இதய நோயாளிகளிடையே உயிரிழப்பை அதிகரிக்கும் நீரிழிவு; ஆரோக்கியமான உணவு, உடற்பயிற்சி உடனடி தேவை

நீண்­ட­கால இதய நோய்­கள் உடை­யோருக்கு நீரி­ழிவுப் பிரச்­சி­னை­யும் இ­ருந்­தால் அவர்­கள் உயி­ரி­ழக்­கும் அபா­யம் அதி­கம் என்­றும் நீரி­ழிவுப் பிரச்­சினை இல்­லாத இதய நோயா­ளி­க­ளை­விட அவர்­கள் உடல்­நிலை தேறும் விகி­தம் குறை­வாக இருக்­கும் என்­றும் ஐந்­தாண்­டு­க­ளாக மேற்­கொள்­ளப்­பட்ட அனைத்­து­லக அள­வி­லான ஆய்வு ஒன்று தெரி­விக்­கிறது.

நீரி­ழிவுப் பிரச்­சினை இல்­லாத இதய நோயா­ளி­க­ளை­விட, நீரி­ழிவுப் பிரச்­சினை உள்ள இதய நோயா­ளி ­க­ளி­டையே கிட்­டத்­தட்ட 40% அதிக உயி­ரி­ழப்பு சாத்­தி­யம் இருப்­ப­தாக அந்த ஆய்வு தெரி­விக்­கிறது.

நீரி­ழிவுப் பிரச்­சினை இருப்­போ­ரி­டையே மார­டைப்பு, பக்­க­வா­தம், உயி­ரி­ழப்பு போன்­ற­வற்­றுக்கு 30% அதிக சாத்­தி­யம் இருப்­ப­தை­யும் ஆய்வு காட்­டி­யது.

இந்த ஆய்­வுக்கு முன்பு, இதய நோய்க்­கும் நீரி­ழி­வுப் பிரச்­சி­னைக்­கும் இடை­யி­லான தொடர்பு பற்றி தெளி­வாக அறி­யப்­ப­டா­மல் இருந்­தது என இந்த ஆய்­வின் முதன்மை ஆசி­ரி­ய­ரும் கிள­னி­கள்ஸ் மருத்­துவ நிலை­யத்­தின் இத­ய­வி­யல் மருத்­து­வ­ரு­மான டாக்­டர் மாக் கூன் ஹவ் குறிப்­பிட்­டார்.

நீரி­ழிவுப் பிரச்­சி­னை­யா­னது இதய நோயா­ளி­க­ளுக்கு பெருந்­தீமை விளை­விப்­ப­தாக உள்­ள­தால் நீரி­ழிவுப் பிரச்­சினை வரா­மல் தவிர்ப்­பது நல்­லது என்­றார் அவர்.

நீண்­ட­கால இதய நோயா­ளி­கள் 32,694 பேர் இந்த ஆய்­வில் பங்­கேற்­ற­னர். ஐரோப்பா, ஆசியா, அமெ­ரிக்கா, மத்­திய கிழக்கு, ஆஸ்­தி­ரே­லியா, ஆப்­பி­ரிக்கா ஆகிய பகு­தி­க­ளின் பல்­வேறு நாடு­க­ளைச் சேர்ந்த அவர்­களில் 112 பேர் சிங்­கப்­பூ­ரைச் சேர்ந்­த­வர்­கள். 2009க்கும் 2010க்கும் இடைப்­பட்ட காலத்­தில் பதிவு செய்த நோயா­ளி­கள் அவர்­கள்.

சிங்­கப்­பூர் நோயா­ளி­களில் 23 விழுக்­காட்­டி­ன­ருக்கு நீரி­ழிவுப் பிரச்­சினை இருந்­தது. இந்த ஆய்­வின் முடி­வு­கள் உலக சுகா­தார தின­மான நேற்று 'பிரி­வென்­டிவ் கார்­டி­யா­லஜி' எனும் ஐரோப்­பிய சஞ்­சி­கை­யில் வெளி­யா­கின.

ரத்த சர்க்­கரை அதி­க­ரிப்பு ரத்த நாளங்­க­ளைப் பாதிப்­ப­தால் இத­யத்­தைக் கட்­டுப்­ப­டுத்­தும் நரம்­பு­கள் பாதிக்­கப்­ப­டு­வ­தா­க­வும், அதன் கார­ண­மாக ரத்த நாளங்­கள் சுருங்குவ­தா­க­வும் டாக்­டர் மாக் தெரி­வித்­தார்.

"உடற்­ப­ரு­மன், உடற்­ப­யிற்சி குறைவு போன்­றவை நீரி­ழிவு மற்­றும் இதய நோய்­க­ளுக்­கான அபாய கார­ணி­க­ளாக இருப்­ப­தால் அனைத்­து­லக அள­வில் சத்து மிகுந்த உணவு உட்­கொள்­வது மற்­றும் உட­லு­ழைப்பை அதி­க­ரிப்­பது போன்­றவை உட­னடி தேவை," என்று அந்த ஆய்­வின் மற்­றோர் ஆசி­ரி­ய­ரான டாக்­டர் இமா­னு­வல் விடல் பெட்­டி­யோட் நேற்று வெளி­யான அறிக்கை ஒன்­றில் தெரி­வித்­தார். அவர் பிரான்­சில் உள்ள பைசாட்-கிளாட் பெர்­னார்ட் மருத்­து­வ­ம­னை­யைச் சேர்ந்த மருத்­து­வர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!