சமூகத்தில் மூவர் உட்பட புதிதாக 19 பேருக்கு கொவிட்-19

சமூக அள­வில் மூன்று பேர் உட்­பட சிங்­கப்­பூ­ரில் நேற்று புதி­தாக 19 பேருக்கு கொரொனா கிரு­மித்­தொற்று உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது. சிங்­கப்­பூ­ரில் இது­வரை கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­டோ­ரின் மொத்த எண்­ணிக்கை 61,378ஐ எட்­டி­யுள்­ளது. இத்­து­டன் சிங்­கப்­பூரில் தற்­போது 11 கிரு­மித்­தொற்­றுக் குழு­மங்­கள் உள்­ளன.

சமூ­கத்­தில் நேற்று தொற்று உறு­தி­யான மூவ­ரில் இரு­வர், சாங்கி விமான நிலைய கிரு­மித்­தொற்­றுக் குழு­மத்­து­டன் தொடர்­பு­டை­ய­வர்­கள். இக்­கு­ழு­மம் தொடர்­பில் இது­வரை 10 பேருக்­குத் தொற்று உறு­தி­யாகி­உள்­ளது. இவர்­களில் இரண்டு முறை தடுப்­பூசி போட்­டுக்­கொண்­ட­வர்­கள் அறு­வர்.

விமான நிலைய ஊழி­யர்­கள் அனை­வ­ருக்­கும் பரி­சோ­தனை

இந்­நி­லை­யில், சாங்கி விமான நிலை­யத்­தின் சுமார் 9,000 ஊழி­யர்­க­ளுக்கு கொவிட்-19 சிறப்பு பரி­சோ­தனை நடத்­தப்­ப­டு­கிறது.

விமான நிலை­யத் தொற்று குழு­மத்­தில் இடம்­பெற்று இருப்­போ­ரில் நால்­வர் முனை­யம் 3ன் முக்­கிய துப்­பு­ரவு ஒப்­பந்த நிறு­வ­ன­மான 'ராம்கி கிளீன்­டெக் சர்­வி­சஸ்' என்ற நிறு­வ­னத்­தைச் சேர்ந்­த­வர்­கள்.

சாங்கி விமான நிலைய முனை­யங்­களில் பணி­யாற்­றும் ஊழி­யர்­கள் அனை­வ­ருக்­கும் கொரோனா பரி­சோ­தனை நடத்­தப்­படும் என்று சிங்­கப்­பூர் சிவில் விமான போக்­கு­வ­ரத்து ஆணை­ய­மும் சாங்கி விமான நிலை­யக் குழு­ம­மும் தெரி­வித்­துள்­ளன.

விமா­னப் போக்­கு­வ­ரத்­துத் துறை­யைச் சேர்ந்த ஊழி­யர்­களில் 92%க்குத் தடுப்­பூசி போடப்­பட்­டுள்­ளது. என்­றா­லும் இன்­ன­மும் தொற்று ஆபத்து இருக்­கிறது என்­பதை இரு­த­ரப்­பும் சுட்­டிக்­காட்டி உள்­ளன.

முனை­யம் 3ன் தரைத்­த­ளம் 2ல் செயல்­படும் உணவு, பானக் கடை­களும் சில்­லறை விற்­ப­னைக் கடை­களும் அந்­தத் தள­மும் பொது­மக்­களுக்கு மூடப்­பட்டு இருக்­கின்­றன.

தடுப்­பூசி போட்­டுக்­கொண்ட விமான நிலைய முன்­க­ளப் பணி­யா­ளர்­கள் 28 நாட்­க­ளுக்கு ஒரு முறை என்ற வழக்­க­மான பரி­சோ­த­னைச் செயல் திட்­டத்­தில் ஏற்­கெனவே இடம்­பெற்று இருக்­கி­றார்­கள். இப்­போது அவர்­க­ளுக்கு 14 நாட்­க­ளுக்கு ஒரு முறை பரி­சோ­தனை நடத்­தப்­படும் என்று அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!