பிள்ளைப் பராமரிப்புக்கு மாற்று ஏற்பாடுகளை நாடும் இளம் பெற்றோர் அலுவலகம் திரும்புவதால் மாறும் தேவை

வீட்டி­லி­ருந்து வேலை செய்­த­வர்­கள் கடந்த திங்­கட்­கி­ழமை முதல் வேலை செய்ய அலு­வ­ல­கத்­துக்­குத் திரும்­ப­லாம் என்ற அறி­விப்பு வெளி­யா­ன­தி­லி­ருந்து குழந்­தைப் பரா­ம­ரிப்­புப் பொருள்­க­ளின் தேவை வெகு­வாக உயர்ந்­தி­ருக்­கிறது.

இம்­மா­தம் 6ஆம் தேதி முதல் அலு­வ­ல­கங்­க­ளுக்­குச் செல்­வோ­ரின் எண்­ணிக்­கையை அதி­க­ரிக்­க­லாம் என கொவிட்-19 பர­வ­லைக் கட்­டுப்­ப­டுத்­தும் அமைச்­சு­கள்நிலை பணிக்­கு­ழு­வின் இணைத் தலைவர் அமைச்சர் லாரன்ஸ் வோங் கடந்த மாதம் 24ஆம் தேதி அறி­வித்­தார்.

அத­னைத் தொடர்ந்து, தாய்ப்­பால் சேக­ரிக்­கும் கரு­வி­க­ளின் (கைகளில் தூக்­கிச் செல்­லும் அள­வி­லான சிறிய ரக பம்­பு­கள்) விற்­பனை 300% அதி­க­ரித்­துள்­ளது.

அதே­போல, குழந்­தைக் கண்­கா­ணிப்­புச் சாத­னங்­க­ளின் விற்­

ப­னை­யும் 250% அதி­க­ரித்­துள்­ளது என ட்ரெக்­வியூ எனும் உள்­ளூர் நிறு­வ­னம் தெரி­வித்­துள்­ளது.

தங்­க­ளது வாடிக்­கை­யா­ளர்­களில் பலர் இளம் பெற்­றோர் எனக் குறிப்­பிட்ட அந்த நிறு­வன இயக்­கு­நர் எல்­வின் லிம், பெரும்­பா­லா­னோர் வீட்­டி­லி­ருந்­த­ப­டியே தொழில்­நுட்­பத்­தின் உத­வி­யு­டன் பணி­யாற்றி வந்­த­தா­க­வும் தற்­போது வேலைக்­குத் திரும்­பு­வதை முன்­னிட்டு, இத்­த­கைய பொருள்­களை அதி­கம் வாங்­கு­வ­தா­க­வும் குறிப்­பிட்­டார்.

பாலர்­பள்­ளி­கள், குழந்­தைப் பரா­ம­ரிப்பு நிலை­யங்­கள், மாண­வர் பரா­ம­ரிப்பு நிலை­யங்­களில் பிள்­ளை­க­ளைச் சேர்க்­க­வும் பல பெற்­றோர் ஆர்­வம் காட்டி வரு­வ­தா­க­வும் ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரி­வித்­தது.

பிப்­ர­வரி மாதத்­து­டன் ஒப்­பி­டு­கை­யில், மார்ச் மாதத்­தில் மாண­வர் சேர்க்கை 200 விழுக்­காடு அதி­க­ரித்­தி­ருப்­ப­தாக சிங்­கப்­பூ­ரில் 30 கிளை­க­ளைக் கொண்­டி­ருக்­கும் மாண­வர் பரா­ம­ரிப்பு மற்­றும் பாலர் பரா­ம­ரிப்பு நிறு­வ­ன­மான நாஸ்­கேன்ஸ் தெரி­வித்­தது. மல்­பெர்ரி லேர்­னிங்ஸ் எனும் பாலர்­பள்ளி மற்­றும் குழந்­தைப் பரா­ம­ரிப்பு நிலை­யத்­தின் கிளை­க­ளி­லும் அண்­மைய வாரங்­களில் பிள்­ளை­கள் சேர்க்கை 30 முதல் 50 விழுக்­காடு வரை உயர்ந்­தி­ருக்­கிறது.

இவ்­விரு பரா­ம­ரிப்பு நிலை­யங்­க­ளை­யும் நடத்­தும் குளோ­பல் எட்­யூ­ஹப் நிறு­வ­னத்­தின் தலைமை செயல்­முறை அதிகாரி பெ யி ஹான் குறிப்­பிட்­டார்.

அதே­போல இல்­லப் பணிப்­பெண்­க­ளுக்­கான தேவை­யும் அதி­க­ரித்­தி­ருக்­கிறது. அரசு ஊழி­ய­ரான 33 வயது சங்­கீதா, வீட்­டி­லி­ருந்­த­படி வேலை செய்ய அனு­ம­திக்­கப்­பட்ட கால­கட்­டத்­தில் வேலைக்­கி­டையே, தன்­னு­டைய இரு பிள்­ளை­க­ளை­யும் பணிப்­பெண் இல்­லா­மல் தாமே கவ­னித்­துக்­கொண்­டார்.

தற்­போது அலு­வ­ல­கம் திரும்ப வேண்­டிய சூழல் நில­வு­வ­தால் மியன்­மா­ரைச் சேர்ந்த பணிப்­பெண்ணை வேலைக்கு அமர்த்தி இருக்­கி­றார் நான்கு மற்­றும் ஆறு வய­துப் பிள்­ளை­க­ளின் தாயான அவர்.

செல்­லப்­பி­ரா­ணி­களை வைத்­தி­ருப்­போ­ரும் அவற்­றைப் பரா­ம­ரிக்க, பார்த்­துக்­கொள்ள மாற்று ஏற்­பா­டு­களை நாடி வரு­கின்­ற­னர்.

அவற்றுக்கான பொம்மைகள், கண்காணிப்புச் சாதனங்கள் போன்றவற்றின் விற்பனையும் அதிகரித்துள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!