செய்திக்கொத்து

அமெரிக்க ராணுவ முன்மாதிரி வாகன உருவாக்கத்தில் எஸ்டி இன்ஜினியரிங்

அமெரிக்க ராணுவத்தினுடைய குளிர்கால அனைத்து நிலப்பரப்பு வாகனத்தின் மூல முன்மாதிரியை உருவாக்க சிங்கப்பூரின் எஸ்டி இன்ஜினியரிங் நிறுவனமும் அமெரிக்காவின் ஓஷ்கோஷ் நிறுவனமும் பங்காளிகளாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அவ்விரு நிறுவனங்களும் பொதுப் பயன்பாட்டு வாகனம், சரக்கு வாகனம் என இரு மூல முன்மாதிரி வாகனங்களை இவ்வாண்டின் மூன்றாம் காலாண்டிற்குள் உருவாக்கித் தர வேண்டும். தாங்குதிறன், நகர்திறன் உள்ளிட்ட பல அம்சங்களில் மூல முன்மாதிரி வாகனங்கள் மதிப்பீடு செய்யப்படும் என்று ஓஷ்கோஷ் நிறுவனம் தெரிவித்தது.

சாலையில் மின்ஸ்கூட்டர் ஓட்டுவதற்கு எழுத்துத் தேர்வில் கட்டாயத் தேர்ச்சி

இவ்வாண்டின் நடுப்பகுதியில் இருந்து மின்ஸ்கூட்டர், மின்சைக்கிள் ஓட்டிகளுக்கு எழுத்துத் தேர்வு கட்டாயமாக்கப் படவுள்ளது. அத்தேர்வில் தேர்ச்சி பெறாமல் சாலையில் அவ்வாகனங்களை ஓட்டுவது குற்றமாகக் கருதப்படும். 'இ-பைக்' எனப்படும் மின்சாரத்தின் துணையுடன் இயக்கப் படும் சைக்கிள்களைச் சாலைகளிலும் சைக்கிளோட்டப் பாதைகளிலும் பூங்கா இணைப்புவழிகள் போன்ற பகிர்வுப் பாதைகளிலும் ஓட்டலாம். நடைபாதைகளில் அவற்றை ஓட்டுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. சாலைப் போக்கு வரத்துச் சட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ள சட்டத்திருத்தங்கள் நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்டன. உந்து நடமாட்டச் சட்டத்தில் கடந்த ஆண்டு மேற்கொள்ளப் பட்ட திருத்தத்தின்படி, சைக்கிளோட்ட அல்லது பகிர்வுப் பாதைகளில் 'இ-பைக்' ஓட்ட எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ரயில், பேருந்துப் பயணிகள் சோதனைக்கு உள்ளாக்கப்படலாம்

பேருந்தில் அல்லது ரயிலில் பயணம் செய்வோர், போலிஸ் அதிகாரிகளாலும் மற்ற அதிகாரிகளாலும் தனிப்பட்ட சோதனைக்கு உள்ளாக்கப்படலாம். அதாவது, பயணி ஒருவர் தம் ஆடைகளுக்குள் ஏதேனும் மறைத்து வைத்துள்ளாரா என அதிகாரிகள் தங்கள் கைகளைக் கொண்டு சோதிக்க முடியும். நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்ட சாலைப் போக்குவரத்து (சட்டத்திருத்தம்) மசோதா இதற்கு வகைசெய்யும். பயணிகள் எடுத்து வரும் பயண உடைமைகளை மட்டுமே சோதிக்க இப்போதைய சட்டங்கள் அனுமதிக்கின்றன.

பேருந்துச் சந்திப்பு நிலையங்களின் நுழைவாயில்களிலும் எம்ஆர்டி, எல்ஆர்டி நிலையங்களின் கட்டண நுழைவாயில்களுக்கு முன்பாகவும் அல்லது அந்தப் போக்குவரத்து நிலையங்களின் எந்தவோர் இடத்திலும் பாதுகாப்புச் சோதனைகளை மேற்கொள்ள புதிய சட்டத்திருத்தம் அனுமதிக்கும் என நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது. தேவை ஏற்பட்டால் பேருந்துகளிலும் ரயில்களிலும் பயணிகளிடம் அதிகாரிகள் சோதனை மேற்கொள்ள முடியும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!