103 பேர் தனிமைப்படுத்தல்

விக்டோரியா தொடக்கக் கல்லூரி மாணவருக்குக் கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டது

விக்டோரியா தொடக்கக் கல்லூரி மாணவருக்கு கொவிட்-19 கிருமித்தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்ட பிறகு அக்கல்லூரியின் 100க்கு மேற்பட்ட மாணவர்களும் ஊழியர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று கல்வி அமைச்சு நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.

கிருமித்தொற்று பரவுவதைத் தடுக்கும் நடவடிக்கையாக, கிருமி தொற்றிய மாணவனுடன் நெருக்கிய தொடர்பில் இருந்த அக்கல்லூரியின் 95 மாணவர்களுக்கும் எட்டு ஊழியர்களுக்கும் தனிமைப்படுத்தும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

விக்டோரியா தொடக்கக் கல்லூரியின் மாணவர்கள், ஊழியர்கள், சேவை வழங்கும் வெளிப்புற நிறுவனங்கள், வருகையாளர்கள் என சுமார் 2,200 பேர் நாளை கொவிட்-19 பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள்.

இந்தக் கிருமித்தொற்று சம்பவத்துக்கும் மற்ற சம்பவங்களுக்கும் தொடர்பு இல்லாத காரணத்தாலும் சமூகத்தில் கிருமித்தொற்று சம்பவங்கள் அதிகரித்து வருவதாலும் முன்னெச்சரிக்கையாக இந்நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று அமைச்சு விளக்கியது. தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் 103 பேருக்குத் தனிப்பட்ட முறையில் கொவிட்-19 பரிசோதனை நடத்தப்படும்.

பாதிக்கப்பட்ட மாணவன் கடந்த புதன்கிழமை கல்லூரிக்கு வந்ததாகவும் அவருக்கு அந்த நாளின் பிற்பகுதியில் சுவாசப் பிரச்சினை இருந்தது என்றும் அடுத்த நாள் அவர் மருத்துவரைச் சென்று பார்க்கையில் அவருக்குக் கிருமித்தொற்று இருந்தது உறுதிப்படுத்தப்பட்டது என்றும் கூறப்பட்டது.

அச்சம்பவத்துக்குப் பிறகு விக்டோரியா தொடக்கக் கல்லூரி முற்றிலும் தூய்மைப்படுத்தப்பட்டதாகவும் பள்ளி வளாகம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டதாகவும் அமைச்சு விவரித்தது.

நாளை முதல் வரும் 14ஆம் தேதி வரை அக்கல்லூரி, வீட்டிலிருந்து கற்கும் முறையைக் கடைப்பிடிக்கும். அது அக்கல்லூரியுடன் தொடர்புடைய அனைவரின் கிருமித்தொற்று முடிவுகள் வெளிவருவதற்கு காலஅவகாசம் கொடுக்கும்.

இக்காலத்தில், ஆசிரியர்கள் மாணவர்களுடனும் அவர்களின் பெற்றோருடனும் தொடர்பில் இருப்பார்கள்.

"கடந்த வாரத்தில் உள்ளூரில் கிருமித்தொற்று சம்பவங்கள் அதிகரித்திருப்பதால், மாணவர்களும் பள்ளி ஊழியர்களும் நல்ல தனிப் பட்ட சுகாதாரத்தையும் பாதுகாப்பு நிர்வாக நடைமுறைகளையும் பின்பற்ற வேண்டும்," என்று அமைச்சு கேட்டுக்கொண்டது.

கடந்த இரு வாரங்களில் சமூகத் தொற்று சம்பவத்தால் பாதிக்கப்பட்ட இரண்டாவது பள்ளி விக்டோரியா தொடக்கக் கல்லூரி.

இம்மாதம் 1ஆம் தேதி எட்ஜ்ஃபீல்டு உயர்நிலைப் பள்ளியின் மாணவருக்குக் கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து ஒரு வாரத்துக்கு அப் பள்ளியின் மாணவர்கள் வீட்டிலிருந்து பாடங்களைக் கற்றனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!