நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு புதிய தரச் சான்றிதழ் திட்டம் அறிமுகம்

பெரிய அள­வி­லான நிகழ்ச்­சி­களைப் பாது­காப்­பான முறை­யில் நடத்­து­வ­தற்­காக சந்­திப்­பு­கள், சலு­கை­கள், மாநா­டு­கள், கண்­காட்­சி­கள் பிரி­வில் புதிய சான்­றி­தழ் திட்­டம் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

நிகழ்ச்சி ஏற்­பாட்­டா­ளர்­கள், இட உரி­மை­யா­ளர்­கள், வழங்­கு­நர்­கள் போன்­ற­வர்­கள் சுகா­தா­ரம் மற்­றும் சுத்­தி­க­ரிப்பு, பாது­காப்பு இடை­வெளி மற்­றும் அவ­ச­ர­கால நிர்­வா­கம் போன்ற துறை­களில் மேம்­பட்ட நடை­மு­றை­களை மேற்­கொள்­வதை உறு­தி­செய்து, மாநாடு போன்­ற­வற்­றில் கலந்­து­கொள்­ளும் அனைத்­து­லக பங்­கேற்­பா­ளர்­க­ளுக்கு சிங்­கப்­பூர் அர­சாங்­கம் வகுத்த தரநிலையில் சேவை வழங்­கு­வதை உறுதி செய்ய இந்த புதிய சான்­றி­தழ் திட்­டம் உத­வும்.

'எஸ்ஜி சேஃப்ஈ­வன்ட்ஸ்' எனும் அந்­தச் சான்­றி­தழ் திட்­டம் நேற்று சிங்­கப்­பூர் மாநாடு, கண்­காட்சி ஏற்­பாட்­டா­ளர்­கள் மற்­றும் வழங்­கு­நர்­க­ளின் சங்­கத்­தால் சிங்­கப்­பூர் பயணத்துறைக் கழ­கத்­தின் வரு­டாந்­திர மாநாட்­டில் நேற்று அறி­ மு­கப்­ப­டுத்­தப்­பட்­டது.

தற்­போது நடப்­பில் இருக்­கும் பாது­காப்பு நட­வ­டிக்­கை­களும் மேலா­ன­தாக, சிங்­கப்­பூர் சுற்­றுப்­ப­ய­ணக் கழ­கத்­தின் பாது­காப்­பான வர்த்­தக நிகழ்­வு­கள் பணிச்­சட்­டத்­திற்கு வலுச்­சேர்க்­கும் விதத்­தில் இந்த புதிய நடை­மு­றை­க­ளின் தரம் மேம்­பட்­ட­தாக இருக்­கும்.

இந்­தச் சான்­றி­த­ழைப் பெற நிகழ்ச்சி ஏற்­பாட்­டா­ளர்­கள் அபாய நிர்­வா­கத் திட்­டத்­தைக் கொண்­டி­ருப்­ப­து­டன், இயன்­ற­வரை தொடு­தல் தேவை­யில்­லாத தொழில்­நுட்­பம் பயன்­ப­டுத்­தப்­பட வேண்­டும். இட உரி­மை­யா­ளர்­கள் அந்த இடங்­களைக் குறிப்­பிட்ட கால இடை­வெ­ளி­களில் தூய்­மைப்­ப­டுத்­து­வது, தொற்று நீக்­கம் செய்­வது போன்­ற­வற்­றுக்­கான திட்­டத்­தைக் கொண்­டி­ருக்க வேண்­டும்.

இந்­தப் புதிய சான்­றி­தழ் திட்­டம் அடுத்த மூன்­றாண்­டு­க­ளுக்கு நடப்­பில் இருக்­கும். அதற்­குப் பிறகு இந்த 'எஸ்ஜி சேஃப்ஈ­வன்ட்ஸ்' சான்­றி­தழ் முழு அள­வி­லான சிங்­கப்­பூ­ரின் தர­நி­லை­யாக உரு­மாற்­றம் பெறக்­கூ­டும்.

கொரோனா கிரு­மித்­தொற்று காலத்­துக்­குப் பிற­கான பெரிய நிகழ்ச்­சி­களை நடத்­து­வது, வெளி­நாட்­டி­னரை வர­வேற்­பது போன்­ற­வற்­றைப் படிப்­ப­டி­யாக மேற்­கொள்ள இருப்­ப­தால் தேவை­யான பாது­காப்பு ஏற்­பா­டு­க­ள் அவ­சி­யம் என்று சிங்­கப்­பூர் பய­ணத்­து­றைக் கழ­கத்­தின் கொள்கை, திட்­ட­மி­டல் குழும துணைத் தலைமை நிர்­வாகி ஜென்னி லிம் கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!