மாண்டரின் ஆர்ச்சர்ட் ஹோட்டல் கொவிட்-19 தொற்றுக் குழுமம் தொடர்பில் இன்னும் விலகாத மர்மம்

கடந்த ஆண்டு இறு­தி­யில் மாண்­டரின் ஆர்ச்­சர்ட் சிங்­கப்­பூர் ஹோட்­ட­லில் தங்­கி­யி­ருந்த 13 பேருக்கு கொவிட்-19 தொற்று உறு­திப்­ப­டுத்­தப்­பட, அந்த ஹோட்­டல் ஒரு கிரு­மித்­தொற்­றுக் குழு­ம­ம­மாக உரு­வெடுத்­தது.

அது நிகழ்ந்து மூன்று மாதங்­களா­கி­விட்­ட­போ­தும், அங்கு கொரோனா தொற்று பர­வி­ய­தற்­கான கார­ணம் இன்­னும் கண்­டறியப்படவில்லை.

பிரிட்­ட­னில் இருந்து வந்த தம்­பதி­யரைத் தவிர, அந்­தக் கிரு­மித்­தொற்­றுக் குழு­மத்­தைச் சேர்ந்த மற்ற எவ­ரும் ஒரு­வரை ஒரு­வர் அறிந்­தி­ருக்­க­வில்லை.

பஹ்­ரேன், கனடா, இந்­தோ­னீசியா, மியன்­மார், நெதர்­லாந்து, பிலிப்­பீன்ஸ், தென்­கொ­ரியா, ஐக்­கிய அர­புச் சிற்­ற­ர­சு­கள், பிரிட்­டன், அமெ­ரிக்கா எனப் பத்து வெவ்­வேறு இடங்­களில் இருந்து அவர்­கள் சிங்கப்­பூ­ருக்கு வந்­த­னர்.

ஆயி­னும், எப்­ப­டியோ அவர்­கள் அனை­வ­ரும் ஒரே கொவிட்-19 தொற்­றுக் குழு­மத்­தில் இடம்­பி­டித்து­விட்­ட­னர். அவர்­க­ளைத் தொற்­றிய கிரு­மி­யின் மர­பணு வரி­சை­யும் ஒத்தி­ருந்­த­தும் வியப்­ப­ளிப்­ப­தாக உள்­ளது.

சிங்­கப்­பூர் வந்­தி­றங்­கி­ய­தும் மேற்­கொள்­ளப்­பட்ட பரி­சோ­த­னை­யில் அவர்­களில் எவ­ரி­டத்­தி­லும் கிரு­மித்­தொற்று கண்­ட­றி­யப்­ப­ட­வில்லை. அவர்­கள் அனை­வ­ரும் அந்த ஹோட்­ட­லில் இரு­வார காலத்­திற்குத் தனி­மைப்­ப­டுத்­தப்­பட்­ட­னர்.

வெளி­நாட்­டில் இருந்து வந்த ஒரு­வர் மூலம் மற்ற 12 பேரை­யும் கிருமி தொற்­றி­யி­ருக்­க­லாம் எனத் தோன்­று­கிறது.

ஏனெ­னில், அந்த ஹோட்­டல் ஊழி­யர்­களோ அல்­லது கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்ட மற்ற விருந்­தி­னர்­களோ மர­ப­ணு ரீ­தி­யாக ஒத்த கிரு­மி­யைக் கொண்­டி­ருக்­க­வில்லை.

முதற்­கட்ட விசா­ர­ணையை அடுத்து, கடந்த டிசம்­பர் 19ஆம் தேதி, "மாண்­ட­ரின் ஆர்ச்­சர்ட் ஹோட்­ட­லில் கிரு­மிப் பர­வல் நிகழ்ந்­தி­ருக்­க­லாம் என்­பதை ஒதுக்­கி­விட முடி­யாது," என்று சுகா­தார அமைச்சு தெரி­வித்­தது.

ஆனால், அது எப்­படி எனும் கேள்வி இன்­னும் விடை காணப்­படாத ஒன்­றாக நீடிக்­கிறது.

விசா­ர­ணைக்கு உத­வும் நோக்­கில் கட்­டட, கட்­டு­மான ஆணை­யம் மற்­றும் தேசிய சுற்­றுப்­புற வாரிய நிபு­ணர்­க­ளைச் சுகா­தார அமைச்சு அழைத்­தி­ருந்­தது. ஹோட்­டல்­களை மேற்­பார்­வை­யி­டு­வ­தால் சிங்­கப்­பூர் பய­ணத்­து­றைக் கழ­க­மும் அதில் பங்­கெ­டுத்­தது.

