செய்திக்கொத்து

மாணவர்கள் சிலரை ஓட்டுநர் பயிற்சி நிலையம் அனுமதிக்க மறுப்பு

கம்ஃபர்ட்டெல்குரோ டிரைவிங் சென்டரில் (சிடிசி) ஓட்டுநர் பயிற்சிக்காக வந்திருந்த ஒரு சில மாணவர்களை நிலையம் உள்ளே அனுமதிக்கவில்லை. மாணவர்களின் டிரேஸ்டுகெதர் செயலித் தகவல்கள்படி, கொவிட்-19 நோயாளிகளுக்கு அருகில் அவர்கள் இருந்தது தெரியவந்ததால் அனுமதி வழங்கப்படவில்லை என்று கூறப்பட்டது. தொற்று ஏற்படும் சாத்தியம் எனக் குறிப்பிடப்படும் தேதியிலிருந்து 14 நாட்களுக்குள் எழுத்துபூர்வ அல்லது நடைமுறைப் பாடங்கள் இருந்தால், மாணவர்கள் அவற்றை முன்கூட்டியே இணையம் வாயிலாக ரத்து செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

விளையாட்டு நடவடிக்கைகளில்

ஐவர் கொண்ட குழுக்கள்

மீண்டும் இரண்டாம் கட்ட கொவிட்-19 கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிக்கும் நிலையில், விளையாட்டு நடவடிக்கைகளில் ஈடுபடும் குழுக்கள் ஒவ்வொன்றிலும் ஐவர் மட்டுமே இடம்பெற முடியும் என்று சிங்கப்பூர் விளையாட்டு மன்றம் தெரிவித்துள்ளது. ஏற்பாடு செய்யப்படும் வகுப்புகளில் ஐவர் கொண்ட குழுக்கள் அனுமதிக்கப்பட்டாலும், கலந்துகொள்ளும் மொத்த நபர்களின் எண்ணிக்கை 30க்கு மேல் போகக்கூடாது என்றும் கூறப்பட்டது.

இலவச கொவிட்-19 பரிசோதனை

செய்யும் ராஃபிள்ஸ் மருத்துவமனை

டான் டோக் செங் மருத்துவமனையின் கொவிட்-19 கிருமிக் குழுமம் தொடர்பில் பொதுமக்கள் இலவச கொவிட்-19 பரிசோதனைகள் செய்துகொள்ள நான்கு பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டன. இருப்பினும், இவ்விடங்களில் நீண்ட வரிசைகள் உருவானதை அடுத்து, பரிசோதனையை மே 16க்குள் செய்திட ராஃபிள்ஸ் மருத்துவமனையின் சேவையை சுகாதார அமைச்சு நாடியுள்ளது.

என்டியு, என்யுஎஸ் தங்குவிடுதி

மாணவர்களுக்குத் தடுப்பூசி

பள்ளி தங்குவிடுதிகளில் வசிக்கும் என்டியு, என்யுஎஸ் மாணவர்கள் சிலருக்கு, கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொள்ள சுகாதார அமைச்சிடமிருந்து அழைப்பு வந்துள்ளது. பல்கலைக்கழகம் நியமித்ததால் இக்குறிப்பிட்ட மாணவர்களுக்கு அழைப்பு வந்ததாகக் கூறப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!