புதிதாக 17 சம்பவங்கள்; 8 பேருக்கு டான் டோக் செங் மருத்துவமனை கிருமித்தொற்றுக் குழுமத்துடன் தொடர்பு

சமூக அள­வில் 10 பேர் உட்­பட சிங்­கப்­பூ­ரில் நேற்று புதி­தாக 17 பேருக்கு கொரோனா கிரு­மித்­தொற்று உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது.

சமூ­கத்­தில் தொற்று உறு­தி­யான அந்த 10 பேரில் எட்­டுப் பேர் டான் டோக் செங் மருத்­து­வ­மனை கிரு­மித்­தொற்­றுக் குழு­மத்­து­டன் தொடர்­பு­டை­ய­வர்­கள்.

அந்த மருத்­து­வ­மனை நோயா­ளி­கள் மற்­றும் பணி­யா­ளர்­க­ளுக்கு நடத்­தப்­பட்ட கிரு­மித்­தொற்று பரி­சோ­த­னை­யில் அவர்­க­ளுக்­குத் தொற்று உறு­தி­யா­னது.

அந்த எட்­டுப் பேரை­யும் சேர்த்து டான் டோக் செங் மருத்­து­வ­மனை கிரு­மித்­தொற்­றுக் குழு­மத்­து­டன் 35 பேருக்­குத் தொடர்­புள்­ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சிங்­கப்­பூ­ரில் தற்­போது உள்ள ஒன்­பது தொற்­றுக் குழு­மங்­களில் டான் டோக் செங் மருத்­து­வ­மனை தொற்­றுக் குழு­மமே ஆகப் பெரி­யது.

சமூ­கத்­தில் புதி­தாக தொற்று உறு­தி­யான எஞ்­சிய இரு­வர், ஏற்­கெ­னவே தொற்று உறு­திப்­ப­டுத்­தப்­பட்­ட­வர்­க­ளு­டன் நெருங்­கிய தொடர்­பில் இருந்­த­வர்­கள்.

அவர்­கள் ஏற்­கெ­னவே தனிமை உத்­த­ர­வின்­கீழ் வைக்­கப்­பட்­டு­விட்­ட­னர்.

இந்­நி­லை­யில், வெளி­நா­டு­களில் இருந்து சிங்­கப்­பூ­ருக்கு வந்த ஏழு பேருக்­கும் தொற்று உறு­தி­யா­கி­யுள்­ளது. அவர்­கள் இங்கு வந்­த­வு­டன் வீட்­டில் தங்­கும் கட்­டாய உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டுள்­ளது.

வெளி­நாட்டு ஊழி­யர் தங்­கு­விடுதி­களில் புதி­தாக எவ­ருக்­கும் தொற்று இல்லை. சிங்­கப்­பூ­ரில் கிருமித் ­தொற்­றால் பாதிக்­கப்­பட்­டோர் மொத்த எண்­ணிக்கை 61,235 ஆக உள்­ளது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!