மீள்திறனை மேம்படுத்தும் புதிய திட்டம்

நீ ஆன் பல­து­றைத் தொழிற்­

கல்­லூரி அறி­மு­கப்­ப­டுத்­தும் திட்­டம் ஒன்­றின்­கீழ் மாண­வர்­கள் தங்­க­ளு­டைய பிர­தான பாடங்­க­ளைத் தவிர்த்து மேலும் ஒரு பாடத்­தைப் பயில வாய்ப்பு வழங்­கப்­ப­டு­கிறது.

மாண­வர்­க­ளின் ஆற்­றலை மேம்­ப­டுத்­த­வும் அவர்­க­ளுக்­கான வேலை வாய்ப்­பு­களை அதி­க­ரிக்­க­வும் இந்­தத் திட்­டம் கடந்த மாதம் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்­டது.

தனிப்­பட்ட கற்­றல் பாதை திட்­டத்­தின்­கீழ் ஏறத்­தாழ 1,000 இரண்­டாம் ஆண்டு பட்­ட­யப் படிப்பு மாண­வர்­கள் ஈடு­பட்டு பல­ன­டை­வர் என்று நீ ஆன் பல­து­றைத் தொழிற்­கல்­லூரி கூறி­யது.

நிபு­ணத்­து­வத் திறன்­கள், தொழில்­மு­னைப்பு, உல­க­ளா­வி­ய தயார்­நிலை, சமூ­கத் தலை­மைத்­து­வம் ஆகிய கற்­றல் பாதை­களில் ஒன்றை மாண­வர்­கள் தெரிவு செய்­ய­லாம்.

அதன்­மூ­லம் தர­வுப் பகுப்­பாய்வு, வெளி­நாட்டு மொழி­கள் உட்­பட 10 பாடங்­களில் ஒன்­றைப் பயி­ல­லாம்.

ஒவ்­வொரு பாடத்­தை­யும் நிறைவு செய்ய மூன்று கற்­றல் பிரி­வு­க­ளைப் பூர்த்தி செய்ய வேண்­டும்.

ஒவ்­வொரு கற்­றல் பிரி­வு வகுப்பும் ஒவ்­வொரு தவ­ணை­

யி­லும் 45லிருந்து 60 மணி நேரத்­துக்கு நடத்­தப்­படும். மூன்று ஆண்டு பட்­ட­யக் கல்­வியை முடித்து பட்­ட­யச் சான்­றி­த­ழைப் பெறும்­போது மாண­வர்­க­ளுக்கு அவர்­கள் கற்ற மேலும் ஒரு பாடத்­துக்­கான சான்­றி­த­ழும் வழங்­கப்­படும். 2023 கல்வி ஆண்­டில் இந்த அறி­மு­கத் திட்­டம் முழு­மை­யாக நடை­மு­றைப்­ப­டுத்­தப்­படும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

புதிய நடை­மு­றை­யின்­படி குறைந்­தது ஒரு கற்­றல் பிரி­வைப் பூர்த்தி செய்­தால் மட்­டுமே பட்­ட­யச் சான்­றி­தழ் பெற முடி­யும்.

நேற்று நடை­பெற்ற நீ ஆன் பல­து­றைத் தொழிற்­கல்­லூரி பட்ட

மளிப்பு விழா­வில் கலந்­து­கொண்ட கல்வி அமைச்­சர் லாரன்ஸ் வோங், புதிய திட்­டம் மாண­வர்­க­ளின் மீள்­தி­றனை மேம்­ப­டுத்­தும் என்­றும் புதிய வாய்ப்­பு­க­ளைப் பயன்

படுத்­திக்­கொள்­ளும் ஆற்­றலை அவர்­கள் பெறு­வர் என்­றும் கூறி­னார். பட்­ட­யச் சான்­றி­தழ் பெற்ற மாண­வர்­களை கொவிட்-19 நெருக்­க­டி­நிலை எவ்­வாறு பாதித்­தது என்­பது குறித்து அவர் கூறி­னார். இருப்­பி­னும், உல­க­ளா­வி­யப் பொரு­ளி­யல் மீண்­டு­வ­ரும் என்­றும் பல புதிய வாய்ப்­பு­கள் உரு­வா­கும் என்­றும் அமைச்­சர் வோங் குறிப்­பிட்­டார்.

“மாற்­றங்­களை எதிர்­கொள்­ள­வும் கிடைக்­கும் வாய்ப்­பு­க­ளைப் பயன்­ப­டுத்­திக்­கொள்­ள­வும் நீ ஆன் பல­து­றைத் தொழிற்­கல்­லூ­ரி­ அளித்த பயிற்சி உத­வும் என நான் நம்­பு­கி­றேன்,” என்­றார் திரு வோங்.

எதிர்­கா­லத்­தில் வேலை­யி­டங்­கள் தற்­போ­தைய நிலை­யை­விட மேலும் சவால்­மிக்­க­தாக இருக்­கும் என்று நீ ஆன் பல­து­றைத் தொழிற்­கல்­லூரி தலை­மை­யா­சி­ரி­யர்

கிளே­ரன்ஸ் டி தெரி­வித்­தார்.

“புதிய திட்­டம் மாண­வர்­க­ளுக்­குக் கூடு­தல் வேலை, கல்வி வாய்ப்­பு­களை அளிக்­கும். அது­மட்­டுல்­லாது, மாண­வர்­க­ளின் தனிப்­பட்ட, வாழ்க்­கைத் தொழில் மீள்­தி­றனை அது பலப்­ப­டுத்­தும் என்று அவர் கூறி­னார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!