கோ. சாரங்கபாணியின் பிறந்தநாளை கொண்டாடும் ‘தளபதி’

தமிழ் முரசு நாளி­த­ழின் நிறு­வ­ன­ரும் சிங்­கப்­பூர் இந்­தி­யச் சமூ­கத்­தின் முன்­னோ­டித் தலை­வர்­களில் ஒரு­வ­ரு­மான தமி­ழ­வேள் கோ. சாரங்­க­பா­ணி­யின் 118வது பிறந்­த­நாள் இன்று. அத­னை­யொட்டி, தமி­ழ­வேள் சாரங்­க­பா­ணி­யு­டன் அணுக்­க­மா­கப் பழ­கிய அனு­ப­வ­மு­டைய அவ­ரது ‘தள­பதி’ என்று தம்மை பெரு­மை­யு­டன் அடை­யா­ளப் படுத்­திக்­கொள்­ளும் 80 வயது திரு ப. தியா­க­ரா­ஜன் இன்­றைய தினத்தை இனிப்­பு­டன் கொண்­டாட உள்­ளார்.

லிட்­டில் இந்­தி­யா­வின் மையப் பகு­தி­யில் எண் 143 டன்­லப் ஸ்தி­ரீட் முக­வ­ரி­யில் புதி­தாக உத­ய­மான தமிழ் புத்­த­கக் கடை­யில் இன்று காலை 11 மணி­யி­லி­ருந்து இனிப்­புப் பண்­டங்­களை வழங்கி பொது மக்­க­ளுக்கு தமி­ழ­வேள் பற்­றிய விளக்­கங்­கள் அளிக்க இருப்­ப­தாக அவர் கூறி­னார்.

“தமி­ழ­வே­ளின் பிறந்­த­நாள் கொண்­டா­டப்­ப­ட­வேண்­டிய தினம் என்­பது மட்­டு­மல்­லா­மல் இளம் தலை­மு­றை­யி­ன­ருக்கு அந்த சமூ­கத் தலை­வ­ரைப் பற்­றிய விழிப்­பு­ணர்வை ஏற்­ப­டுத்த முனை­ய­வேண்­டும் என்ற ஆசை எனக்கு,” என்­றார் திரு தியா­க­ரா­ஜன்.

தமி­ழ­வேள் வழி­ந­டத்­திய தமி­ழர் திரு­நாள் நிகழ்ச்­சி­கள் பல­வற்­றில் கலந்­து­கொண்­டுள்­ளது மட்­டு­மல்­லா­மல் தொண்­டர் என்ற முறை­யில் அவ­ருக்­கான உத­வி­க­ளைப் பக்­கத்­தில் இருந்தே செய்­துள்ள நினை­வ­லை­க­ளைப் பகிர்ந்­தார்.
 

“சிங்­கப்­பூ­ரில் இந்­தி­யர்­க­ளின் நல­னுக்­கா­க­வும் தமிழ்­மொ­ழி­யின் வளர்ச்­சிக்­கா­க­வும் தமிழ் முர­சு, தமி­ழ­வே­ளின் பங்­க­ளிப்­பு ஏராளம்,” என்று புக­ழா­ரம் சூட்­டிய அவர், சில ஆண்­டு­க­ளுக்கு முன்பு ‘தமி­ழ­வே­ளும் நானும்’ என்ற நூலை எழுதி வெளி­யிட்­டுள்­ள­தைக் குறிப்­பிட்­டார்.

1903ஆம் ஆண்டு ஏப்­ரல் 20ஆம் தேதி தமிழ்­நாட்­டின் தஞ்­சா­வூர் விஜ­ய­பு­ரத்தில் பிறந்த தமி­ழ­வேள் சாரங்­க­பாணி, 1924ஆம் ஆண்டு சிங்­கப்­பூ­ருக்கு வந்­தார்.

“இந்­நாட்­டில் குடி­யு­ரி­மை பெறு­வ­தற்கு இந்­தி­யர்­களை அவர் ஊக்­கு­வித்­தார். சீர்­தி­ருத்­தச் சிந்­த­னை கொண்ட அவர், தமது கருத்­து­க­ளைக் கொண்டு சமூ­கத்­தின் எழுச்­சிக்­காக ஊட­கம் மூலம் பரப்­பி­னார்,” என்று கூறி­னார் தமிழ் முர­சில் 1958ஆம் ஆண்டு முதல் பணி­யாற்­றி­வ­ரும் திரு. எம் நட­ரா­சன், 81.

“சீர்­தி­ருத்­தம், முன்­னேற்­றம், தமிழ் முரசு, தேசத் தூதன் போன்ற தமிழ் செய்­தித்­தாட்­க­ளை­யும் ‘இந்­தி­யன் டெய்லி மெயில்’ எனும் ஆங்­கில பத்­தி­ரி­கை­யை­யும் அவர் தோற்றுவித்­தார்,” என்­றும் திரு நட­ரா­சன் கூறி­னார்.

“1950களில் கிட்­டத்­தட்ட 28 தமிழ்ச் சங்­கங்­களை ஒன்­றி­ணைத்து தமி­ழர் பிர­தி­நி­தித்­துவ சபை என்று நிறு­வி­னார். தமி­ழர் சீர்­தி­ருத்­தச் சங்­கத்­தை­யும் நிறுவி அவற்­றின் மூலம் இந்­திய சமூ­கத்­தின் நல­னுக்­கா­கப் பங்­காற்­றி­னார்,” என்­றும் அவர் சொன்­னார்.

“அஞ்­சாத சிங்­கம் போன்ற அவ­ரது குண­மும் அவ­ரது கம்­பீர தோற்­ற­மும் இன்­னும் என் கண் முன்­னால் நிற்­கிறது,” என்று தமி­ழ­வே­ளைப் பற்­றிய நினை­வு­க­ளைக் கண்­ணீர் மல்­கப் பகிர்ந்­தார் திரு நட­ரா­சன்.

“தமிழ் கல்­விக்­கும் தமிழ் படைப்­பி­லக்­கி­யத்­துக்­கும் பாடு­பட்ட தலை­வர் தமி­ழ­வேள்,” என்று புக­ழா­ரம் சூட்­டி­னார் பிர­பல உள்­ளூர் கவி­ஞர் க.து.மு. இக்­பால், 81. தமது பதின்ம வய­தில் தமிழ் முரசு மூலம் அவர் கற்ற வெண்பா இலக்­க­ணமே இன்­று­வரை அவர் எழு­தும் கவி­தை­

க­ளுக்கு உறுது­ணை­யாக இருப்­ப­தாக அவர் கூறி­னார்.

“நான் தமி­ழ­வேள் தோற்­று­வித்த மாண­வர் மணி மன்­றத்­தில்

எழு­தித்தான் எனது எழுத்­துப் பணி­யைத் தொடங்­கி­னேன். சிங்­கப்­பூ­ரின் பல உள்­ளூர் எழுத்­தா­ளர்­க­ளின் ஆரம்­பம் அதி­லி­ருந்­து­தான் தொடங்கியது,” என்­றார் திரு

இக்­பால்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!