எஸ்பிஎச் மீடியா நிறுவனத்தின் நிதியாதரவு, எழுத்து சுதந்திரம் குறித்து அமைச்சர், பிரித்தம் வாக்குவாதம்

புதிய எஸ்­பி­எச் மீடியா நிறு­வ­னத்­துக்கு அர­சாங்­கம் வழங்­க­வி­ருக்­கும் உத்­தேச நிதி­ ஆ­த­ரவு குறித்­தும் அந்­நி­று­வ­னத்­தின் எழுத்­துச் சுதந்­தி­ரம் குறித்­தும் தொடர்பு, தக­வல் அமைச்­சர் எஸ். ஈஸ்­வ­ர­னுக்­கும் எதிர்க்­கட்­சித் தலை­வர் பிரித்­தம் சிங்­குக்­கும் இடையே வாக்­கு­வா­தம் ஏற்­பட்­டது.

அமைச்­சர் ஈஸ்­வ­ரன் தாக்கல் செய்து பேசிய அமைச்­சர்­நிலை அறிக்­கை­யின் தொடர்­பில், எஸ்பிஎச் நிறு­வ­னத்­தி­ட­மி­ருந்து பிரிந்து உத்­த­ர­வா­த நிறு­வ­ன­மாக உரு­வா­கும் எஸ்­பி­எச் மீடியா நிறு­வ­னத்­துக்கு அர­சாங்­கம் அனு­ம­தி­ அளித்து, அதற்கு நிதி­ ஆத­ரவு வழங்க முன்­வந்­தி­ருப்­பது குறித்து கேள்வி எழுப்­பி­னார் பாட்­டா­ளிக் கட்­சி­யின் தலை­மைச் செய­லா­ள­ரும் அல்­ஜு­னிட் குழுத் தொகுதி உறுப்­பி­ன­ரு­மான திரு சிங்.

புதிய எஸ்­பி­எச் மீடியா நிறு­வ­னத்­துக்கு அர­சாங்­கம் எவ்­வ­ளவு நிதி­ ஆத­ரவு வழங்­கும் என்ற விவ­ரத்தை அமைச்­சர் கூற வேண்­டும் என்று வலி­யு­றுத்­தி­னார் திரு சிங்.

அதற்­குப் பதி­ல­ளித்த அமைச்­சர், "மரங்­களில் கவ­னம் செலுத்தி, காடு­களை மறந்­து­வி­டக்­கூ­டாது" அல்­லது இதன் மூலம் "அர­சி­யல் லாபம் அடைய" முயற்சி செய்யக்கூடாது என்­றார்.

புதிய ஊடக நிறு­வ­னத்­துக்கு அர­சாங்­கம் நிதி­ ஆ­த­ரவு வழங்­கு ­வ­தன் மூலம் அதன் எழுத்­துச் சுதந்­தி­ரத்­துக்­குப் பாதிப்பு வந்­து­வி­டா­மல், எஸ்­பி­எச் செய்­தித்தாள்­களில் எழுத்­துச் சுதந்­தி­ர கலா­சா­ரம் தொடர்ந்து கட்­டிக்­காக்­கப்­ப­டுமா என்று திரு சிங் கேட்­டார்.

புதிய எஸ்­பி­எச் மீடியா நிறு­ வனத்­துக்­குப் புதிய தலை­வ­ரைத் தேர்வு செய்­யும்­போது ஏன் சிறப்புக் குழுவை அமைக்க பரி­சீ­லிக்­க­வில்லை என்­றும் திரு சிங் தொடர்ந்து கேட்­டார்.

"சிங்­கப்­பூ­ரின் செய்­தித்­தாள் ஊட­கத் துறை­யில் எழுத்­துச் சுதந்­தி­ர கலா­சா­ரம் பல்­லாண்­டு­க­ளாக நீடித்து வந்­துள்­ளது. இதற்கு மாறாக இருப்பதாகக் கூறுவது பத்திரிகை யாளர்களுக்கும் செய்­தி­யா­ளர்­களுக்கும் தீங்கு விளைவிப்பது போல் ஆகும்," என்­றார் திரு ஈஸ்வரன்.

புதிய தலை­வ­ரைத் தேர்ந்து எடுக்க தேர்­வுக் குழுவை அமைப்­பது பற்றி கருத்­து­ரைத்த அமைச்­சர், "சிங்­கப்­பூ­ரில் நியா­ய­மான, சுதந்­தி­ர­மான எழுத்­துச் சுதந்­தி­ரம் நில­வு­கிறது என்று மக்­கள் பல்­வேறு கருத்­தாய்­வு­கள் மூலம் தெரி­வித்து உள்­ள­னர். அவர்­கள் அச்­சுப் பிரதி, மின்­னி­லக்­கப் பிரதி என நமது செய்­தித்­தாள் ஊட­கத்­தின் மீது நம்­பிக்கை வைத்­தி­ருக்­கி­றார்­கள்.மக்­க­ளின் அந்த நம்­பிக்­கையை வெற்­றி­பெற வைப்­பது நமது பணி­யா­கும்," என்­றார்.

அப்­போது மீண்­டும் எழுந்து பேசிய திரு சிங், 1997ஆம் ஆண்டு பொதுத் தேர்­த­லின்­போது வெளி­வந்த தி நியூ பேப்­பர் செய்­தித் தாளின் ஒரு பக்­கத்­தைக் காட்டி, அதில் வாக்­கா­ளர் எந்­தக் கட்­சிக்கு வாக்­க­ளிக்க வேண்­டும் என்று ஆலோ­சனை வழங்­கும் ஒரு வழி­காட்டி அச்­சி­டப்­பட்­டது என்­றார்.

அதற்குப் பதிலளித்த அமைச்சர் ஈஸ்வரன், தமது கருத்தை வலுவாக்க திரு சிங் 1997ஆம் ஆண்டில் வெளியான பத்திரிகை செய்தியை இப்போது உதாரணமாகக் காட்டுவது தமக்கு ஏமாற்றத்தை அளிக்கிறது என்றார். மேலும் தற்போதைய நிலையில் வெற்றிபெற்றுள்ள ஒரு மாதிரியைக் காட்டும்படியும் திரு சிங்குக்கு சவால் விடுத்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!