சில்லறை விற்பனை உயர்ந்தது

சிங்­கப்­பூ­ரில் பொரு­ளி­யல் வளர்ச்சி மேம்­பட்டு வரும் அறி­கு­றி­யாக இங்­குள்ள சில்­லறை விற்­பனை கடந்த மாதத்­தை­விட வேக­மாக வளர்ச்சி கண்­டது. இவ்­வாண்டு மார்ச் மாத சில்­லறை விற்­பனை, கடந்த ஆண்டு மார்ச் மாதத்­து­டன் ஒப்­பி­டும்­போது 6.2% வளர்ச்சி கண்­டது.

இது கடந்த பிப்­ர­வரி மாதம் ஆண்டு அடிப்­ப­டை­யில் ஏற்­பட்ட 5.3% வளர்ச்­சி­யை­விட அதி­கம் என்று புள்­ளி­வி­வ­ரத் துறை அதன் அறிக்­கை­யில் கூறி­யது.

24 மாதங்­க­ளாக ஆண்­டுக்கு ஆண்டு அடிப்­ப­டை­யில் குறைந்­து­கொண்டே வந்த சில்­லறை விற்­ப­னை­யில் தொடர்ந்து இரண்­டா­வது மாத­மாக ஏற்­பட்­டுள்ள வளர்ச்சி இது.

கடந்த ஆண்டு மார்ச் மாதத்­தில் கொவிட்19 கிரு­மிப்­ ப­ர­வ­லால் சமூக இடை­வெளி நட­வ­டிக்­கை­களும் எல்­லைக் கட்­டுப்­பா­டு­களும் நடப்­புக்கு வந்­த­தால், விற்­பனை குறைந்­தது. சுற்­றுப்­ப­ய­ணி­க­ளின் வரு­கை­யும் அவர்­கள் பொருட்­களை வாங்­கு­வதும் வெகு­வா­கக் குறைந்­தி­ருந்­தது.

அத­னால் இவ்­வாண்டு மார்ச் மாதத்­தில் சில்­லறை வளர்ச்சி ஒப்பீட்டு அள­வில் நல்ல வளர்ச்­சி அ­டைந்­த­தாக புள்­ளி­வி­வ­ரத் துறை தெரி­வித்­தது.

கிட்­டத்­தட்ட எல்லா பிரி­வு­க­ளி­லும் சில்­லறை வர்த்­த­கம் பெரு­கி­யது. அதி­லும் கடி­கா­ரங்­கள், நகை­க­ளின் விற்­பனை ஆக அதி­க­மாக 60.2% உயர்ந்­தது.

அதற்கு அடுத்த நிலை­யில் ஆடை­கள், கால­ணி­க­ளின் விற்­பனை 35.6% அதி­க­ரித்­தது.

பொழு­து­போக்­குப் பொருட்­ களின் விற்­பனை 28.3% வளர்ச்­சி­யும் கணினி, தொலைத்­தொ­டர்­புச் சாத­னங்­க­ளின் விற்­பனை 19.9% வளர்ச்­சி­யும் கண்­டன. பெட்­ரோல் நிலை­யங்­களில் விற்­பனை 18.6 விழுக்­கா­டும் வாகன விற்­பனை 15.6 விழுக்­கா­டும் உயர்ந்­தன.

கடந்­தாண்டு மார்ச்­சு­டன் ஒப்­பி­டு­கை­யில் இவ்­வாண்டு மார்ச்­சில் அங்­கா­டிக் கடை­கள், பேரங்­கா­டி­கள் ஆகி­ய­வற்­றில் விற்­பனை 14% குறைந்­தது.

கடந்­தாண்டு பாது­காப்­பான இடை­வெளி நட­வ­டிக்­கை­கள் அறி­விக்­கப்­பட்­ட­தால் அதி­க­மா­ன­வர்­கள் வீட்­டில் இருந்­த­தைப் புள்­ளி­வி­வ­ரத் துறை சுட்­டிக்­காட்­டி­யது.

ஒப்­ப­னைப் பொருட்­கள், தனிப்­பட்ட பரா­ம­ரிப்­புப் பொருட்­கள், மருந்­துப் பொருட்­க­ளின் விற்­ப­னை ஆகியவை கடந்­தாண்டு மார்ச்­சு­டன் ஒப்­பி­டு­கை­யில் 13.2% சரிவு காணப்­பட்­டது.

மாத அடிப்­ப­டை­யில் பெரும்­பான்­மை­யான சில்­லறை வர்த்­த­கத் துறை­களில் விற்­பனை உயர்ந்­த­தை­யும் புள்­ளி­வி­வ­ரத் துறை தெரி­வித்­தது. ஆனால் அறை­க­லன்­கள், வீட்­டுச் சாத­னங்­க­ளின் விற்­பனை மாத அடிப்­ப­டை­யில் குறைந்­தன.

இல்­லத்­தி­லி­ருந்து வேலை பார்த்­த­வர்­கள் பல­ரும் வேலை­யிடத்­தில் பணிக்­குத் திரும்­பி­யது அதற்கு கார­ணம் என்­றது புள்­ளி­வி­வ­ரத் துறை.

இவ்­வாண்டு மார்ச்­சில் சில்­ல­றைத் துறை விற்­ப­னை­யின் ஒட்டு­மொத்த மதிப்பு என்று 3.5 பில்­லி­யன் வெள்ளி என்று மதிப்­பி­டப்­பட்­டுள்­ளது. அதில் இணை­யம் வழி­யாக நடை­பெற்ற விற்­பனை 11.8% ஆகும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!