பாதசாரி முன்னோட்டத் திட்டத்திற்கு வரவேற்பு

வாகன நெரி­ச­லைக் குறைக்க வேண்­டும் என்ற சிங்­கப்­பூ­ரின் இலக்கு, பாத­சாரி முன்­னோட்­டத் திட்­டம் உரு­வா­கக் கார­ண­மா­னது. பிப்­ர­வரி 20 முதல் ஆறு மாதக் காலத்­திற்கு நிலப் போக்­கு­வ­ரத்து ஆணை­யம், இத்­திட்­டத்தை மேற்­கொண்டு வரு­கிறது.

இதன்­படி, உட்­லண்ட்ஸ் டிரைவ் 63க்கும் டிரைவ் 71க்கும் இடையே உட்­லண்ட்ஸ் ரிங் ரோட்­டின் ஒரு பகு­தி­யில் தடுப்­பு­கள் போடப்­பட்டு உள்­ளன. பாதி­சா­ரி­க­ளுக்­கும் மிதி­வண்டி ஓட்­டு­நர்­க­ளுக்­கும் சாலை­யின் ஒரு தடம் ஒதுக்­கப்­பட்­டுள்­ளது. திட்­டத்­திற்­குத் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்ட மற்­றொரு சாலை, புக்­கிட் ஹோ சுவீ அரு­கில் உள்ள ஹேவ்­லாக் ரோடு.

இத்­திட்­டம், ஆக்­க­பூர்­வ­மான ஒரு படி என்று போக்­கு­வ­ரத்து நிபு­ணர்­கள் தெரி­வித்­துள்­ள­னர்.

இருப்­பி­னும் இரண்டு குடி­யி­ருப்பு வட்­டா­ரங்­களில் மேற்­கொள்­ளப்­படும் இந்த பாத­சாரி முன்­னோட்­டத் திட்­டம் குறித்து மக்­க­ளி­டையே வெவ்­வேறு கருத்­து­கள் நிலவி வரு­கின்­றன.

மூத்த குடி­மக்­கள் அதி­கம் வசிக்­கும் வட்­டா­ரம் என்­ப­தால் இத்­திட்­டத்­திற்­காக அட்­மிரல்டி பகு­தியை அர­சாங்­கம் தேர்ந்­தெ­டுத்­தது என்று செம்­ப­வாங் குழுத்­தொ­குதி எம்பி மரி­யாம் ஜாஃபர் கூறி­னார்.

குடி­யி­ருப்­பா­ளர்­களும் பள்ளி மாண­வர்­களும் நடப்­ப­தற்­கும் மிதி­வண்டி ஓட்­ட­வும் தோதாக இருக்க, உட்­லண்ட்ஸ் பகு­தி­யைத் தேர்ந்­தெடுத்­த­தாக ஆணை­யம் தெரி­வித்­தது. இத­னால் கம்­போங் அட்­மி­ரல்டி, அட்­மி­ரல்டி எம்­ஆர்டி நிலை­யம் மற்­றும் அரு­கில் அமைந்­துள்ள இடங்­க­ளுக்­குச் செல்ல, கூடு­தல் பாது­காப்­பும் வச­தி­யும் ஏற்­பட்­டுள்­ள­தாக கூறப்­ப­டு­கிறது.

முன்­னோட்­டத் திட்­டத்­தால் போக்­கு­வ­ரத்து நில­வ­ரத்­தில் குறிப்­பி­டத்­தக்க தாக்­கம் ஏதும் ஏற்­ப­ட­வில்லை என்­றும் ஆணை­யம் கூறி­யது.

முன்­னோட்­டத் திட்­டம் குறித்து இது­வரை 200 உட்­லண்ட்ஸ் பகுதி­வா­சி­கள் தங்­க­ளின் நிலைப்­பாட்டை ஆணை­யத்­தி­டம் தெரி­வித்து வந்­துள்­ள­தா­க­வும் அவர்­களில் பெரும்­பா­லா­னோர் ஆத­ரித்­துள்­ள­தா­க­வும் ஆணை­யம் சொன்­னது.

இதே­போல் பெரு­வா­ரி­யான ஆத­ரவு, ஹேவ்­லாக் ரோட்­டில் நடந்து வரும் முன்­னோட்­டத் திட்­டத்­திற்­கும் இருப்­ப­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

ஏற்­கெ­னவே உள்ள நடை­பா­தை­கள் உச்ச நேரங்­க­ளின்­போது பாத­சா­ரி­க­ளுக்­குப் போதா­மல் இருப்­ப­தால், முன்­னோட்­டத் திட்­டத்­திற்கு இக்­கு­றிப்­பிட்ட சாலைப் பகுதி தேர்ந்­தெ­டுக்­கப்­பட்­ட­தா­கக் கூறப்­பட்­டது. சமூ­கத்­தி­ன­ரின் ஆத­ரவு பல­மாக இருந்­தால் முன்­னோட்­டத் திட்­டம் முன்­ன­தா­கவே நிரந்­த­ர­மாக்­கப்­படும் என்­றது ஆணை­யம்.

இவ்­வாறு பாத­சா­ரி­க­ளுக்கு மேலும் உகந்த ஒரு சூழ­லைச் சாலைப் பகு­தி­களில் உருவாக்கித் தரும்போது பாத­சா­ரி­கள், ஓட்­டு­நர்­க­ளின் உணர்­வு­கள் என்ன என்­ப­தற்கு இம்­முன்­னோட்­டத் திட்­டம் உன்­ன­தத் தரவு திரட்­டித் தரும் என்­கின்­ற­னர் நிபு­ணர்­கள்.

திட்­டம் குறித்­துக் கருத்து தெரி­விக்­கக் கலந்­து­ரை­யா­டல் குழுக்­களும் இணைய உரை­யா­டல்­களும் ஏற்­பாடு செய்­யப்­ப­டு­வ­தாக திரு­வாட்டி மரி­யாம் கூறி­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!