‘வெளிநாட்டு ஊழியர் நடமாட்டக் கட்டுப்பாட்டுத் தளர்வு தற்காலிமாக நிறுத்திவைக்கப்படும்’

வெளிநாட்டு ஊழியர்களின் நடமாட்டக் கட்டுப்பாட்டுகளைத் தளர்த்தும் திட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்றும் ஊழியர் தங்குவிடுதியிலும் ஊழியர்களின் தாய்நாடுகளிலும் கிருமித்தொற்று சம்பவங்கள் அதிகரித்திருப்பதால் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மனிதவள இரண்டாம் அமைச்சர் டான் சீ லெங் தெரிவித்துள்ளார்.
“வெளிநாட்டு ஊழியர்கள், தொழில்துறையினர் மற்றும் நமது சுகாதாரம், வாழ்வாதாரங்களைப் பாதுகாப்பது நமது பொறுப்பு என்பதால் இந்நடவடிக்கை அவசியமாகிறது,” என்று நேற்று சிலேத்தார் தடுப்பூசி நிலையத்துக்கு வருகை மேற்கொண்ட டாக்டர் டான் தெரிவித்தார்.

இம்மாதம் 15ஆம் தேதி டாக்டர் டான், புதிய மனிதவள அமைச்சர் பொறுப்பை ஏற்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
“அனைவரும் சமூகத்தில் மெத்தனப்போக்குடன் இருந்தால் இரண்டாவது கிருமித்தொற்று அலை வருவதைத் தடுக்க முடியாது. அந்த நிலையை நாம் ஒருபோதும் அனுமதிக்க முடியாது. ஆகவே, ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கிருமித்தொற்று நிலைமை மேம்படும் வரை கட்டுப்பாட்டு தளர்வுகளை ஒத்திவைக்க முடிவெடுத்தோம்,” என்று டாக்டர் டான் விவரித்தார்.

சில தங்குவிடுதியில் உள்ள ஊழியர்கள் மாதத்துக்கு ஒரு முறை சமூக இடங்களுக்குச் செல்லலாம் என்ற சோதனைத் திட்டம் கடந்த ஆண்டு டிசம்பரில் அறிவிக்கப்பட்டது. அதை ஏப்ரல் மாதத்தில் சோதித்துப் பார்க்க திட்டமிடப்பட்டிருந்தது.

டாக்டர் டானும் நேற்று தடுப்பூசி நிலையத்துக்குச் சென்றிருந்த மனிதவள அமைச்சர் ஜோசஃபின் டியோ, சிங்கப்பூர் தற்போது உச்ச விழிப்புநிலையில் வைக்கப்பட்டுள்ளது என்றார்.
“எவ்வித தளர்வு நடவடிக்கைகளையும் அவசரப்பட்டு அமல்படுத்த வேண்டாம் என்று நினைக்கிறேன். முதலாளிகள், ஊழியர்கள் ஆகியோரின் தேவைக்கேற்ப, பொழுதுபோக்கு நடவடிக்கைகள் உட்பட அவர்களுக்கு மிகவும் கவனமாக வழங்க விரும்புகிறோம்,” என்றும் கூறினார் திருவாட்டி டியோ.
வெஸ்ட்லைட் உட்லண்ட்ஸ் தங்குவிடுதியில் அண்மையில் புதிய கிருமித்தொற்றுக் குழுமங்கள் தலையெடுத்ததை அடுத்து, அங்கு கூடுதல் கொவிட்-19 பரிசோதனைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

“41,000க்கு மேற்பட்ட வெளிநாட்டு ஊழியர்களுக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இது இங்கு பணியாற்றும் ஒட்டுமொத்த வெளிநாட்டு ஊழியரணியில் 13 முதல் 15%. மக்கள் தொகையில் தொடரும் தடுப்பூசி போடும் திட்டத்துடன் ஊழியர்களுக்கும் தடுப்பூசி போடும் நடைமுறை தொடரும்,” என்றும் அமைச்சர் டாக்டர் டான் சொன்னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!