செய்திக்கொத்து

முகக்கவசம் அணியாத சர்ச்சை: குற்றங்களை ஒப்புக்கொண்ட மாது

பொது இடத்­தில் முகக்­க­வ­சம் அணி­யும்­படி தன்­னி­டம் சொன்­ன­தற்கு, தான் சுய அதி­கா­ரம் படைத்­த­வர் என்று கூறிய சிங்­கப்­பூர் மாது, அச்சம்பவத்தின் தொடர்பில் குற்றம் புரிந்ததாக ஒப்புக்கொண்டுள்ளார்.

பரம்­ஜீத் கோர், 41, மீது கொவிட்-19 கட்­டுப்­பா­டு­களை மீறிய நான்கு குற்­றச்­சாட்­டு­கள் உட்­பட ஏழு குற்­றச்­சாட்­டு­கள் நீதி­மன்­றத்­தில் நேற்று சுமத்­தப்­பட்­டன. பொது இடத்­தில் தொல்லை தந்தது, வீட்டு முக­வ­ரியை மாற்­றி­யதை அரசுக்குத் தெரி­விக்­காதது, போலிஸ் நிலை­யத்­தில் அளித்த வாக்­கு­மூ­லத்­தில் கையொப்­பம் இடாதது ஆகியவை மற்ற குற்றச்சாட்டுகள். இரண்டு குற்­றச்­சாட்­டு­களில் அவர் குற்­ற­வாளி என்று நேற்று தீர்ப்­ப­ளிக்­கப்­பட்­டது. மீத­முள்­ளவை தண்­டனை விதிக்கப்படும்­போது கருத்­தில் கொள்­ளப்­படும்.

கடந்த ஆண்டு மே மாதத்­தில், அப்­பர் தாம்­சன் சாலை அரு­கே­யுள்ள ஷுன்ஃபூ பேரங்­கா­டி­யில் முகக்­க­வ­சம் அணி­யா­மல், அரு­கில் இருந்­த­வர்­க­ளு­டன் வாக்­கு­வா­தத்­தில் ஈடு­பட்ட பரம்­ஜீத்­தின் வீடியோ பர­வ­லா­கப் பேசப்­பட்­டது.

வீடி­யோ­வில் தான் சுய அதி­கா­ரம் பெற்­ற­வர் என்­றும், போலிஸ் தம்­மைக் கட்­டுப்­ப­டுத்த முடி­யாது என்­றும் அவர் கூறி­யி­ருந்­தார்.

நிலப் போக்­கு­வ­ரத்து ஆணைய

அதி­கா­ரிக்கு லஞ்­சம்: இரு­வர் ஒப்­பு­தல்

சுமார் $1.24 மில்லியன் லஞ்சம் பெற்ற நிலப் போக்கு­வ­ரத்து ஆணை­யத்­தின் முன்­னாள் அதி­காரிக்கு தாங்களும் லஞ்சம் தந்ததை இரண்டு ஆட­வர்­கள் ஒப்­புக்­கொண்­டுள்­ள­னர்.

ரோ சுங்­யங், கிம் யங்-கியூ இரு­வ­ரும் தென் கொரி­யா­வைச் சேர்ந்­த­வர்­கள். நிலப் போக்­கு­வ­ரத்து ஆணை­யத்­தின் குழுமத் துணைத் தலை­வ­ரா­கப் பணி­யாற்றிய ஹென்ரி ஃபூ யங் தாய் என்­ப­வ­ருக்கு, ஆளுக்கு $30,000 கடன் தருவ தாகக் கூறி அவருக்கு லஞ்சம் அளித்ததை அவர்­கள் ஒப்புக்­கொண்­ட­னர். மேலும் $20,000 லஞ்சம் அளித்த மற்றொரு குற்­றச்­சாட்­டு, தண்­டனை விதிப்­பின்­போது கருத்­தில் கொள்­ளப்­படும்.

