ஸாக்கி: ஊழியர்களின் மனநலத்தைப் பேண ஆதரவு

கொவிட்-19 நோய்ப் பர­வலை அடுத்து வேலை செய்­யும் ஏற்­பா­டு­களில் மாற்­றங்­களை எதிர்­நோக்­கும் நிலை­யில், பணி­யி­டத்­தில் ஊழி­யர்­க­ளின் மன­ந­லம் குறித்த அக்­கறை அதி­க­ரித்து வரு­கிறது என்று மனி­த­வள மூத்த அமைச்­சர் ஸாக்கி முகம்­மது தெரி­வித்­துள்­ளார்.

"இத்­த­கைய சூழ­லில் ஊழி­யர்­களின் மன­ந­லப் பரா­ம­ரிப்­பி­லும் அதற்கு ஆத­ரவு வழங்­கு­வ­தி­லும் நிறு­வ­னங்­கள் பங்­க­ளித்து வரு­வது ஊக்­க­ம­ளிப்­ப­தாக உள்­ளது. 'வெள்ளி நாடா விரு­து­கள்' போன்ற திட்­டங்­கள் மூல­மாக நிறு­வ­னங்­களின் அம்­மு­யற்­சி­களை அங்­கீ­கரிக்­கி­றோம்," என்றார் திரு ஸாக்கி. 'ஸூம்' செயலி வழி­யாக நேற்று நடந்த 'நிறு­வ­னங்­க­ளுக்­கான வெள்ளி நாடா மன­நல விரு­து­கள் 2021' நிகழ்ச்­சி­யில் கலந்­து­கொண்டு பேசி­ய­போது அவர் இவ்­வாறு சொன்­னார்.

ஊழி­யர்­கள் மன­ந­ல­னைப் பேண அர­சாங்­கம் முன்­னு­ரிமை வழங்­கு­வ­தா­கக் குறிப்­பிட்ட திரு ஸாக்கி, கடந்த ஆண்டு நவம்­ப­ரில் அறி­மு­க­மான 'பணி­யி­டங்­களில் மன­நலத்­திற்­கான முத்­த­ரப்பு ஆலோ­ச­னைக் குழு', இரு மாதங்­க­ளுக்­கு­முன் அறி­மு­கம் கண்ட 'ஐவொர்க்­ஹெல்த் (iWorkHealth)' ஆகிய நட­வ­டிக்­கை­க­ளை­யும் சுட்­டிக்­காட்டி­னார். சுய­நிர்­வாக உள­வி­யல் சமூக சுகா­தார மதிப்­பீட்­டுக் கரு­வி­யான 'ஐவொர்க்­ஹெல்த்' மூலம் நிறு­வனங்­களும் அவற்றின் ஊழி­யர்­களும் மன­அ­ழுத்­தம் ஏற்­ப­டுத்­தும் கார­ணி­களை அடை­யா­ளம் காண­லாம்.

"உடல்­ந­லத்­தைப் போலவே மன­ந­ல­னும் முக்­கி­யம். ஊழி­யர்­களின் உற்­பத்­தித்­தி­ற­னில் அது குறிப்­பி­டத்­தக்க தாக்­கத்தை ஏற்­படுத்­தக்­கூ­டும்.

"நிறு­வ­னங்­கள் இதனை உணர்ந்து, தங்­க­ளது பணி­யி­டங்­களில் மன­ந­லம் சார்ந்த திட்­டங்­களை அறி­மு­கப்­ப­டுத்தி வரு­வது மகிழ்ச்சி அளிக்­கிறது," என்­றார் திரு ஸாக்கி.

சிங்­கப்­பூர் குடி­மைத் தற்­காப்­புப் படை, சிங்­கப்­பூர் துறை­முக ஆணை­யம் உட்­பட பல்­வேறு வழி­க­ளி­லும் மன­ரீ­தி­யாக ஆரோக்­கி­ய­மான பணி­யி­டச் சூழலை உரு­வாக்க நட­வடிக்கை எடுத்து வரும் 12 நிறு­வனங்­க­ளுக்கு நேற்­றைய நிகழ்­வில் வெள்ளி நாடா விரு­து­கள் வழங்­கப்­பட்­டன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!