முதல்நாள் ரயிலில் அதிக கூட்டம் இல்லை

கொவிட்-19 கட்டுப்பாடுகள் தளர்வு; அலுவலகங்களுக்கு அதிகமான ஊழியர்கள் திரும்ப அனுமதி

சிங்­கப்­பூ­ரில் கொவிட்-19 கட்­டுப்­பாடு­கள் மேலும் தளர்த்­தப்­பட்டு, நேற்று முதல் 75% ஊழி­யர்­கள் அலு­வ­ல­கம் திரும்ப அனு­ம­திக்­கப்­பட்­ட­னர். என்­றா­லும் எம்ஆர்டி ரயில்­களில் குறிப்­பி­டும்­ப­டி­யாக அதி­கக் கூட்­டம் தென்­ப­ட­வில்லை.

ராஃபிள்ஸ் எம்­ஆர்டி நிலை­யத்­தில் நேற்­றுக் காலை 8.30 மணி முதல் 9.30 மணி­ வ­ரை­ ப­ய­ணி­கள் நெருக்­க­மாக அருகருகே செல்­வதைக் காண முடிந்­தது. முகக்­கவசம் மட்­டும் இல்லையெனில் கொவிட்-19 நினைவே வந்து இருக்­காது போன்ற சூழல் காணப்­பட்டது.­

எந்த வேறு­பா­டும் தெரி­ய­வில்லை என்று அந்த ரயில் நிலை­யத்­திற்கு அருகே வேலை பார்க்­கும் பாது­கா­வல் ஊழி­யர் ஒரு­வர் கூறியதாக ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரி­வித்­தது.

மத்­திய வணிக வட்­டா­ரத்­தின் மைய­மான மரினா பே நிதி மையத்­தில் உச்ச நேரத்­தில்கூட ரயில்­களின் இருக்­கை­கள் காலி­யாக இருந்­தன.

“எல்­லாம் வழக்­க­மாக இருப்­ப­தா­கவே தெரிந்­தது. தெம்­ப­னி­சில் ரயி­லில் ஏறி­னேன். அமர இடம் கிடைத்­தது,” என்று வணிகப் பகுப்­பாய்­வா­ள­ரான திரு­வாட்டி சுஷ்மா பிள்ளை, 40, என்­ப­வர் கூறி­னார்.

வேலை இட நிபந்­த­னை­கள் தளர்த்­தப்­ப­டு­வது பற்­றிய விவ­ரங்­கள் சென்ற வாரம் அறி­விக்­கப்­பட்­டன. வீட்­டில் இருந்து வேலை பார்ப்­பதை நிரந்­த­ர­மா­ன­தாக ஆக்­கா­மல் அப்­ப­டி­யும் இப்­ப­டி­யு­மாக வேலை ஏற்­பாட்டை முத­லா­ளி­கள் செய்­து­கொள்ள அர­சு அனு­ம­தித்­துள்­ளது.

ஊழி­யர்­க­ளைக் குழுக்­க­ளா­கப் பிரித்து வேலை­யில் அமர்த்­து­வது; வேலை நேரத்தை மாற்றி அமைப்­பது; வாரத்­தில் குறிப்­பிட்ட நாட்­களுக்கு வீட்­டில் இருந்து வேலை பார்க்க அனு­ம­திப்­பது ஆகி­யவை கார­ண­மாக பொதுப்­ போக்குவரத்­தில் நெரி­சல் அதி­க­ரிப்பு மித­மாகவே இருக்­கும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

நீக்­குப்­போக்­கான வேலை நேர ஏற்­பாடு தொட­ரும் என்று பல முத­லா­ளி­கள் தெரி­வித்துள்ளனர்.

இதனிடையே, சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகத்தின் போக்குவரத்துத் துறை வல்லுநர் வால்டர் தெசேரா, ரயில்களில் கூட்டம் கொவிட்-19க்கு முன்பு இருந்த நிலைக்குத் திரும்புமா என்பதைக் கணிப்பது சிரமமானது என்று தெரிவித்தார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

கண்டுபிடிக்க இன்னும் நிறைய இருக்கிறது

Before you head off, have you checked out these hot stories yet?.