நிறுவனங்களில் வெவ்வேறு வேலை நேரங்கள்

வேலையிடங்கள் தொடர்பான கொவிட்-19 கட்டுப்பாடுகளின் தளர்வு நடவடிக்கைகள் இன்று தொடங்கும் வேளையில், அதிகமான ஊழியர்கள் அலுவலகங்களுக்குத் திரும்புவார்கள்.

அதற்கேற்றாற்போல, சில நிறு வனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு வெவ்வேறு வேலை நேரங்களை வகுத்துள்ளன. இன்று முதல் தங்கள் ஊழியர்களில் 75 விழுக்காட்டினர் அலுவலகத்துக்குத் திரும்பலாம் என்ற கட்டுப்பாட்டுத் தளர்வு பற்றி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழ் சுமார் 10 முதலாளிகளிடம் பேசியது.

ஒவ்வோர் ஊழியருக்கும் அவர் களின் தேவைக்கேற்ப அலுவலக நேரத்தை வகுத்து கொடுப்பதை அவர்கள் வரவேற்கும் போக்கைக் கடந்த ஆண்டு கட்டுப்பாடுகள் உருவாக்கியுள்ளன என்று முதலாளிகள் தெரிவித்தனர்.

ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருந்துகொண்டு வேலை செய்வது போய், இப்போது எங்கிருந்தும் வேலை செய்யும் மனப்போக்கை தங்கள் ஊழியர்கள் பெற்றிருக்கிறார்கள் என்று முதலாளிகள் கூறினர்.

"கொவிட்-19 கிருமித்தொற்று இன்னும் முடிவுக்கு வராத சூழ்நிலையில், ஊழியர்களுக்கு வழக்கமான காலை, சாலை உச்சநேர பயணத்திலிருந்து விடுபடவே விரும்புகிறார்கள். ஆகவே, நான் அவர்களை காலை 10 மணிக்கு அல்லது பகல் உணவு முடிந்தவுடன் வேலையைத் தொடங்க ஊக்குவிக்கிறேன்," என்றார் டிஎஸ்எம்பி சட்ட நிறுவனத்தின் இணை நிர்வாகப் பங்காளி திருவாட்டி ஸ்டெஃபனி யுவென்.

சில நிறுவனங்களுக்கு தங்கள் ஊழியர்களை வெவ்வேறு நேரங்களில் வேலை செய்ய வைப்பது ஒரு சவாலாக உள்ளது. உதாரணத்துக்கு, 'ஏகேஏ' ஏஷியா நிறுவனம், ஊழியர்கள் எந்த நேரத்திலும் அலுவலகம் வந்து எவ்வளவு நேரம் வேலை செய்ய விரும்புகிறார்கள் என்பதை முன்பதிவு செய்யும்படி ஊக்குவிக்கிறது.

சில நிறுவனங்களோ, தங்கள் ஊழியர்களில் சிலர் வெவ்வேறு நேரங்களில் வேலை செய்வதாலும் சில ஊழியர்கள் வீட்டிலிருந்தபடி வேலை செய்வதாலும் அவர்களுக்கிடையே வேலையிட குழு உணர்வு நாளடைவில் பாதிக்கப்படக்கூடும் என்று கவலை தெரிவித்தன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!