கொவிட்-19: மாது மரணம்; உயர்நிலைப் பள்ளியில் பரிசோதனை

கொவிட்-19 கிருமித்தொற்றால், 88 வயது சிங்கப்பூர் மாது கடந்த சனிக்கிழமை இரவு உயிரிழந்தார். சிங்கப்பூரில் கொவிட்-19 நோயால் மரணமடைந்த 31வது நபர் அவர்.

உயிரிழந்த சிங்கப்பூர் மாது, கடந்த மாதம் 14ஆம் தேதி டான் டோக் செங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொவிட்-19 தொற்றியது ஏப்ரல் 28ஆம் தேதியன்று கண்டுபிடிக்கப்பட்டது. தேசிய தொற்றுநோய் தடுப்பு நிலையம் அவரது குடும்பத்தைத் தொடர்பு கொண்டிருக்கிறது.

இவ்வேளையில், எட்ஜ்ஃபீல்ட் உயர்நிலைப் பள்ளி மாணவிக்கு கொவிட்-19 தொற்றியதைத் தொடர்ந்து, அப்பள்ளியுடன் தொடர்புடையவர்களுக்கு நேற்று கொவிட்-19 பரிசோதனைகள் தொடங்கின.

இவ்வேளையில் எட்ஜ்ஃபீல்ட் உயர்நிலைப் பள்ளியில் கொவிட்-19 பரிசோதனைகள் நேற்று தொடங்கின. மாணவர்கள், ஆசிரியர்கள், பணியாளர்கள், கடைக்காரர்கள் பிற்பகலில் பரிசோதனைகளுக்காக வெவ்வேறு நேரங்களில் சென்றனர். அவர்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்துக் காத்திருந்தது காணப்பட்டது.

நேற்று நண்பகல் நிலவரப்படி, சிங்கப்பூரில் 39 பேருக்கு கிருமி தொற்றியதாக நேற்று அறிவிக்கப்பட்டது. அதில் 14 சம்பவங்கள் சமூகத்துடன் தொடர்புடையவை. தங்குவிடுதிகளில் உள்ள ஊழியர்கள் யாருக்கும் தொற்று இல்லை.

வெளிநாட்டிலிருந்து வந்த 25 பேருக்கு கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டு, அவர்களுக்கு வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவின்பேரில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 10 பேர் சிங்கப்பூரர்கள் அல்லது நிரந்தரவாசிகள். 3 பேர் வெளிநாட்டு இல்லப் பணிப்பெண்கள்.

டான் டோக் செங் மருத்துவமனையில் ஏப்ரல் 18லிருந்து உள்சிகிச்சை பெற்றவர்களுக்கான கட்டுப்பாடுகள் குறித்து மருத்துவ மனைகள் அவற்றின் சமூக ஊடகப் பக்கங்களில் நேற்று அறிவித்தன. அலெக்சாண்ட்ரா, சாங்கி, தேசிய பல்கலைக்கழகம், இங் டெங் ஃபோங், கூ டெக் புவாட், ஜூரோங் சமூக மருத்துவமனை, கேகே மகளிர், சிறார் மருத்துவமனை, சிங்கப்பூர் பொது மருத்துவமனை ஆகியவையே அவை.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!