மசகோஸ்: எளிதில் பாதிப்படையக்கூடிய குடும்பங்களுக்கு மேம்பட்ட ஆதரவு வழங்கப்படும்

எளி­தில் பாதிப்­புக்­குள்­ளா­கும் குடும்­பங்­க­ளுக்கு மேம்­பட்ட ஆத­ரவு வழங்­கும் நோக்­கில் அமைச்­சு­களும் அமைப்­பு­களும் ஒருங்­கி­ணைந்து செயல்­படும் என்­றார் சமு­தாய, குடும்ப மேம்­பாட்டு அமைச்­சர் மச­கோஸ் ஸுல்­கி­ஃப்லி.

இக்­கு­றிப்­பிட்ட பிரி­வி­ன­ருக்கு மிக உகந்த உதவி கிடைப்­பதை உறு­தி­செய்­வ­தற்கு அமைச்­சு­கள், அமைப்­பு­கள் ஆகி­யவை தங்­க­ளின் ஆத­ரவு நட­வ­டிக்­கை­களை மேலும் சிறப்­பாக ஒருங்­கி­ணைக்க உள்­ள­தாக அவர் நேற்று நடை­பெற்ற நேர்­கா­ணல் ஒன்­றில் குறிப்­பிட்­டார்.

உதா­ர­ணத்­திற்கு, கொவிட்-19 மீட்சி மானி­யம் பெறு­வோர், வேலைத் தேடு­த­லில் ஈடு­ப­டும்­போது வேலை கிடைத்­த­வு­டனே அந்த மானி­யத் தொகையை இழந்­து­வி­ட­மாட்­டர்.

நிதி நிலைத்­தன்மை ஏற்­படும் வரை, மானி­யத் திட்­டத்­தின்­கீழ் அவர்­கள் ஆத­ரவு பெற, அமைச்­சு­கள் ஒருங்­கி­ணைந்த முயற்­சி­யில் ஈடு­பட்டு வரு­கின்­றன என்று கூறப்­பட்­டது. வேலை­யி­ழந்த ஊழி­யர்­கள், சம்­ப­ள­மில்லா கட்­டாய விடுப்­பில் உள்ள ஊழி­யர்­கள், கொவிட்-19 பொரு­ளி­யல் தாக்­கத்­தால் குறிப்­பி­டத்­தக்க வரு­மா­னத்தை இழந்­த­வர்­கள் ஆகி­யோ­ருக்கு ஆத­ரவு வழங்­கும் வகை­யில் இக்­கு­றிப்­பிட்ட மானி­யத் திட்­டம் அமைந்­துள்­ளது.

"இது எளி­தான ஒன்று அல்ல. ஏனெ­னில் வெகு­கா­ல­மா­கவே நமது அமைப்­பு­கள் தனித்து இயங்கி வந்­தன.

"ஆனால் ஒரு குடும்­பத்­திற்கு மேம்­பட்ட உதவி வழங்க நாம் மேலும் எவ்­வாறு ஒருங்­கி­ணைந்து செயல்­ப­ட­லாம் என்­னும் முயற்­சி­யில் இறங்­கி­யுள்­ளோம். ஒவ்­வொரு குடும்­பத்­திற்­கும் வெவ்­வேறு வகை­யி­லும் அவர்­க­ளுக்­குத் தேவை­யான அம்­சங்­க­ளி­லும் நாங்­கள் உத­வ­லாம்," என்­றார்.

கொவிட்-19 தாக்­கத்­தால் சிங்­கப்­பூ­ரர்­க­ளுக்கு வழங்­கப்­படும் நிதி உதவி குறித்து நேர்­கா­ணல் அமைந்­தி­ருந்­தது.

சமு­தாய, குடும்ப மேம்­பாட்டு அமைச்­சர் என்ற பொறுப்­பேற்­றுள்ள தமக்கு, அதி­கக் கவலை அளிக்­கும் ஒன்று என்ன என்று கேட்­கப்­பட்­ட­போது திரு மச­கோஸ், "நம் சமூ­கம் வள­மிக்­க­தாக உரு­மாற, நாள­டை­வில் பிற­ரி­ட­மி­ருந்து தனித்து வாழ வேண்­டும் என்ற விருப்­பம் ஏற்­பட்­டு­வி­டும் என்ற கவலை எனக்கு உண்டு," என்­றார்.

"நம்­மைப் போன்­ற­வர்­க­ளு­டன் வாழ்­வது சுல­பம். ஆனால் நம்­மி­லி­ருந்து வேறு­பட்­ட­வர்­க­ளு­டன் சேர்ந்து வாழ்­வது எளி­தான ஒன்­றல்ல.

"அது நம் இன­மாக இருக்­க­லாம். அல்­லது நம் சம­ய­மாக இருக்­க­லாம். சமூ­கத்­தில் பிரி­வினை ஏற்­ப­டுத்­து­பவை இவை­யாக இருப்­பது கவலை அளிக்­கிறது," என்று குறிப்­பிட்­டார்.

அத­னால்­தான் பெரிய வீடு­க­ளுக்கு அருகே வாடகை வீடு­கள் அமைக்­கப்­பட்­டுள்­ள­தாக அவர் உத­ரா­ணம் காட்­டி­னார்.

"நாம் கட்­டிக்­காக்க வேண்­டிய முக்­கிய அமைப்­பு­மு­றை­கள் இவை. நாம் நெருக்­க­டி­யில் இருந்­தாலோ செல்­வாக்கு மிகுந்து இருந்­தாலோ தொடர்ந்து அனை­வ­ரை­யும் உள்­ள­டக்­கிய ஒரு சமூ­க­மாக இருக்­கும் நிலையை நோக்­கிச் செல்­ல­வேண்­டும்," என்­றார் திரு மச­கோஸ்.

சென்ற ஆண்டு ஜூலை மாதத்­தில் திரு மச­கோஸ் தற்­போ­தைய அமைச்சு பொறுப்பை ஏற்­றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!