கடல்துறையினரின் பங்களிப்பை நினைவுகூரும் சுவரோவியங்கள்

கொவிட்-19 சிரம காலத்­தில் அத்­தி­யா­வ­சி­யப் பொருட்­கள் சிங்­கப்­பூ­ருக்­குள் வரு­வதை முன்­னின்று கவ­னித்­துக்­கொண்ட கடல்­து­றை­யி­ன­ரின் பங்­க­ளிப்பை நினை­வு­

கூ­ரும் வண்­ணம் கப்­பல் முனை­யங்­களில் சுவ­ரோ­வி­யங்கள் வரை­யப்­பட்டுள்­ளன.

ஜூரோங் துறை­முக நிர்­வா­கக் கட்­ட­டத்­தி­லும் சிங்­கப்­பூர் துறை­முக ஆணை­யத்­தின் பாசிர் பாஞ்­சாங் முனை­யத்­தி­லும் வரை­யப்­பட்டு உள்ள அந்த ஓவி­யங்­கள் 4 மீட்­டர் அக­ல­மும் இரண்டு மீட்­டர் உய­ர­மும் கொண்­டவை.

கொள்­ளை­நோய் நீடித்த வேளை­யி­லும் மனந்­த­ள­ராது அனைத்­து­லக வர்த்­த­கம், விநி­யோ­கத் தொடர்­கள் போன்­ற­வற்றை நல்ல முறை­யில் நிர்­வ­கித்­த­தில் கடல்­துறை பணி­யா­ளர்­க­ளுக்கு முக்­கிய பங்கு உள்­ளது.

அந்த ஓவி­யத்தை நிறைவு செய்­யும் பணி­யில் போக்­கு­வ­ரத்து, வெளி­யு­றவு ஆகிய துறை­க­ளுக்­கான மூத்த துணை அமைச்­சர் சீ ஹொங் டாட்­டும் நேற்று இணைந்து­ கொண்­டார். சிங்­கப்­பூர் கடல்­துறை துறை­முக ஆணை­யம், சிங்­கப்­பூர் துறை­முக ஆணை­யம், ஜூரோங் துறை­மு­கம் மற்­றும் தொழிற்­சங்­கங்­கள் ஆகி­ய­வற்­றின் மூத்த பிர­தி­நி­தி­களும் இதில் பங்­கேற்­ற­னர்.

கண்­க­வர் வண்­ணங்­க­ளு­ட­னான சரக்­குக் கொள்­க­லன்­களும் வானில் சுதந்­தி­ர­மா­கப் பறக்­கும் பற­வை­களும் அந்த ஓவி­யத்­தில் இணைக்­கப்­பட்­டன.

கொள்­ளை­நோ­யால் சவால்­களும் நிச்­ச­ய­மற்ற நிலை­யும் ஏற்­பட்­ட­போதி­லும் கடல்­துறை தொழில்­கள் துடிப்­பு­டன் இயங்­கி­யதை உணர்த்த இந்த அம்­சங்­கள் ஓவி­யத்­தில் சேர்க்­கப்­பட்­ட­தாக சிங்­கப்­பூர் கடல்­துறை துறை­முக ஆணை­யம் தெரி­வித்­தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!