ஆகஸ்ட் மாத இறுதிக்குள் 600 மின்னூட்டுக் கூடங்கள்

மின்­சார வாக­னங்­க­ளுக்­குத் தேவை­யான மின்­னூட்டுக் கூடங்களை அமைக்­கும் நிறு­வ­னங்­க­ளைத் தேர்ந்­தெ­டுக்க பொது ஏலக்­குத்­தகை நடத்­தப்­ப­டு­கிறது.

சிங்­கப்­பூ­ரெங்­கும் ஏறத்­தாழ 200 பொது வாகன நிறுத்­து­மி­டங்­களில் மின்­னூட்டுக் கூடங்கள் அமைக்­கப்­படும். அதற்­காக நடத்­தப்­படும் ஏலக்­குத்­தகை 19 விண்­ணப்­ப­

தா­ரர்­களை ஈர்த்­துள்­ளது.

சிங்­கப்­பூ­ரில் மின்­சார வாக­னங்­களை ஓட்ட அர­சாங்­கம் ஊக்­கு­விக்­கிறது. இதற்­காக அர­சாங்­கம் முன்­வைக்­கும் திட்­டங்­கள் மூலம் லாபம் ஈட்ட நிறு­வ­னங்­கள் ஆர்­வம் காட்­டு­வதை சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்ள ஏலக்­குத்­தகை விண்­ணப்­பங்­க­ளின் எண்­ணிக்கை காட்­டு­வ­தாக தெரி­விக்­கப்­பட்­டது.

ஏலக்­குத்­த­கையை நகர மறு­சீ­ர­மைப்பு ஆணை­யம் நடத்­து­கிறது. விண்­ணப்­பங்­களை சமர்ப்­பிப்­ப­தற்­கான இறுதி நாள் நேற்று முன்

­தி­னத்­து­டன் முடிந்­தது.

மின்­னூட்டுக் கூடங்களை அமைக்க போக்­கு­வ­ரத்துக் குழு­ம­மான கம்­ஃபர்ட்­டெல்­குரோ, எண்­ணெய் நிறு­வ­ன­மான ஷெல்,

பய­னீட்­டுக் குழு­மமான எஸ்பி மொபி­லிட்டி, அர­சாங்­கத்­து­டன் தொடர்­பு­டைய எஸ்டி எஞ்­சி­னி­ய­ரிங் போன்ற பிர­சித்தி பெற்று நிறு­வ­னங்­கள் ஆர்­வம் தெரி­வித்து ஏலக்­குத்­தகை விண்­ணப்­பங்­க­ளைச் சமர்ப்­பித்­தி­ருப்­ப­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

தேர்ந்­தெ­டுக்­கப்­படும் நிறு­வ­னம் வரும் ஆகஸ்ட் மாதம் 31ஆம் தேதி தொடங்கி அடுத்த 12 ஆண்­டு­க­ளுக்கு 600க்கும் மேற்­பட்ட மின்­னூட்­டுக் கூடங்­களை அமைத்து, இயக்கி, பரா­ம­ரிக்க வேண்­டும்.

அது­மட்­டு­மல்­லாது, மின்­சார வாக­னங்­க­ளுக்­காக ஒதுக்­கப்­பட்­டுள்ள வாகன நிறுத்­து­மி­டங்­களில் மற்ற வகை வாக­னங்­கள் நிறுத்தி வைக்­கப்­பட்­டி­ருந்­தால் அவற்­றுக்கு எதி­ரான நட­வ­டிக்கை எடுப்­ப­தும் தேர்ந்­தெ­டுக்­கப்­படும் நிறு­வ­னத்­தின் பொறுப்­பா­கும்.

2030ஆம் ஆண்­டுக்­குள் மின்­சார வாக­னங்­க­ளுக்­காக 60,000 மின்­னூட்­டுக் கூடங்­களை அமைக்க அர­சாங்­கம் கடப்­பாடு கொண்­டுள்­ளது.

அந்­தக் கட்­ட­மைப்­பின் ஒரு பகு­தி­யாக இந்த 600 மின்­னூட்­டுக் கூடங்­களும் அமை­யும்.

வீட­மைப்பு வளர்ச்­சிக் கழக வாகன நிறுத்­து­மி­டங்­களில் 7 கிலோ­வாட்ஸ் மின்­னூட்­டுக் கூடங்­களும் நகர மறு­சீ­ர­மைப்பு ஆணை­யம், தேசிய பூங்­காக் கழ­கம், ஜேடிசி போன்ற அமைப்புகளால் இயக்­கப்­படும் மற்ற பொது வாகன நிறுத்­து­மி­டங்­களில் குறைந்­தது 22 கிலோ­வாட்ஸ் மின்­னூட்­டுக் கூடங்களும் பொருத்­தப்­படும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!