குடியேறி ஊழியர் தீர்வை: முதலாளிகளுக்குச் சலுகை

எஸ் பாஸ், ஒர்க்பர்மிட் ஊழியரின் தனிமை காலத்துக்கான தீர்வை செப்டம்பர் வரை ரத்து

எஸ் பாஸ் ஊழியர்கள், குடியேறி பணிப்பெண்கள் உள்ளிட்ட வேலை அனுமதிச்சீட்டு (ஒர்க் பர்மிட்) ஊழியர்கள் ஆகியோருக்கான தீர்வை, அவர்கள் தனிமை உத்தரவை நிறைவேற்றும் நாட்களுக்குரிய அளவுக்குத் தள்ளுபடி செய்யப்படும் என்று மனிதவள அமைச்சு நேற்று அறிவித்தது.

இந்தச் சலுகை வரும் செப்டம்பர் வரை கிடைக்கும். சமூகத்தில் கொவிட்-19 கிருமித்தொற்றைத் தடுக்க அரசாங்கம் புதிய நட வடிக்கைகளை அமலாக்குகிறது.

இதனால் முதலாளிகளுக்குச் செலவு அதிகரிக்கும். அதைச் சமாளிக்க அவர்களுக்கு உதவும் வகையில் இந்தச் சலுகை வழங்கப்படுவதாக அமைச்சு அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.

மார்ச் முதல் செப்டம்பர் வரை தனிமை உத்தரவை நிறைவேற்றும் ஊழியர்களின் முதலாளிகள், ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நாட்களுக்குத் தீர்வையைச் செலுத்த வேண்டாம் என்று அமைச்சு குறிப்பிட்டது.

ஜனவரி, பிப்ரவரி மாதங்களுக்கு இந்தத் தீர்வையைச் செலுத்தி இருக்கும் முதலாளிகளைப் பொறுத்தவரை, சரியாக்கங்கள் மூலம் இந்த தள்ளுபடி கொடுக்கப்படும். அவர்கள் ஏற்கெனவே செலுத்தி இருக்கும் தீர்வைத் தொகை ஜூன் மாதம் அவர்கள் செலுத்த வேண்டிய தீர்வையில் சரி செய்யப்படும்.

ஜூன் தீர்வையை முதலாளிகள் ஜூலையில் செலுத்த வேண்டும்.

சிங்கப்பூரில் சமூக அளவில் கொவிட்-19 தொற்று ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையில் அரசாங்கம் 2021 ஜனவரி முதலே கூடுதலான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்துள்ளது.

பொது நலனைக் கருத்தில் கொண்டு, அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைகளுக்கு முதலாளிகள் ஒத்துழைத்து வந்து உள்ளனர்.

இருந்தாலும் இதனால் தங்களுக்குச் செலவு கூடிவிட்டதாக சில முதலாளிகள் தெரிவித்துள்ளதாக அமைச்சு குறிப்பிட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!