உறுப்பினர்களுக்கு உதவும் என்டியுசியின் $250 மி. முதலீடு

உறுப்பினர்களுக்கு நிதி உதவித் திட்டங்கள், மானியங்கள் மூலமாக உதவும் நோக்கத்தில் தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் (என்டியுசி) ஓர் அறநிறுவனத்தை அமைத்து அதில் $250 மில்லியனை ஆரம்ப தொகையாக முதலீடு செய்துள்ளது.

இது பற்றி நேற்று நடைபெற்ற மேன தின பேரணி உரையில் அறிவித்த என்டியுசியின் தலைமைச் செயலாளர் இங் சீ மெங், கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்ட என்டியுசி அறநிறுவனம், தேசிய தொழிற்சங்க காங்கிரசின் நிதி உதவித் திட்டங்களுக்கும் மானியங்களுக்கும் ஒரு நிலையான வருமானத்தை ஈட்டித் தரும் என்றார்.

தற்போது இந்த உதவித் திட்டங்களுக்கும் மானியங்களுக்கும் நன்கொடையாளர்கள் நிதி ஆத ரவு வழங்குகிறார்கள். சிங்கப்பூர் தொழிலாளர் அறநிறுவனம், என்டியுசி சமூக நிறுவனங்கள், என்டியுசியுடன் இணைந்த ஊழியர் சங்கங்கள், தனியார் துறை நிறுவனங்கள், தனிநபர்கள் ஆகியோரிடமிருந்து நிதியாதரவு கிடைத்து வருகிறது.

கொவிட்-19 கொள்ளைநோய் தாக்கம் தொடங்கியதிலிருந்து, தனது உறுப்பினர்களின் தேவைகள் அதிகரித்துள்ளன என்றும் என்டியுசியின் நன்கொடையாளர்களின் பங்களிப்பும் இயல்பாகவே குறைந்து விட்டது என்றார் திரு இங்.

"புதிதாக தொடங்கப்பட்டுள்ள அறநிறுவனம், இந்த முயற்சிகளுக்கு ஊக்கமளிப்பதாக இருக்கும். தனது உறுப்பினர்களின் தேவைகளை என்டியுசி பொருளி யல் ரீதியில் சிரமமான காலத்திலும் கவனித்துக்கொள்ள, அறநிறுவனம் அதற்கு ஒரு நிலையான வருமானத்தை வழங்கி வரும்," என்றும் திரு இங் விவரித்தார்.

மாறி வரும் தனது உறுப்பினர்களின் தேவைக்கேற்ப தனது உதவித் திட்டங்களை மாற்றியமைக்கவும் அறநிறுவனம் என்டியுசிக்கு ஆதரவளிக்கும் என்றும் என்டியுசி தெரிவித்தது.

"உறுப்பினர்களின் நல்வாழ்வு, அவர்களின் வேலையிடச் சூழல், அல்லது சமூக மற்றும் பொருளியல் நிலை ஆகியவற்றை மேம்படுத்த முயற்சிகள் எடுக்கப்படும்.

"மேலும் குறைந்த வருவாய் உறுப்பினர்களின் பிள்ளைகள், வாழ்க்கையில் ஒரு நல்ல தொடக்கத்தைப் பெறவும் நல்ல கல்வி நிலையை அடையவும் உதவிகள் வழங்கப்படும்," என்றும் என்டியுசி தனது அறிக்கையில் மேலும் குறிப்பிட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!