கடந்த 2018 டிசம்­ப­ரில் அக்குற்­றம் நடந்­தது. அப்போது ரோ, கிம் இருவரும் டேவூ இன்­ஜி­னி­ய­ரிங், கன்ஸ்ட்­ரக்ச­ன் நிறு­வ­னத்­தில் பணியாற்­றினர். நிலப் போக்­கு­வ­ரத்து ஆணை­யத்­தின் குத்­த­கைதாரர்­கள், துணைக் குத்­த­கைதாரர்­கள் ஆகி­யோ­ரி­ட­மி­ருந்து சுமார் $1.24 மில்­லி­யனை ஃபூ லஞ்­ச மாகப் பெற்­றார் என்று கூறப்­ப­டு­கிறது. அவர் 23 ஊழல் குற்றச்­சாட்டுகளை­யும் 13 மோசடிக் குற்­றச்­சாட்­டு­களை­யும் எதிர்­நோக்­கு­கி­றார்.

'சிங்கப்பூர் இன்சிடன்ஸ்' ஃபேஸ்புக் மீது பொஃப்மா சட்டம் பாய்ந்தது

தெற்­கா­சிய பய­ணி­கள் கூட்­டம் ஒன்று, புதன்­கி­ழ­மை­யன்று 60க்கும் மேற்­பட்ட பய­ணி­கள் சாங்கி விமான நிலை­யம் முனை­யம் ஒன்­றில் பிற்­ப­கல் 2.53 மணிக்­குத் தரையிறங்­கி­ய­தாக காட்­டும் காணொளி ஒன்றைப் பதிவேற்றம் செய்த 'Singapore Incidents' என்ற ஃபேஸ்புக் பக்­கத்­துக்கு எதிராக போக்குவரத்து அமைச்சு பொஃப்மா எனும் பொய்ச் செய்திக்கு எதிரான சட்டத்தைப் பயன்படுத்தி உள்ளது.

தான் பதிவேற்றம் செய்த பதிவில் திருத்தச் செய்தியைப் போடுமாறு தான் அந்த ஃபேஸ்புக் பக்கத்துக்கு உத்தர விட்டுள்ளதாக அமைச்சு நேற்று தனது அறிக்கையில் தெரிவித்தது. போக்குவரத்து அமைச்சர் ஓங் யி காங் அந்த உத்தரவைப் பிறப்பிக்குமாறு தொடர்பு தகவல் அமைச்சைக் கேட்டுக்கொண்டார்.

தங்­கச் சங்­கி­லி­யைப் பறித்த 64 வயது ஆட­வர் மீது குற்­றச்­சாட்டு

81 வயது முதி­ய­வ­ரி­ட­மி­ருந்து தங்­கச் சங்­கி­லி­யைப் பறித்த சந்­தே­கத்­தின் பேரில் 64 வயது ஆட­வர் கைது செய்­யப்­பட்­டு உள்­ளார். பிரெஞ்சு ரோட்­டில் நடந்த அச்­சம்­ப­வம் பற்றி கடந்த வியா­ழக்­கி­ழமை அதி­காலை 4.35 மணிக்­கு போலிசுக்கு தக­வல் கிடைத்­த­து.

முதியவருடன் ஏற்பட்ட கைகலப்புக்குப் பின்­னர், அவ­ரி­ட­மி­ருந்து தங்­கச் சங்­கி­லி­யைப் பறித்­து­கொண்டு சந்­தேக நபர் தப்பி ஓடி­விட்டார். நகை­யைப் பறி­கொ­டுத்­த­வர் கீழே விழுந் தார். அவ­ரது தலை­யில் அடி­பட்­டது. மருத்­து­வ­மனைக்கு அவர் கொண்டு செல்­லப்­பட்­டார்.

விசா­ரணை, போலிஸ் கேம­ராக்­க­ளி­லி­ருந்து பெற்ற புகைப்­ப­டங்­கள் ஆகி­ய­வற்றை வைத்து சந்­தேக நபர் கைது­ செய்­யப்­பட்­டார். அவர் கள­வா­டிய தங்­கச் சங்­கி­லி­யும் 1,718 வெள்ளி ரொக்­கப்­ ப­ண­மும் மீட்­கப்­பட்­டன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!