விதிமீறல்: ஆறு உணவு, பான நிலையங்களை மூட உத்தரவு

பாது­காப்பு நிர்­வாக நட­வ­டிக்­கை­களை மீறி­ய­தற்­காக ஆறு உணவு, பான நிலை­யங்­களை மூட உத்­த­ர­வி­டப்­பட்­டுள்­ள­தா­க­வும் மூன்று உணவு, பான நிலை­யங்­க­ளுக்கு அப­ரா­தம் விதிக்­கப்­பட்­டுள்­ள­தா­க­வும் நீடித்த நிலைத்­தன்மை, சுற்­றுப்­புற அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

ஓரி­யன்­டல் பிளா­சா­வில் உள்ள 'கிளப் மாவோ பை பார்­கோட்' எனும் உண­வ­கத்தை இரண்­டாம் முறை­யாக மூடும்­படி உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டுள்­ளது.

தன் ஊழி­யர்­களை வெவ்­வேறு மேசை­களில் அமர்ந்­தி­ருந்த வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு சேவை­யாற்ற அனு­மதித்­த­தன் மூலம் உட­ல­ள­விலான கலந்­து­ற­வா­டல்­களை அந்த உணவகம் குறைக்­கத் தவ­றி­விட்­ட­தா­கக் கூறப்­பட்­டது.

தாய்­லாந்து உணவு வகை­களை விற்­கும் அவ்­வு­ண­வ­கம் 30 நாள்­களுக்கு, அதா­வது இம்­மா­தம் 20ஆம் தேதி­யி­லி­ருந்து ஏப்­ரல் 18ஆம் தேதி வரை மூடப்­பட்­டி­ருக்­கும்.

அத்­து­டன், அந்த உண­வ­கத்­தில் இன்­னொரு குழு­வைச் சேர்ந்­த­வர்­க­ளு­டன் கலந்­து­ற­வா­டி­ய­தா­லும் ஒரு மீட்­டர் இடை­வெ­ளி­யைக் கடைப்­பி­டிக்­கா­த­தா­லும் அங்கு உண­வ­ருந்த வந்த மூவ­ருக்­கு அப­ரா­தம் விதிக்­கப்­பட்­டது.

ஓரி­யன்­டல் பிளா­சா­வில் இருக்­கும் 'கிளப் பப்­பரி'யைப் பத்து நாள்­களுக்கு, அதா­வது இம்­மா­தம் 20ஆம் தேதி­யில் இருந்து நேற்று வரை மூட உத்­த­ர­வி­டப்­பட்டது.

அது­போல, 'பூகிஸ் கியூப்'பில் டி லக்ஸி, போட் கீயில் 'கிஸ் பிஸ்ட்ரோ', ஜூ சியாட் சாலை­யில் 'எஸ்கே கர­வோக்கே பப்', பீச் ரோட்­டில் 'ஸ்டீ­மோவ் உண­வ­கம்' ஆகிய நான்கு உணவு, பான நிலை­யங்­களும் இம்­மா­தம் 21ஆம் தேதி முதல் இன்று வரை பத்து நாள்­களுக்கு மூடி­யி­ருக்­கும்­படி ஆணை பிறப்­பிக்­கப்­பட்­டது.

பாது­காப்பு நிர்­வாக நட­வ­டிக்­கை­களை மீண்­டும் மீறி­ய­தற்­காக கார­ணத்­திற்­காக 'டெஸ்­டினி ஜப்­பா­னீஸ் கேடிவி பப்', 'சைனா­வுன் சீஃபுட்' உண­வ­கம் ஆகி­ய­வற்­றுக்­குத் தலா $2,000 அப­ரா­தம் விதிக்­கப்­பட்­டது. அது­போல, அலங்­கார் உண­வ­கத்­திற்கு $1,000 அப­ரா­தம் விதிக்­கப்­பட்­டது.

"தவ­றி­ழைக்­கும் நடத்­து­நர்­கள், தனி­ந­பர்­கள் மீது கடு­மை­யான அம­லாக்க நட­வ­டிக்­கை­கள் எடுக்­கப்­படும்," என்று அமைச்சு எச்­ச­ரித்து இருக்­கிறது.

உணவு, பான நிலை­யங்­கள், பூங்­காக்­கள், கடைத்­தொ­கு­தி­கள் ஆகிய இடங்­களில் அம­லாக்­கச் சோத­னை­கள் தொடர்ந்து அதி­க­ரிக்­கப்­படும் எனத் தெரி­விக்­கப்­பட்டது.

"தடுப்­பூ­சி போடப்பட்டு வந்­தா­லும், அதி­க­மான நட­வ­டிக்­கை­கள் மீண்­டும் இடம்­பெ­றத் தொடங்­கி­யி­ருப்­ப­தால் கொவிட்-19 தொற்று அபா­யம் இன்­னும் நீடிக்­கிறது," என்று அமைச்சு குறிப்­பிட்­டது.

அத­னால், குறிப்­பாக உணவு, பான நிலை­யங்­களில் வாடிக்­கை­யா­ளர்­கள் நீண்ட நேரத்­திற்கு முகக்­க­வ­சத்தை அகற்­றி­யி­ருப்பர் என்­ப­தால் அவ்­வி­டங்­களில் பாது­காப்பு இடை­வெ­ளி­யை­யும் பாது­காப்பு நிர்­வாக நட­வ­டிக்­கை­க­ளை­யும் அமல்படுத்தி, கொரோனா தொற்று அபா­யத்தை மட்­டுப்­ப­டுத்து­வது முக்­கி­யம் என்­றும் அமைச்சு தெரி­வித்து இருக்­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!