‘பதவியில்தான் மாற்றமே தவிர செயல்பாட்டில் அல்ல’

சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியின் தலைமைச் செயலாளர் பதவியிலிருந்து விலகியுள்ள அக்கட்சியின் நிறுவனரான டாக்டர் டான் செங் போக், அதன் தலைவர் பொறுப்பை ஏற்றுள்ளார்.

இந்த மாற்றம் பதவியில்தான் தவிர தமது செயல்பாட்டில் அல்ல என்றும் தமது புதிய பொறுப்பில் தாம் வர்த்தகங்கள், குலமரபுச் சங்கங்கள் உட்பட இன்னும் அதிகமான சிங்கப்பூரர்களை எட்ட இருப்பதாகவும் கட்சியின் அடித்தள முயற்சிகளுக்கு வலு சேர்ப்பது, கட்சிக்குப் புதிய திறனாளர்களைச் சேர்ப்பது ஆகியவற்றில் கவனம் செலுத்தவிருப்பதாகவும் அவர் கூறினார்.

சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி நேற்று நடத்திய செய்தியாளர் கூட்டத்தில் பேசிய டாக்டர் டான், கட்சியின் புதிய தலைமைச் செயலாளராகத் தேர்வு பெற்றிருக்கும் முன்னாள் ஆகாயப் படை டெஃப்டினென்ட் கர்னல் பிரான்சிஸ் யுவென் கடந்த இரண்டு ஆண்டுகளாகக் கட்சி அடைந்துள்ள சாதனைகளை முன்னெடுத்துச் செல்வார் என்றார்.

"நடக்கப் பழகும் குழந்தை போல, கட்சி புதிதாக இருந்த காலத்தில் எனது நேரடிக் கருத்துகள் மிக முக்கியமானதாக இருந்தன. இப்போது கட்சி வளர்ந்து, முதிர்ச்சி அடைந்துள்ளது. புதிதாகத் தேர்வு பெற்றுள்ள குழு தங்கள் பலத்தையும் ஆற்றல்களையும் பயன்படுத்திக் கட்சியை மேலும் முன்னுக்குக் கொண்டு வர வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும்.

"இனிமேல் கட்சியின் முன்னிலையிலிருந்து நான் வழிநடத்தப் போவதில்லை. மாறாக, நான் மற்ற வழிகளில் கட்சிக்குப் பங்காற்றவிருக்கிறேன்," என்று விவரித்தார்.

முன்பு கட்சியின் துணைத் தலைமைச் செயலாளராக இருந்து 71 வயது திரு யுவென், கடந்த ஆண்டு பொதுத் தேர்தலில் சுவா சூ காங் குழுத் தொகுதியில் போட்டியிட்டார்.

"சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியை சிங்கப்பூரர்கள் விரும்பும் கட்சியாக உருமாற்றவதே எனது குறிக்கோள்.

"எதிர்காலத்தில் ஒரு குறிப்பிட்ட கட்சியின் மீதான கோபத்தை வெளிக்காட்ட எங்கள் கட்சிக்கு மக்கள் வாக்களித்து தேர்ந்தெடுக்கப்படும் நிலையை நாங்கள் விரும்பவில்லை.

"மாறாக, தங்கள் விருப்பங்களுக்குக் குரல் எழுப்பும் பிரதிநிதியாகவும் தங்களுக்காகப் போராடும் ஒரு கட்சியாகவும் மக்கள் சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியைப் பார்க்க வேண்டும்," என்றும் திரு யுவென் தெரிவித்தார்.

வரும் ஆண்டுகளில் தங்கள் கட்சி மூன்று முனை அணுகுமுறையைப் பின்பற்றும் என்று கூறிய திரு யுவென், சிங்கப்பூரர்களின் விருப்பங்களைப் பிரிதிநிதிக்கும் அடித்தள முயற்சிகளைத் தொடர்வது, கட்சித் தலைமையகத்தில் பணிகளை ஒருங்கிணைக்க வலுவான குழுவை அமைப்பது, தனது தொகுதியில்லா நாடாளுமன்ற உறுப்பினர்களான திரு லியோங் மன் வாய், திருவாட்டி ஹெசல் புவா ஆகியோர் மூலம் கட்சியின் நிலைப்பாட்டை நாடாளுமன்றத்தில் எடுத்துரைப்பது ஆகியவையே அந்த மூன்று முனை அணுகுமுறை என்று விளக்கினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!