30,000 பேரின் சொந்த தகவல்கள் சட்டவிரோத ஊடுருவலுக்கு இலக்காகி இருக்கும் நிலை

தேசிய தொழிற்­சங்க காங்­கி­ரஸ் (என்­டி­யுசி) வேலை வாய்ப்பு, வேலை தகுதிக் கழ­கத்தின் (e2i) சேவை­களைப் பயன்­ப­டுத்தி இருக்­கும் ஏறத்­தாழ 30,000 பேரின் சொந்தத் தக­வல்­களை இணை­யக் குற்­ற­வாளி­கள் எட்­டி­யி­ருக்­கக்­கூ­டும் என்று தெரி­ய­வந்­துள்­ளது.

மக்­க­ளின் பெயர்­கள், கல்வித் தகு­தி­கள், அடை­யாள அட்டை, தொடர்பு, வேலை நிய­மன விவ­ரங்­கள் போன்ற பல தக­வல்­க­ளை­யும் சட்­ட­வி­ரோ­த­மான முறை­யில் அந்த மோசடிப் பேர்­வ­ழி­கள் பெற்­றி­ருக்­கக்­கூ­டும் என்று இந்­தக் கழ­கம் வெளி­யிட்ட ஓர் அறிக்கை மூலம் தெரிய­வரு­கிறது.

ஊழி­யர்­க­ளுக்குத் தேர்ச்சிப் பயிற்சி­களை அளிப்­ப­தோடு அவர்­களுக்­குப் பொருத்­த­மான வேலை­களைப் பெற்­றுத் தரும் சேவை­யை­யும் இக்கழ­கம் செய்து வரு­கிறது.

தன்­னு­டைய கணி­னி­யில் மோசடி­ப் பேர்­வ­ழி­கள் ஊடு­ரு­வி­விட்­டார்­கள் என்று மார்ச் 12ஆம் தேதி தான் விழிப்­பூட்­டப்­பட்­ட­தாக இந்­தக் கழ­கம் தெரி­வித்­தது.

கழ­கம் நிய­மித்த i-vic International என்ற மூன்­றாம் தரப்பு நிறு­வ­னத்­தைச் சேர்ந்த ஊழி­யர் ஒரு­வ­ரின் மின்­னஞ்­சல் பெட்டி சட்­ட­வி­ரோ­த­மான முறை­யில் ஊடுரு­வப்­பட்­ட­தா­க­வும் அந்­தப் பெட்­டி­யில் ஏறத்­தாழ 30,000 பேரின் சொந்த விவ­ரங்­கள் இருந்­த­தா­க­வும் கழ­கம் கூறி­யது.

இத­னை­ய­டுத்து கழ­கமும் i-vic International நிறு­வ­ன­மும் மின்­னஞ்­சல் மற்­றும் இணையக் கட்­ட­மைப்பு முறை­களின் பாது­காப்பை பலப்­படுத்த பல நட­வ­டிக்­கை­களை எடுத்­துள்­ளன.

பல்வேறு பரி­சோ­த­னை­க­ளை­யும் நடத்தி வரு­கின்­றன.

மின்­னஞ்­சல், குறுஞ்­செய்தி, தொலை­பேசி வழி­யாக பல­ரை­யும் தொடர்­பு­கொண்டு இந்­தச் சம்­ப­வம் பற்றி எடுத்­துக்­கூறி அவர்­க­ளுக்கு உத­வு­வ­தற்­கும் முயற்­சி­கள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன.

இந்த மோசடி கார­ண­மாக பாதிக்­கப்­பட்டு இருப்­போர் இணை­யத்­தில் பரிவர்த்தனைகளில் ஈடு படும்போது மிகக் கவ­ன­மாக நடந்து­கொள்ளவேண்­டும் என்று கழ­கம் ஆலோ­சனை கூறி இருக்­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!