மின்சக்தி உற்பத்தி ஆற்றலை மேம்படுத்த வழிமுறைகளை ஆராயும் சிங்கப்பூர்

மின்­சார விநி­யோ­கம் தொடர்ந்து நம்­ப­க­மான முறையில் இருப்­பதை உறு­தி­செய்ய சிங்­கப்­பூர் அதன் மின்­சக்தி உற்­பத்தி ஆற்­றலை மேம்­படுத்­து­வ­தற்­கான வழி­மு­றை­களை ஆராய்ந்து வரு­கிறது.

இங்­குள்ள சில மின்­சக்தி உற்­பத்தி ஆலை­கள் அவற்­றின் செயல்­பாட்டு காலத்­தின் இறு­தியை நெருங்­கு­கின்­றன. அதே வேளை­யில் மின்­சார வாக­னங்­கள், தரவு மையங்­கள், வேளாண் தொழில்­நுட்­பம் உள்­ளிட்ட துறை­கள் உரு­வெடுத்து வரு­வ­தால் மின்­சார தேவை தொடர்ந்து அதி­க­ரிக்­கும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

தற்­போது மின்­சா­ரச் சந்­தை­யில் தேவை­யான அள­வுக்­கும் அதி­க­மா­கவே ஆற்­றல் உள்­ளது. மின்­சார தேவை அதி­க­ரிக்­கும் என்­பதை எதிர்­பார்த்து ஏறத்­தாழ 10 ஆண்டு­களுக்கு முன் தனி­யார் நிறு­வனங்கள் முத­லீடு செய்­த­தன் பல­னாக சந்­தை­யில் மின்­சார உற்­பத்தி ஆற்­றல் கூடி­யுள்­ளது. எனி­னும், அப்­போது முன்­னு­ரைக்­கப்­பட்ட மின்­சார தேவை செய­லாக்­கம் காண­வில்லை.

அப்­படி இருந்­தும், 2025ஆம் ஆண்டுவாக்­கில் சிங்­கப்­பூ­ருக்கு புதிய மின்­சக்தி உற்­பத்தி ஆற்­றல் தேவைப்­ப­ட­லாம் என்று எரி­சக்தி சந்தை ஆணை­யம் தெரி­வித்­துள்­ளது. தற்­போ­தைய ஆலை­க­ளின் செயல்­பா­டு­கள் எப்­போது முடி­வுக்கு வரு­கின்­றன என்­ப­தைப் பொறுத்து மின்­சக்தி உற்­பத்தி ஆற்­றல் உள்­ளது என்று ஆணை­யம் சொன்­னது.

சிங்­கப்­பூ­ரின் மின்­சக்தி முறை தொடர்ந்து நம்­ப­க­மாக, நீடித்து நிலைத்­தி­ருக்­கக்­கூ­டி­ய­தாக, கட்டுப்­ப­டி­யாக இருப்­பதை உறு­தி­செய்ய, தான் பல்­வேறு தெரி­வு­களை ஆராய்ந்து வரு­வ­தாக ஆணை­யம் கூறி­யது.

எடுத்­துக்­காட்­டாக, புதிய துரி­தச் செயல்­பாட்டு உற்­பத்தி ஆற்­றலை உரு­வாக்­கு­வ­தன் தொடர்­பில் ஆலோ­ச­னைச் சேவைக்­காக இந்த மாதத் தொடக்­கத்­தில் ஆணை­யம் குத்­த­கைக்கு அழைப்பு விடுத்­தது. இந்த உற்­பத்தி ஆற்­றல், தேவை ஏற்­ப­டும்­போது பயன்­ப­டுத்­தப்­ப­ட­லாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!