செய்திக்கொத்து

பெரும்பாலான பிரிவுகளில் சிஓஇ கட்டணங்கள் அதிகரிப்பு

வாகன உரிமைச் சான்றிதழ்களின் எண்ணிக்கை அடுத்த மாதத்திலிருந்து குறையவிருப்பதையடுத்து, நேற்றைய ஏலத்தில் வாகன உரிமைச் சான்றிதழ் கட்டணங்கள் பெரும்பாலான பிரிவுகளில் அதிகரித்தன. 1600சிசி வரையிலான சிறிய ரக கார்களுக்கான வாகன உரிமைச் சான்றிதழ் கட்டணம் $45,600ஆக அதிகரித்தது. கடந்த ஏலத்தின்போது அது $44,589ஆக இருந்தது. 1600சிசிக்கு மேற்பட்ட பெரிய ரக கார்களுக்கான வாகன உரிமைச் சான்றிதழ் கட்டணம் $47,001லிருந்து $52,309ஆக அதிகரித்தது. பொதுப்பிரிவு கார்களுக்கான கட்டணம் $52,200 ஆனது. கடந்த ஏலத்தின்போது அது $47,806ஆக இருந்தது. வர்த்தக வாகனங்களுக்கான வாகன உரிமைச் சான்றிதழ் கட்டணம் $39,589லிருந்து $36,134ஆகக் குறைந்தது. மோட்டார் சைக்கிள்களுக்கான வாகன உரிமைச் சான்றிதழ் கட்டணம் $7,791லிருந்து $8,000ஆக அதிகரித்தது.

புதிய கலைப்பொருள்களுடன் சாங்கி சேப்பல், அருங்காட்சியகம் திறப்பு

சாங்கி சேப்­பல், அருங்­காட்­சி­ய­கம் மறு­சீ­ர­மைப்­புப் பணி­க­ளுக்­குப் பிறகு அடுத்த மாதம் 19ஆம் தேதி திறக்­கப்­பட உள்­ளது. கடந்த 2018ஆம் ஆண்­டில் மறு­சீ­ர­மைப்­புப் பணி­க­ளுக்­காக மூடப்­பட்ட இந்த அருங்­காட்­சி­ய­கம் திட்­ட­மி­டப்­பட்­ட­தை­விட ஓராண்டு தாம­த­மா­கத் திறக்­கப்­ப­டு­கிறது.

போரில் ஜப்­பா­னி­யர்­கள் சர­ண­டைந்த 76வது ஆண்டு நிறைவை இவ்­வாண்டு குறிக்­கிறது. போரில் உயி­ரி­ழந்­த­வர்­க­ளின் நினை­வாக அமைந்­துள்ள சாங்கி சேப்­பல், அருங்­காட்­சி­ய­கம் ஒரு வழி­பாட்­டுத் தல­மா­க­வும் இருக்­கிறது.

புதிய கலைப்­பொ­ருள்­களும் இங்கு இடம்­பெற உள்­ளன.

ஜப்­பா­னி­யர்­க­ளால் சிறை­யில் அடைக்­கப்­பட்ட ஆர்­தர் வெஸ்ட்­ராப் என்­ப­வர், ஆப்­பி­ரிக்­கா­வுக்கு வெளி­யேற்­றப்­பட்ட தம் மனை­விக்கு எழு­திய கடி­தங்­களை உள்­ள­டக்­கிய 400 பக்க நாட்­கு­றிப்­புப் புத்­த­கம், எச்­எம்­எஸ் புனா­னின் கால­மானி (படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்), ஒரு சரக்­குக் கப்­பல், கோடாக் பேபி பிரவ்னி எனும் கேமரா, சிறை அறை எண் 14இன் எண் தட்டு உள்­ளிட்ட 6 புதிய கலைப்­பொ­ருள்­களை நேற்று செய்­தி­யா­ளர்­கள் காண முடிந்­தது.

அந்த அருங்­காட்­சி­ய­கத்­தில் முன்பு பிர­ப­ல­மாக இருந்த சிறைச் சுவ­ரின் பகுதி, தீப்­பெட்­டிக்­குள் மறைக்­கப்­பட்ட மோர்ஸ் செய்தி தொடர்பு கருவி போன்­ற­வை­யும் அங்கு இடம்­பெ­றும்.

என்டியுவுக்கு $1 மில்லியன் நிதி வழங்கிய முன்னாள் மாணவர்

நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழக முன்னாள் மாணவரான திரு ஸ்டீவன் லிம் அந்தப் பல்கலைக்கழகத்தின் இறுதியாண்டு மாணவர்களுக்காக புதிய உபகாரச் சம்பளம் மற்றும் கல்வி உதவி நிதிக்காக $1 மில்லியன் நன்கொடை வழங்கியிருக்கிறார். ஆர்எஸ்டிஎன் கன்சல்டிங் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருக்கும் அவர் நேற்று முன்தினம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் இந்த நன்கொடையை வழங்கினார். இந்த நன்கொடையைப் பல்கலைக்கழகத்தின் சார்பில் துணை முதல்வர் பேராசிரியர் லிங் சான் பெற்றுக்கொண்டார். பல்கலைக்கழகத்தின் அறிவுப்பரப்பு நிர்வாக அறிவியல் துறையில் முதுகலைப் பட்டத்தை 2008ஆம் ஆண்டு பெற்ற திரு லிம், 53, 1997ஆம் ஆண்டு ஆர்எஸ்டிஎன் கன்சல்டிங் நிறுவனத்தின் இணை நிறுவனரானார். ஆண்டுதோறும் தகுதிபெறும் இறுதியாண்டு மாணவர்கள் எண்மர் $10,000 ஆர்எஸ்டிஎன் கல்வி உதவிநிதி பெறுவர். ஆர்எஸ்டிஎன் உபகாரச் சம்பளமும் தகுதிபெறும் இறுதியாண்டு மாணவர்களுக்கு வழங்கப்படும். அடுத்த பத்தாண்டுகளுக்கு கல்வி மற்றும் புறப்பாட நடவடிக்கைகளில் சிறந்த இரு மாணவர்கள் $10,000 பெறுவர்.

திரு லிம்மின் நன்கொடைக்கு இணையான $1 மில்லியன் தொகையை பல்கலைக்கழகத்தின் பொது அறக்கட்டளை நிதியாக அரசாங்கம் வழங்கும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!