நிபுணர்கள்: நரம்பியல் நோய்கள், பக்கவாதத்திற்கும் கொவிட்-19 தடுப்பூசிகளுக்கும் தொடர்பில்லை

கொவிட்-19 தடுப்­பூ­சி­க­ளைப் போட்­டுக்­கொள்­வோ­ருக்கு 'அல்­சை­மெர்'ஸ்', 'பார்­கின்­சன்'ஸ்' போன்ற நரம்­பி­யல் நோய்­கள் ஏற்­ப­டு­வ­தாக சமூக ஊட­கங்­க­ளி­லும் செய்தி செய­லி­க­ளி­லும் கூற்­று­கள் வலம்­வரு­கின்­றன.

'ஃபைசர்' மற்­றும் 'மொடர்னா' தயா­ரிக்­கும் 'எம்­ஆர்­என்ஏ' தடுப்­பூ­சி­க­ளால் புர­தம் தொடர்­பான சிக்­கல்­கள் நேர­லாம் என்று 'சைவி­ஷன்' அறி­வி­யல் இத­ழில் வெளி­வந்த ஆய்­வுக் கட்­டுரை ஒன்று குறிப்­பிட்­டி­ருந்­ததை அடுத்து இது­போன்ற செய்­தி­கள் பரவி வரு­கின்­றன.

இருப்­பி­னும், இது போன்ற கூற்றுகள் உண்­மை­யல்ல என்­கின்­றனர் உள்­ளூர் அறி­வி­யல் நிபு­ணர்­கள்.

ஒரு­வ­ரது உட­லில் உள்ள புர­தங்­கள், வழக்­கத்­திற்கு மாறான ஒன்றை ஏற்­றுக்­கொள்­ளும்­போது ஒரு குழு­ம­மா­கி­விட்­டால்­தான் புர­தம் தொடர்­பான நோய் ஏற்­படும் என்று விளக்­கி­னார் பேரா­சி­ரி­யர் பால் தம்­பையா.

இவர் சிங்­கப்­பூர் தேசிய பல்­கலைக்­க­ழ­கத்­தின் தொற்று நோய்­கள் ஆய்­வுத் திட்­டத்­தின் துணை இயக்­கு­ந­ராக உள்­ளார்.

இவ்­வாறு உரு­வா­கும் குழு­மங்­கள், உயி­ர­ணுக்­க­ளுக்­குச் சேத­மிழைக்­கும் நிலை­யில்­தான் 'அல்­சை­மெர்'ஸ்' நோய் போன்ற நரம்­பி­யல் நோய்­கள் ஏற்­ப­டு­வ­தாக அவர் விளக்­கி­னார்.

'சார்ஸ்-கொவ்-2' என்ற கிருமி­யின் மர­ப­ணு­வின் பகு­தி­க­ளை­ உடை­யவை 'எம்­ஆர்­என்ஏ' தடுப்­பூ­சி­கள். கிரு­மிக்கு ஏற்ப புர­தத்தை அதி­க­ரிக்­கச் செய்­யும் ஆற்­ற­லைத் தடுப்­பூ­சி­கள் கொண்­டுள்­ளன.

இத­னால், மனித உட­லில் இருக்­கக்­கூ­டிய புதிய கிரு­மியை அடை­யா­ளம் கண்டு அதனை எதிர்க்­கும் வகை­யில் தேவை­யான மனித எதிர்ப்­புச் சக்தி உயி­ர­ணுக்­களை உரு­வாக்­கும் திற­னைத் தடுப்­பூ­சி­கள் பெற்­றுள்­ளன.

உட­லின் புர­தங்­க­ளு­டன் தடுப்­பூ­சி­யின் எம்­ஆர்­என்ஏ மூலம் இணைக்­கப்­ப­டு­வ­தற்­கான கூற்­றுக்கு, ஆய்வு அடிப்­ப­டை­யி­லான சான்­று­கள் இக்­கட்­டத்­தில் இல்லை என்­றார் அதே திட்­டத்­தின் இணைப் பேரா­சி­ரி­யர் சில்வி அலோன்சோ.

நரம்­பி­யல் நோய்­கள் உரு­வாக, வெகு­கா­லம் ஆகும் என்ற பட்­சத்­தில் இத்­த­கைய கூற்றை நிரூ­பிக்­கவோ பொய்ப்­பிக்­கவோ ஆண்டு­கள் பல ஆக­லாம் என்­றார் பேரா­சி­ரி­யர் தம்­பையா.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!