நண்பர்களுடன் சேர்ந்து கால்வாயில் நீந்தச் சென்ற 21 வயது இளையர் நீரில் மூழ்கினார்

தமது நண்­பர்­க­ளு­டன் சேர்ந்து சிராங்­கூ­னில் உள்ள கால்­வா­யில் நீச்­சல் அடிக்­கச் சென்ற 21 வயது ஆட­வர் ஒரு­வர் நேற்று முன்­தி­னம் காலை நீரில் மூழ்­கி­னார்.

அன்று காலை 7 மணி­ய­ள­வில் இந்­தச் சம்­ப­வம் குறித்து போலிஸ் அந்த இளை­ய­ரின் தந்­தைக்­குத் தக­வல் அளித்­த­தைத் தொடர்ந்து அவர் சம்­பவ இடத்­திற்கு விரைந்­த­தாக சீன நாளி­த­ழான வான்­பாவ் வெளி­யிட்ட செய்­தி­யில் தெரி­வித்­தது.

இந்­தச் சம்­ப­வம் தமக்கு அதிர்ச்சி அளித்­துள்­ள­தா­கக் கூறிய அவர், அன்று காலை தமது மகன் நீச்­சல் அடிக்­கச் சென்­றது தமக்­குத் தெரி­ய­வில்லை என்­றார்.

தமது மகன் நீரில் காணா­மல் போன­தைத் தொடர்ந்து அவ­ரது நண்­பர்­கள் போலிசை அழைத்­த­தாக அவர் கூறி­னார். சம்­ப­வம் நிகழ்ந்­த­போது தமது மகன் நீரில் தத்­த­ளிப்­ப­தைத் தாங்­கள் காண­வும் இல்லை, உதவி கேட்டு அல­றும் சத்­தமும் இல்லை என்று மக­னின் நண்­பர்­கள் கூறி­ய­தாக அவ­ரது தந்தை சொன்­னார்.

அப்­பர் சிராங்­கூன் சாலை, புவாங்­கோக் டிரைவ் சந்­திப்­பின் அடி­யில் உள்ள கால்­வா­யில் நேற்று முன்­தி­னம் காலை 5.45 மணி­ய­ள­வில் உதவி கேட்டு தனக்கு அழைப்பு வந்­த­தாக சிங்­கப்­பூர் குடி­மைத் தற்­காப்­புப் படை தெரி­வித்­தது.

சம்­பவ இடத்­திற்கு விரைந்த அதி­கா­ரி­கள் அந்த இளை­ய­ரைத் தேடி, மீட்­கும் முயற்­சி­யில் ஈடு­பட்­ட­னர். குடி­மைத் தற்­காப்­புப் படை­யின் பேரி­டர் உதவி மீட்­புக் குழு­வைச் சேர்ந்த இரு முக்­கு­ளிப்­பா­ளர்­கள் கால்­வாய் நீரில் அந்த இளை­ய­ரைத் தேடி­னர்.

தேடு­தல் பணிக்­காக தொழில்­நுட்ப வச­தி­யு­டன் கூடிய சாத­னம் ஒன்­றும் நீருக்கு அடி­யில் பயன்­படுத்­தப்­பட்­டது.

இறு­தி­யில் கரை­யி­லி­ருந்து 6 மீட்­டர் தொலை­வில் 2 மீட்­டர் ஆழத்­தி­லி­ருந்து முக்­கு­ளிப்­பா­ளர்­கள் சட­லம் ஒன்றை மீட்­ட­னர். குடி­மைத் தற்­காப்­புப் படை­யின் மருத்­துவ அதிகாரி ஒரு­வர், அந்த இளை­யர் சம்­பவ இடத்­தி­லேயே இறந்­து­விட்­டதை உறு­திப்­ப­டுத்­தி­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!