காலத்திற்கு ஏற்ப வர்த்தக செயல்பாடு மாறவேண்டும்

மின்னிலக்க காலத்­துக்கு ஏற்ப அதன் வர்த்­தக செயல்­பாட்­டுத் திட்­டத்தை மாற்ற, அல்­லது தேவைப்­பட்­டால் புதிய திட்­டத்தை உரு­வாக்க வேண்­டும் என்று அமைச்­சர் திரு எஸ் ஈஸ்­வ­ரன் கூறி­யுள்­ளார்.

லாப­நோக்­க­மற்ற அமைப்­பாக மாற்றி அமைப்­ப­ட­வுள்ள எஸ்­பி­எச் மீடியா அமைப்பு எங்­கி­ருந்து நிதி­யைப் பெறக்­கூ­டும் என்­பதை திரு ஈஸ்­வ­ரன் நாடா­ளு­மன்­றத்­தில் நேற்று எடுத்­து­ரைத்­த­போது அவ்­வாறு கூறி­னார்.

உள்­நாட்டு ஊட­கங்­கள் 'திருப்­பு­முனை' கட்­டத்­தில் உள்­ள­தாக வரு­ணித்த அமைச்­சர், அவை பல­வி­த­மான ஊட­கங்­க­ளு­டன் போட்­டி­யிட வேண்­டி­யுள்­ள­தைச் சுட்­டிக்­காட்­டி­னார்.

அவை அனைத்­து­லக செய்தி ஊட­கங்­க­ளு­டன் மட்­டு­மில்­லா­மல், பொழு­து­போக்கை வழங்­கும் ஊட­கங்­கள், பொது­மக்­களே உரு­வாக்­கும் செய்தி உள்­ள­டக்­கம் ஆகி­ய­வற்­று­டன் அவை போட்­டி­யிட்டு வரு­வதை திரு ஈஸ்­வ­ரன் சுட்­டிக்­காட்­டி­னார்.

செய்­தி­க­ளைத் திரட்­டித் தரும் தளங்­க­ளா­லும் செய்­தி­களை வழங்­கும் மற்ற தளங்­க­ளா­லும் உயர்­தர செய்­திப் பிரி­வு­களை வைத்­தி­ருக்க செலவு செய்­யா­மல் 'இல­வச செய்­திச் சேவை­களை' வழங்க முடி­கிறது. மின்­னி­லக்க விளம்­ப­ரங்­கள் அதி­க­ரித்­தா­லும், அவற்­றி­லி­ருந்து கிடைக்­கும் வரு­வாய் பெரும்­பா­லும் சமூக ஊட­கங்­க­ளுக்­கும் தேடு­தல் தளங்­க­ளுக்­கும் தான் செல்­கிறது.

உல­க­ளா­விய செய்தி ஊட­கத் துறை, கடு­மை­யான அமைப்பு ரீதி­யான பிரச்­சி­னை­களை எதிர்­நோக்­கு­வ­தா­க­வும் அவற்றுக்கு ஒரே தீர்வு ஏதும் இல்லை என்றும் அமைச்­சர் சொன்­னார்.

உல­க­மெங்­கும் ஊட­கங்­கள் அர­சாங்­கம், தனி­யார் நிதி அல்­லது நன்­கொடை உள்­ளிட்ட பல்­வேறு வழி­களில் நிதி ஆத­ரவு பெற்­று­வ­ரு­வதை திரு ஈஸ்­வ­ரன் சுட்­டிக்­காட்­டி­னார்.

சிங்கப்பூர் அரசாங்கம், மீடியகார்ப் நிறுவனத்துக்கு ஒவ்வோர் ஆண்டும் நிதியை வழங்கி வருகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!