நிகழ்வுக்கு முந்திய சோதனை; முன்பதிவு மேலும் கூடியது

கொவிட்-19 கிரு­மித்­தொற்று சம்­ப­வங்­கள் அதி­க­ரிப்­பின் விளை­வாக கட்­டுப்­பா­டு­கள் கடு­மை­யாக்­கப்­ ப­டு­கின்­றன என்று சுகா­தார அமைச்சு கடந்த செவ்­வாய்க்­ கிழமை அறி­வித்த பிறகு, நிகழ்ச்­சிக்கு முந்­திய பரி­சோ­தனை பற்றி அதனை வழங்­கும் அமைப்­பு­கள் அதி­க­மான முன்­ப­தி­வு­க­ளைப் பெற்று வரு­கின்­றன.

நிகழ்ச்­சிக்கு முந்­திய பரி­சோ­தனை பற்றி அதி­க­மான விசா­ரிப்­பு­களும் வரு­வ­தால், நிறு­வ­னங்­கள் அதி­க­மான ஊழி­யர்­களை வேலைக்கு அமர்த்­து­கின்­றன.

இம்­மா­தம் 8ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை நிகழ்ச்­சிக்கு முந்­திய பரி­சோ­த­னை­யு­டன் நடை­பெ­றும் திரு­ம­ணங்­களில் 250 பேர் வரை கலந்­து­கொள்­ள­லாம். நிகழ்ச்­சிக்கு முந்­திய பரி­சோ­தனை இல்­லாத திரு­ம­ணங்­களில் 50 பேர் மட்­டுமே கலந்­து­கொள்­ள­லாம்.

"நிகழ்ச்­சிக்கு முந்­திய பரி­சோ­தனை பற்­றிய விசா­ரிப்­பு­கள் 90% வரை அதி­க­ரித்­துள்­ளன. அவற்­றில் கடந்த புதன்­கி­ழமை மட்­டும் 100க்கு மேற்­பட்ட விசா­ரிப்­பு­கள் வந்­தன. அவற்­றில் பெரும்­பா­லா­னவை திரு­ம­ணங்­கள் தொடர்­பா­னவை. நிகழ்ச்­சிக்கு முந்­திய பரி­சோ­தனை இல்­லா­மல் 100 பேர் வரை பங்­கேற்­க­லாம் என்ற முன்­னைய விதி­மு­றை­யின்­படி, திரு­மண அழைப்­பி­தழ்­கள் முன்­கூட்­டியே அனுப்­பப்­பட்­டு­விட்­டன. விளை­யாட்டு நிகழ்­வு­கள், கல்­விக் கழ­கங்­களில் நடத்­தப்­படும் நிகழ்­வு­கள் ஆகி­யவை பற்­றி­யும் விசா­ரிப்­பு­கள் வந்­தன" என்­றார் 'சாட்டா காம்­ஹெல்த்' எனும் சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு நன்­கொடை அமைப்­பின் மருத்­துவ இயக்­கு­நர் டாக்­டர் ஷெரில் கிளென்.

"எங்­கள் ஊழி­யர்­களில் சிலர் நிகழ்ச்­சிக்கு முந்­திய பரி­சோ­த­னை­யில் நடத்­தப்­படும் ஆண்­டி­ஜன் விரை­வுப் பரி­சோ­தனை செய்­வ­தற்­குப் பயிற்சி பெற்­றி­ருக்­கி­றார்­கள்," என்­றும் டாக்­டர் கிளென் சொன்­னார்.

நேரடி மேடை நிகழ்ச்­சி­கள், கூட்­டங்­கள், மக்­களை ஈர்க்­கும் நிகழ்­வு­கள், மாநா­டு­கள், கண்­காட்­சி­கள் ஆகி­ய­வற்­றுக்­குச் செல்­லக்­கூ­டி­ய­வர்­க­ளின் வரம்பு, நிகழ்ச்­சிக்கு முந்­திய பரி­சோ­த­னை­யு­டன் 750லிருந்து 250க்குக் குறைக்­கப்­பட்­டுள்­ளது. நிகழ்ச்­சிக்கு முந்­திய பரி­சோ­தனை இல்­லா­மல் நடை­பெ­றும் நிகழ்ச்­சி­க­ளுக்கு வரு­வோ­ரின் வரம்பு 250லிருந்து 100 ஆக குறைக்கப்­பட்­டுள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!