வெளிநாட்டு ஊழியர்களின் கதைகளைச் சொல்லும் புதிய காணொளித் தொடர்

இந்தியாவைச் சேர்ந்த கட்டுமானத் துறை ஊழியரான திரு பரமசிவம் கருப்பையா, 31, சிங்கப்பூரில் ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறார்.

2019ஆம் ஆண்டு ஜூன் மாதத்திலிருந்து ‘டிக்டாக்’ சமூக வலைத்தளத்தில் நடனக் காணொளிகளை இவர் பதிவேற்றம் செய்து வருகிறார். ‘டிக்டாக்’ தளத்தில் இவரை 30,000க்கும் அதிகமானோர் பின்தொடர்கின்றனர்.

இவரது ‘டிக்டாக்’ பக்கத்தில் இதுநாள் வரை 600க்கும் அதிகமான கிராமிய நடனங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. அவற்றை ஏறக்குறைய 1.4 மில்லியன் பேர் ‘லைக்’ செய்துள்ளனர்.

SPH Brightcove Video

தாம் தனிமையில் இருக்கும்போதெல்லாம் இத்தகைய காணொளிகளை உருவாக்குவதன் மூலம் தமக்கு ஆறுதல் கிடைப்பதாக திரு பரமசிவம் கூறுகிறார்.

இரு பெண் பிள்ளைகளுக்குத் தந்தையான இவர், “எனது குடும்பம், மனைவி, பிள்ளைகளைக் காண எனது மனம் ஏங்குகிறது. எனவே, எனக்கு நிம்மிதியையும் அமைதியையும் தரும் ஒரே விஷயம் கலை,” என்று உருக்கமாகக் கூறினார்.

திரு பரமசிவத்திற்குச் சொந்த ஊரானது தமிழகத்தின் கடலூர் மாவட்டம், பெரியநெசலூர். கடந்த ஏழாண்டுகளாக இவர் ஊருக்குச் செல்லவில்லை.

சிங்கப்பூரில் பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர்களின் கதைகளை எடுத்துக்கூறும் ‘சிங்கப்பூர் சோனட்ஸ்’ எனும் புதிய காணொளித் தொடர் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. அத்தொடரின் ஒரு பகுதியாக திரு பரமசிவத்தின் கதை இடம்பெறுகிறது.

தகவல் தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையத்துடனான பங்காளித்துவ முயற்சியில் சிங்கப்பூர் பிரஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனம் இந்தக் காணொளித் தொடரைத் தொடங்கியுள்ளது. ‘வெரிட்டே ப்ரொடக்‌ஷன்ஸ்’ எனும் தயாரிப்பு நிறுவனம் இந்தக் காணொளிகளைத் தயாரித்துள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!