பத்தாண்டில் முதல்முறையாக வாகனத் தீச்சம்பவங்கள் குறைந்துள்ளன

பத்து ஆண்­டு­களில் இல்­லாத அள­வுக்கு சிங்­கப்­பூ­ரில் வாக­னத் தீச்­சம்­ப­வங்­கள் குறைந்­துள்­ளன. பெரும்­பா­லான தீச்­சம்­ப­வங்­கள், வெப்ப அதி­க­ரிப்­பா­லும் மின்­சா­ரக் கோளா­று­க­ளா­லும் நிகழ்ந்­த­தா­கக் கூறப்­ப­டு­கிறது. சிங்­கப்­பூர் குடி­மைத் தற்­காப்­புப் படை வெளி­யிட்­டுள்ள அண்­மைய புள்­ளி­வி­வ­ரங்­கள்­படி, 2018ஆம் ஆண்­டில் 221 சம்­ப­வங்­களும் 2019ஆம் ஆண்­டில் 195 சம்­ப­வங்­களும் சென்ற ஆண்டு 153 சம்­ப­வங்­களும் ஏற்­பட்­டி­ருந்­தன.

இதன்­படி 2020ல் பதி­வான தீச்­சம்­ப­வங்­க­ளின் எண்­ணிக்கை, பத்­தாண்­டில் ஆகக் குறை­வா­கும்.

இவ்­வாண்டு இது­வரை பதி­வான வாக­னத் தீச்­சம்­ப­வங்­க­ளின் எண்­ணிக்­கை­யும் குறைந்­துள்­ளன.

முதல் இரண்டு மாதங்­களில் 24 வாக­னங்­கள் தீப்­பற்­றிக்­கொண்­டன. சென்ற ஆண்­டு இதே கால­கட்­டத்­தில் 43 சம்­ப­வங்­களும் அதற்கு முந்­தைய ஆண்­டில் 38 சம்­ப­வங்­கள் பதி­வா­கி­யி­ருந்­தன.

சாலை­யில் சென்­று­கொண்­டி­ருந்­த­போது, வாக­னங்­கள் தீப்­பற்­றிய சம்­ப­வங்­கள் அதி­கம் என்று கூறப்­பட்­டது. வாக­னத்­தில் வெப்­பம் அதி­க­ரித்­தது, என்­ஜின் பகு­தி­யில் மின்­சா­ரக் கோளா­று­கள் ஏற்­பட்­டது போன்ற கார­ணங்­க­ளால் சம்­ப­வங்­கள் நிகழ்ந்­தன.

வாக­னத் தீச்­சம்­ப­வங்­க­ளைத் தடுப்­ப­தற்­காக சிங்­கப்­பூர் குடி­மைத் தற்­காப்­புப் படை­யும் நிலப் போக்கு­வரத்து ஆணை­ய­மும் கடந்த ஆண்டு­க­ளா­கவே இணைந்து செயல்­பட்டு வரு­கின்­றன. வாக­னத்­தில் செய்­யப்­படும் மாற்­றங்­கள் குறித்து எச்­ச­ரிக்கை விடுக்­கும் அறி­வு­றுத்­தல்­களை மோட்­டார் நிறு­வனங்­க­ளுக்கு ஆணை­யம் பிறப்­பிப்­பது போன்ற நட­வ­டிக்­கை­களை ஆணை­யம் எடுத்து வரு­கிறது.

இதற்­கி­டையே பலர் கூறு­வது போல், வாக­னத் தீச்­சம்­ப­வங்­களுக்கு வானி­லை­யும் ஒரு கார­ணம் என்­பது பெரும்­பா­லும் உண்­மை­யல்ல என்­றும் கூறப்­பட்­டது.

சில சம­யங்­களில் வாக­னங்­களில் பழுது ஏற்­படும் சாத்­தி­யம் கண்­டு­பி­டிக்­கப்­ப­ட­லாம். அத­னால் பிரச்­சி­னை­யைத் தீர்க்க இவ்­வா­க­னங்­கள் மீட்­டுக்­கொள்­ளப்­படும்.

இந்­நி­லை­யில் வாக­னங்­களில் எப்­போ­தும் தீய­ணைப்­புக் கரு­வியை வைத்­தி­ருப்­பது நல்­லது என்று ஓட்டு­நர்­க­ளுக்கு அறி­வு­றுத்­தப்­ப­ட்டு வருகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!