக ‘தப்லா!’ ஆங்­கில வார­யி­த­ழுக்­கும் எழு­தும் எங்­க­ளுக்கு அவ்­வப்­போது ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளி­த­ழுக்கு எழு­தும் வாய்ப்­பும் கிட்­டு­கிறது.

சென்ற ஆண்டு ஊட­கத் துறைக்கு முக்­கிய மைல்­கல்­லாக இருந்­தது. உல­கையே ஆட்­டிப்­படைக்­கும் கொவிட்-19 நோய்ப் பர­வல் தலை­ வி­ரித்­தா­டி­யது.

அடுத்­த­தாக சிங்­கப்­பூ­ரின் பொதுத் தேர்­தல். பொதுத் தேர்­தல் செய்­தி­களை சேக­ரித்து வெளி­யிட ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளி­தழ் திட்­டம் வகுத்த நிலை­யில் தமிழ் முர­சி­லி­ருந்து இரு செய்­தி­யா­ளர்­கள் அந்த அணி­யில் சேர அழைப்பு விடுக்­கப்­பட்­டது. அதில் ஒரு­வ­ராக இடம்­பெற்­ற­தில் எனக்கு நல்ல அனு­ப­வம் கிட்­டி­யது.

சிறிய நாளி­த­ழில் தாய்­மொ­ழி­யில் குறிப்­பிட்ட சமூ­கத்­தி­ன­ருக்கு மட்­டும் எழுதி வந்த எங்­க­ளுக்கு பெரிய நாளி­த­ழில் பரந்த அள­வில் அனைத்து சமூ­கத்­தி­ன­ருக்­கும் எழு­தும் அனு­ப­வ­மும் பயிற்­சி­யும் கிடைத்­தது சுவா­ர­சி­ய­மாக இருந்­தது. இன்­னும் அவ்­வப்­போது அந்த நாளி­த­ழுக்கு எழுதி வரு­கி­றேன்.

செய்­தி­யா­ளர் என்ற முறை­யில் செய்தி சேக­ரித்து எழு­து­வது மட்டு­மின்றி நாளி­த­ழின் வளர்ச்­சிக்கு பல திட்­டங்­களை வரைந்து அவற்­றைச் செயல்­ப­டுத்­த­வும் வாய்ப்­பு­கள் ஏரா­ள­மாக உள்­ளன.

அதற்கு ஆசி­ரி­யர் குழு பக்­க­பலமாக இருந்­த­து­டன் சுதந்­தி­ர­மாக நான் இயங்க நம்­பிக்­கை­யும் அளித்­தது.

தமிழ் சார்ந்த துறை­யில் பணி புரிந்­தா­லும் தரத்­தில் குறை­யின்றி பணி­யாற்ற கட­மைப்­பட்­டுள்­ளோம். இல்­லை­யெ­னில் இது­போன்ற பொது தளத்­தில் விரு­துக்கு பரிந்­து­ரைக்­கப்­ப­டு­வதே சிர­ம­மான ஒன்­று­தான் என்று பலர் கூறக் கேட்­டுள்­ளேன்.

செய்­தி­யா­ளர்­க­ளுக்கு வளர்ச்­சிப் பாதையை எஸ்­பி­எச் நிறு­வ­னம் சம­மாக வகுத்­துள்­ளது. திறன்­மிக்­க­வர்­கள் எந்­தத் துறை­யில் இருந்­தா­லும் அவர்­கள் வளர்ச்சி அடைய முடி­யும் என்­பது இதற்­குச் சான்று.

“ஒவ்வோர் ஆண்டும் நடைபெறும் இந்த விருது நிகழ்ச்சியில் அனைத்துப் பிரிவுகளிலும் கடுமையான போட்டியை எதிர்நோக்கு கிறோம். தமிழ் முரசு இறுதிச் சுற்றுக்குப் பரிந்துரைக்கப்படுவதே கொண்டாடப்பட வேண்டிய ஒன்று. சிங்கப்பூர் பிரஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் மற்ற செய்தித்தாள் பிரிவுகளைப்போல அல்லாது தமிழ் முரசு மிகச் சிறிய ஒரு பிரிவு. இங்குள்ள செய்தியாளர்கள் அச்சுப் பிரதியில் மட்டும் கவனம் செலுத்தாமல் இணையப் பக்கத்திலும் செய்திகளை வெளியிட்டு வருகின்றனர். இர்ஷாத்தின் இரு பரிந்துரைகளும் செய்தித் துறையில் அவர் கண்ட வளர்ச்சியை பறைசாற்றுகின்றன.”

- தமிழவேல், செய்தி, மின்னிலக்க ஆசிரியர், தமிழ் முரசு

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!