தொற்று அபாயத்தைக் குறைக்கும் இரு மருந்துகள்

கிரு­மித்­தொற்று அதி­க­முள்ள இடங்­களில் தொண்டையில் தெளிக்கும் மருந்­தும் மலே­ரி­யா­வுக்கு எதி­ரான ஹைட்­ரோக்­சி­கு­ளோ­ரோ­கு­வின் மருந்­தும் கொவிட்-19 தொற்று அபா­யத்­தைக் குறைக்க உதவும்.

உள்ளூரில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இது கண்டறியப்பட்டு உள்ளது.

கடந்த ஆண்டு மே மாதம் துவாஸ் சவுத் தங்­கு­மி­டத்­தில் தங்­கி­யி­ருந்த 3,000க்கும் மேற்­பட்ட வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளி­டம் அந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மூன்று முறை போவி­டோன்- ஐயோ­டின் தொண்டை தெளிப்­பான் மருந்து அல்­லது நாளுக்கு ஒரு ஹைட்­ரோக்­சி­கு­ளோ­ரோ­கு­வின் மாத்­திரை எடுத்­துக் கொண்டதால் கொவிட்-19 தொற்றை ஏற்­ப­டுத்­தும் அபா­யம் இரு­பது விழுக்­காடு குறைந்தது.

தேசிய பல்­க­லைக்கழக மருத்து­வ­ம­னை­யின் நரம்­பி­யல் சிகிச்சைப் பிரி­வின் மூத்த ஆலோ­சகரும் இணைப் பேரா­சி­ரி­யருமான ரேமண்ட் சீட் தலை­மை­யில் தேசிய பல்­க­லைக்­க­ழக சுகா­தார அமைப் பின் மருந்­தக ஆய்­வா­ளர்­கள் இந்த ஆய்வை மேற்­கொண்­ட­னர்.

தொற்­று­நோய் நிபு­ணர்­க­ளான பேரா­சி­ரி­யர் பால் தம்­பையா, இணைப் பேரா­சி­ரி­யர் அலெக்ஸ் குக், டாக்­டர் ஏமி குவெக், இணைப் பேரா­சி­ரி­யர் மிக்­கா­யல் ஹார்ட்­மேன் ஆகி­யோ­ரும் ஆய்­வு குழு­வில் இடம்­பெற்­றி­ருந்­த­னர்.

ஆய்வு பற்றி பேசிய பேரா­சி­ரி­யர் சீட், "டாக்­டர் குவெக்கும் பேரா­சி­ரி­யர் ஹார்ட்­மேனும் நானும் வெளி­நாட்டு ஊழி­யர் தங்­கு­மி­டங்­களில் தொண்­டூ­ழி­யம் ெசய்துவந்தோம். அப்­போது தொற்­றால் பாதிக்­கப்­பட்டு பரா­ம­ரிப்­பு தேவைப்­படும் ஊழி­யர்­க­ளுக்கு கொவிட்-19 பரி சோதனை, சுகா­தார சோத­னை­களை நடத்தினோம்," என்­றார்.

"கொள்­ளை­நோய் பர­விய ஆரம்ப கட்டத்தில் ஊழி­யர் தங்கு­ வி­டு­தி­களில் அதி­க­மா­னோர் பாதிக்­கப்­பட்­ட­னர். அப்­போ­து­தான் பேரா­சி­ரி­யர் தம்­பையா, பேரா­சி­ரி­யர் குக்­கு­டன் சேர்ந்து அத்­த­கைய ஆய்வு ஒன்றை நடத்­தும் யோசனை தோன்­றி­யது," என்றும் அவர் கூறினார்.

தற்­போது எளி­தில் கிடைக்­கக்­கூ­டிய போவி­டோன்-ஐயோ­டின், ஹைட்­ரோக்­சி­கு­ளோ­ரோ­கு­வின் போன்ற மருந்­து­களை மீண்­டும் பயன்­ப­டுத்­து­வது கிரு­மிப் பர­வ­லைக் கட்­டுப்­ப­டுத்­தும் நடை­மு­றைக்கு ஏற்ற வழி­யா­கும்.

குறிப்­பாக தொற்­றுச் சம்­ப­வங்­கள் அதி­முள்ள இடங்­களில் பேரு­த­வி­யாக இருக்­கும் என்று பேரா­சி­ரி­யர் சீட் குறிப்­பிட்­டார்.

தொண்டையில் தெளிக்கப்படும் மருந்து சாதா­ர­ண­மாக மருந்­துக் கடை­களில் கிடைக்­கும்.

ஆனால் ஹைட்­ரோக்­சி­கு­ளோ­ரோ­கு­வின் மாத்­தி­ரைகளை வாங்க மருத்­து­வ­ரின் சீட்டு தேவைப்படும்.

எந்தவிதமான தொற்று அறி குறியும் இல்லாத சராசரி 33 வய­துடைய ஆரோக்­கி­ய­மான 3,037 இளை­யர்­க­ளி­டம் ஆய்வு நடத்­தப்­பட்­டது. ஊனீரியல் சோதனையில் இவர்கள் தொற்றால் பாதிக்கப்பட வில்லை என்பது ஆய்வு மூலம் தெரிய வந்தது.

தங்­கு­வி­டு­தி­களில் தங்­கி­யுள்ள பெரும்­பா­லோர் இந்­தியா, பங்­ளா­தேஷ் ஆகிய நாடு­களில் இருந்து வந்­த­வர்­கள்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!