மற்ற விருந்­தி­னர்­கள் அனை­வரும் அந்த ஹோட்­ட­லில் இருந்து வெளி­யேற்­றப்­பட்­ட­னர். விசா­ர­ணை­யின்­போது அந்த ஹோட்­டல் தனது கத­வு­க­ளை­யும் மூடி­யது.

ஹோட்­ட­லின் கிட்­டத்­தட்ட 500 ஊழி­யர்­க­ளுக்கு கொவிட்-19 பரி­சோ­தனை மேற்­கொள்­ளப்­பட்­டது. மனி­தத் தொடர்பு, காற்­றோட்ட அமைப்­பில் குறை­பாடு போன்­றவை கார­ண­மாக அங்கு கொரோனா பர­வல் நிகழ்ந்­ததா என இரு­ப­துக்கு மேற்­பட்ட அதி­கா­ரி­கள் கிட்­டத்­தட்ட இரு­வார காலம் அங்கு ஆராய்ந்­தனர்.

விருந்­தி­னர் அனு­ம­திப்பு நடை­முறை, இல்­லத் தனிமை உத்­த­ர­வில் இருந்­தோ­ருக்கு கொரோனா பரி­சோ­தனை நடத்­தப்­பட்ட விதம், ஹோட்­ட­லின் காற்­றோட்ட அமைப்பு ஆகிய மூன்று அம்­சங்­களில் மேம்­பாடு காணப்­பட வேண்­டும் என அதி­கா­ரி­கள் கண்­ட­றிந்­த­போ­தும், அங்கு கொரோனா பர­வி­ய­தற்கு உறு­தி­யான கார­ணத்தை கண்­டு­பி­டிக்க முடி­ய­வில்லை.

பாதிக்­கப்­பட்ட 13 பேரும் ஒரே நாளில், ஒரே நேரத்­தில் அந்த ஹோட்­ட­லுக்கு வர­வில்லை. அக்­டோ­பர் 22-30 தேதி­க­ளுக்கு இடையே, வெவ்­வேறு நாள்­களில், வெவ்­வேறு நேரத்­தில் அவர்­கள் அங்கு வந்­த­னர். அவர்­கள் அனை­வரும் ஒரே தளத்­தி­லும் தங்­கி­ இருக்­க­வில்லை. எவ­ரும் இல்­லத் தனிமை உத்­த­ரவை மீறி, அங்­கும் இங்­குமாக அலைய­வும் இல்லை.

கொரோனா பரி­சோ­த­னைக்­காக ஹோட்­ட­லின் ஒரு மையப் பகு­திக்கு அவர்­கள் சென்­றி­ருந்­த­போது கிருமி தொற்­றி­யி­ருக்க வாய்ப்­புள்­ளது எனக் கூறப்­ப­டு­கிறது.

இத­னி­டையே, இல்­லத் தனிமை உத்­த­ரவை நிறை­வேற்­றும் இடங்­களில் காற்­றோட்ட வசதி குறித்து கடும் தணிக்கை செய்­வது தொடர்­பில் கட்­டட, கட்­டு­மான ஆணை­யம் மற்­றும் தேசிய சுற்­றுப்­புற வாரி­யத்­து­டன் இணைந்து பணி­யாற்றி வரு­வ­தாக சிங்­கப்­பூர் பய­ணத்­துறைக் கழ­கத்­தின் இல்­லத் தனி­மைச் செயல்­பா­டு­கள் பிரி­வின் இயக்­கு­நர் ஜெரல்­டின் இயோ தெரி­வித்­த­தாக ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தி கூறி­யது.

அதனுடன், இங்­குள்ள 70க்கு மேற்­பட்ட இல்­லத் தனிமை உத்­த­ரவு நிறை­வேற்­றும் இடங்­களும் கட்­டா­ய­மாக தொற்­றுத் தடுப்பு நட­வடிக்­கை­க­ளைப் பின்­பற்­று­வ­தைப் பய­ணத்­து­றைக் கழ­கம் உறு­திப்­படுத்தி வரு­வ­தா­க­வும் அவர் சொன்­னார்.

"விதி­மு­றை­க­ளுக்கு இணங்கி நடக்­காத வர்த்­த­கங்­கள், தனி­ந­பர்­கள் மீது அம­லாக்க நட­வ­டிக்கை எடுக்­கத் தயங்­க­மாட்­டோம்," என்­றும் அவர் எச்­ச­ரித்­துள்­ளார்.

விதி­மீ­றல் எது­வும் இடம்­பெ­றா­த­தால் மாண்­ட­ரின் ஆர்ச்­சர்ட் ஹோட்­டல் மீது எந்த நட­வ­டிக்­கை­யும் எடுக்­கப்­ப­ட­வில்லை.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!