இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்து ஆட்டக்காரருக்கு கொலை மிரட்டல்: சிங்கப்பூரர் மீது குற்றச்சாட்டு

இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் போட்டியில் போட்டியிடும் பிரைட்டன் குழுவின் ஆட்டக்காரரான நீல் மோபேக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக சிங்கப்பூரைச் சேர்ந்த பதின்மவயதினர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. மோபேயின் குடும்பத்தினரையும் கொலை செய்யப்போவதாக 19 வயது டெரிக் இங் டிரென் மிரட்டியதாக கூறப்படுகிறது.

சிங்கப்பூரில் இருந்தபடி இன்ஸ்டகிராம் வாயிலாக இங் இந்த மிரட்டல்களை விடுத்ததாக அறியப்படுகிறது.

கடந்த ஆண்டு ஜூன் மாதத்திலும் ஜூலை மாதத்திலும் மிரட்டல்கள் விடுக்கப்பட்டதாகவும் அப்போது மோபேயும் அவரது குடும்பத்தினரும் பிரிட்டனில் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்தக் கொலை மிரட்டல்களை விடுத்தவர் சிங்கப்பூரில் இருப்பது தெரியவந்ததும் சிங்கப்பூர் போலிஸ் படையிடம் இங்கிலிஷ் பிரிமியர் லீக் புகார் செய்தது.

இங்கிற்கு எதிரான வழக்கு விசாரணை இம்மாதம் 31ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தொல்லை விளைவித்த குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஆறு மாதங்கள் சிறைத் தண்டனையும் $5,000 வரை அபராதமும் விதிக்கப்படலாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!