சிங்கப்பூரின் கட்டுமானத் துறைக்கு கடும் பாதிப்பு நேரும்

ஊழியர்கள் போக்குவரத்தில் விதிமுறை மாற்றம் குறித்து அமைச்சர் ஏமி கோர்

ஊழி­யர்­களை ஓரி­டத்­தி­லி­ருந்து மற்­றோர் இடத்­திற்கு நிறு­வ­னங்­கள் கொண்டு செல்­லும் முறை தொடர்­பில் விதி­மு­றை­களை இப்­போது மாற்­று­வ­தால், கட்­டு­மா­னத் துறை­யில் கடும் பாதிப்பு ஏற்­படும். இத­னால் கட்­டு­மா­னத் திட்­டங்­களில் தாம­தம், துறை­யில் வேலை­யி­ழப்­பு­கள் நேரும் என்­றார் போக்­கு­வ­ரத்து மூத்த துணை அமைச்­சர் ஏமி கோர். லாரி­களில் இருக்கை வார் பொருத்­து­வது, லாரிக்­குப் பதி­லாக ஊழி­யர்­களை வேனில் ஏற்­றிச் செல்­வது உள்­ளிட்ட பல பரிந்­து­ரை­களைப் பத்­தாண்­டு­க­ளுக்கு முன்­னரே பணிக்­குழு ஒன்று பரி­சீ­லித்­த­தா­க­வும் அவற்றை செயல்­ப­டுத்­து­வ­தில் சிக்­கல்­கள் இருப்­ப­தா­க­வும் அவர் தெரி­வித்­தார்.

ஊழி­யர்­களை ஏற்­றிச் சென்ற வாக­னங்­கள் விபத்­துக்­குள்­ளா­ன­தால் காயம், உயி­ரி­ழப்­பு­கள் நேர்ந்த மூன்று அண்­மை­யச் சம்­ப­வங்­கள் குறித்து நாடா­ளு­மன்­றத்­தில் நேற்று கேட்­கப்­பட்ட கேள்­வி­க­ளுக்கு டாக்­டர் கோர் பதி­ல­ளித்­தார்.

சட்­ட­திட்­டங்­களை மேம்­ப­டுத்­து­வது தொடர்­பில் தொழிற்­சங்­கம், நிறு­வ­னங்­கள் ஆகி­ய­வற்­று­டன் அர­சாங்­கம் தொடர்ந்து இணைந்து செயல்­படும் என்­றார் அவர். செலவு­கள், நடை­மு­றைச் சிக்­கல்­கள் ஆகி­ய­வற்­றால் கடந்த பத்­தாண்­டு­களில் ஊழி­யர் போக்­கு­வ­ரத்­தில் பெரிய அள­வி­லான மாற்­றங்­கள் செய்­யப்­ப­டா­மல் இருந்­தது என்­றார்.

"பய­ணி­கள் பாது­காப்பு மிக முக்­கி­யம் என்­பதை நான் மீண்­டும் வலி­யு­றுத்த விரும்­பு­கி­றேன். ஒவ்­வோர் உயி­ரி­ழப்­பும், ஒவ்­வொரு காய­மும் மிக அதி­கமே. நம் ஊழி­யர்­க­ளின் பாது­காப்பை மேம்­ப­டுத்­தித் தக்­க­வைத்­துக்­கொள்­வ­தில் நாங்­கள் தொடர்ந்து கடப்­பாடு கொண்­டுள்­ளோம். ஆனால், இது பல நிலை­க­ளைக் கொண்ட ஒரு விவ­கா­ரம். இதன் பின்­வி­ளை­வு­களும் பல," என்­றார் அமைச்­சர்.

"இத்­த­கைய விவ­கா­ரங்­க­ளைப் பரி­சீ­லிக்­கும் அதே வேளை­யில் ஊழி­யர்­க­ளின் பாது­காப்பு, அவர்­களின் வாழ்­வா­தா­ரம் ஆகி­ய­வற்றை உறு­தி­செய்ய, சம­நி­லை­யு­டைய, நிலை­மைக்கு ஏற்ற ஓர் அணு­கு­முறையை நாம் கண்­ட­றிய வேண்­டும் என்­ப­தை­யும் மன­தில் கொள்ள வேண்­டும்," என்று டாக்­டர் கோர் தெரி­வித்­தார்.

இதற்­கி­டையே புள்­ளி­வி­வ­ரங்­கள் குறித்­தும் டாக்­டர் கோ நேற்று பகிர்ந்­து­கொண்­டார். 2011க்கும் 2015க்கும் இடைப்­பட்ட காலத்­தில் ஆண்­டுக்­குச் சரா­ச­ரி­யாக ஒன்­பது பேர் லாரி­களில் இருந்­த­போது உயிரி­ழந்­த­னர். 2016க்கும் 2020க்கும் இடைப்­பட்ட காலத்­தில் அந்த எண்­ணிக்கை விகி­தம், ஆண்­டுக்கு 2.6 எனக் குறைந்­தி­ருந்­த­தாக அவர் தெரி­வித்­தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!