2 ஆண்டுகளில் முதல் முறை: சில்லறை வர்த்தகம் 5.2% உயர்வு

சிங்­கப்­பூ­ரின் சில்­லறை வர்த்­த­கம் இரண்டு ஆண்டு கால­மாக இறங்கு­ மு­க­மாக இருந்து வந்­தது. ஆனால் முதல்முறையாக ஆண்­டுக்கு ஆண்டு அடிப்­ப­டை­யில் அது 2021 பிப்­ர­வ­ரி­யில் 5.2% அதி­க­ரித்­தது.

சீனப் புத்­தாண்டு கால­மும் கொவிட்-19 பாதிப்­பு­கள் குறைந்­த­தும் முக்­கிய கார­ணங்­கள் என்று தெரிவிக்­கப்பட்டது.

சில்­லறை வர்த்­த­கம் கடந்த ஜன­வ­ரி­யில் 6.1% குறைந்து இருந்­தது என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

மோட்­டார் வாக­னங்­க­ளைச் சேர்க்­கா­மல் பார்க்­கை­யில், சில்லறை வர்த்­த­கம் பிப்­ர­வ­ரி­யில் 7.7% கூடி­யது. இது ஜன­வ­ரி­யில் 8.4% குறைந்து இருந்­தது.

புள்­ளி­வி­வ­ரத்­துறை வெளி­யிட்ட விவரங்­கள் மூலம் இவை தெரி­ய­வரு­கின்­றன. சில்­லறை வர்த்­த­கம் கடந்த பிப்­ர­வ­ரி­யில் அதி­க­ரித்­த தற்கு அந்த மாதத்­தில் சீனப் புத்­தாண்டு வந்­ததே கார­ணம் என்­றும் சென்ற ஆண்­டி­லும் இேத நிலை இருந்­தது என்­றும் அந்­தத் துறை கூறியது. இருந்­தா­லும் ஜன­வரி, பிப்­ர­வரி இரண்டு மாதக் கொண்­டாட்ட காலத்தின்போது இந்த வர்த்­த­கம் 2020 ஆண்­டை­விட இந்த ஆண்­டில் 1.2% குறைந்­தது.

ஆண்­டுக்கு ஆண்டு அடிப்­படை­யில் பார்க்­கை­யில், பெரும்­பா­லான சில்­லறை வர்த்­த­கத் துறை­கள் மேம்­பட்­டன. கொண்­டாட்ட காலத்­தில் மக்­கள் அதி­கம் செல­விட்­டதே இதற்­கும் கார­ணம். கடி­கா­ரம், நகை விற்­பனை 34.1% கூடின. உடைகள், கால­ணி­கள் விற்­பனை 31.6% கூடி­யது. பொழு­து­போக்­குப் பொருட்­கள் 13.9% அதி­கம் விற்­கப்பட்­டன.

பேரங்­கா­டி­கள், உய­ரங்­கா­டி­கள் ஆகியவற்­றில் நடந்த விற்­பனை 13.6% அதி­க­மா­கி­யது. கணினிகள், தொலைத்­தொடர்புச் சாத­னங்­க­ளின் விற்­ப­னை­யும் 12.8% மேம்­பட்­டன. அறை­க­லன்­கள் வீட்­டுப் பொருட்­களின் விற்­பனை 11.4% அதி­க­மாக இருந்­தது.

இருந்­தா­லும்­கூட வாச­னைப் பொருட்­கள், கழி­வ­றைப் பொருட்­கள், மருத்­து­வச் சாத­னங்­கள் ஆகி­ய­வற்­றின் விற்­பனை 18.7% இறக்­கம் கண்­டது. கண்­ணா­டிப் பொருட்­கள், புத்­த­கங்­கள் 10.9% குறை­வாக விற்­பனையாயின. மோட்­டார் வாகன விற்­பனை 9.1% குறைந்­தது. பகு­தி­வா­ரிக் கடை­க­ளின் வியா­பா­ர­மும் 2.3% குறை­வாக இருந்­தது. விழாக்­கா­ல­மாக இருந்­த­தால் உணவு, பான சேவைத் துறைக்­கு ஊக்­கம் கிடைத்­தது.

ஜன­வ­ரி­யில் 24.6% குறைந்து இருந்த இந்­தத்­ துறை, பிப்­ர­வ­ரி­யில் 3.5%தான் சுருங்­கி­யது.

உண­வ­கங்­க­ளுக்கு 8.5% அதி­கம் வியா­பா­ரம் நடந்­தது. உணவு, பானத் துறை சேவை­க­ளின் மொத்த விற்­பனை மதிப்பு பிப்­ர­வ­ரி­யில் $699 மில்­லி­யன் என மதிப்பிடப்ப­டுகிறது.

அதில் 22.2% இணை­யம் வழி நடந்­தன. பிப்­ர­வ­ரி­யில் நடந்த மொத்த சில்­லறை வர்த்­த­கத்­தின் மதிப்பு ஏறத்­தாழ 3.3 பில்­லி­யன். அதில் 10.1% இணை­யம் வழி நடந்தவை.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!