28,000 பேரிடம் கொரோனா பரிசோதனை

டான் டோக் செங் மருத்துவமனை கிருமித்தொற்றுக் குழுமத்துடன் தொடர்புடையோர்

டான் டோக் செங் மருத்­து­வ­மனை கொவிட்-19 தொற்­றுக் குழு­மத்­துடன் தொடர்­பு­டைய வேறு எவ­ரே­னும் கொரோனா தொற்­றால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னரா என்­ப­தைக் கண்­ட­றிய சிறப்­புப் பரி­சோ­தனை நட­வடிக்­கை­கள் இடம்­பெற்று வரு­கின்­றன. அதன்­படி, நேற்று முன்­தி­னம் திங்­கட்­கி­ழ­மை­வரை, ஏறத்­தாழ 12,500 பேர் கொரோனா பரி­சோ­த­னைக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­னர்.

அவர்­க­ளு­டன், டான் டோக் செங் மருத்­து­வ­ம­னை­யின் 12,000 ஊழி­யர்­களும் 1,000 நோயா­ளி­களும் தனி­மைப்­ப­டுத்­தப்­பட்ட ஏறக்­கு­றைய 2,500 பேரும் பரி­சோ­திக்­கப்­பட்டு இருப்­ப­தாக சுகா­தார அமைச்­சர் கான் கிம் யோங் நாடா­ளு­மன்­றத்­தில் நேற்று தெரி­வித்­தார்.

அக்­கி­ரு­மித்­தொற்­றுக் குழு­மத்­து­டன் தொடர்­பு­டை­யோ­ரில் 43 பேருக்கு இது­வரை கொரோனா பாதிப்பு உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. அவர்­களில் டான் டோக் செங் மருத்­து­வ­ம­னை­ பணி­யா­ளர்­கள் எழு­வ­ரும் நோயாளி­களில் இரு­வரும் தடுப்­பூ­சியை முழு­மை­யா­கப் போட்­டுக்­கொண்­ட­வர்­கள்.

"அவர்­கள் எல்லாரிடமும் தொற்­றுக்­கான அறி­கு­றி­கள் தென்­ப­ட­வில்லை அல்­லது இலே­சான அறி­கு­றி­கள் காணப்­பட்­டன. எவ­ருக்­கும் உயிர்­வாயு ஆத­ரவு தேவைப்­ப­ட­வில்லை," என்று கொவிட்-19 தொற்­றுக்­கெ­தி­ரான அமைச்சுகள்­நிலை பணிக்­கு­ழு­வின் இணைத் தலை­வரு­மான திரு கான் குறிப்­பிட்­டார்.

தடுப்­பூ­சியை இன்­னும் முழு­மை­யா­கப் போட்­டுக்­கொள்­ளாத எஞ்­சிய 34 பேரில் அறு­வ­ருக்கு உயிர்­வாயு ஆத­ரவு தேவைப்­பட்­டது என்­றும் இரு­வர் தீவிர சிகிச்­சைப் பிரி­வில் உள்­ள­னர் என்­றும் ஒரு­வர் இறந்­து­விட்­டார் என்­றும் அமைச்­சர் விளக்­கி­னார்.

சமூ­கத்­தில் பர­வி­வி­டா­த­படி, டான் டோக் செங் மருத்­து­வ­ம­னை­யில் கிரு­மித்­தொற்­றைக் கட்­டுப்­படுத்­த­வும் தொற்­றி­யோ­ரைத் தனி­மைப்­ப­டுத்­த­வும் எடுக்­கப்­பட்­டு­வ­ரும் முயற்­சி­களை அமைச்­சர் கான் விவ­ரித்­தார்.

முத­லா­வது, கொரோ­னா­வால் பாதிக்­கப்­பட்­ட­தாக முத­லா­வ­தா­கக் கண்­ட­றி­யப்­பட்­ட­வ­ரு­டன் நெருங்­கிய தொடர்­பில் இருந்­த­வர்­கள் தனி­மைப்­ப­டுத்­தப்­பட்­ட­னர். பாதிக்­கப்­பட்ட '9D' சிகிச்­சைப் பிரி­வின் பணி­யா­ளர்­கள், நோயா­ளி­கள் உட்­பட அவ­ரு­டன் தொடர்­பில் இருந்­தி­ருக்­க­லாம் எனக் கரு­தப்­பட்ட அனை­வ­ரும் பரி­சோ­த­னைக்கு உட்­ப­டுத்­தப்­பட்­ட­னர்.

ஏப்­ரல் 20ஆம் தேதி­யில் இருந்து அந்­தச் சிகிச்­சைப் பிரி­வில் பணி­ஆற்­றிய ஊழி­யர்­கள், சிகிச்சை முடிந்து வீடு திரும்­பிய மற்றும் இப்­போது சிகிச்சை பெற்­று­வ­ரும் உள்­நோ­யாளி­கள், வரு­கை­யா­ளர்­கள் அனை­வரும் பரி­சோ­த­னைக்கு உட்­ப­டுத்­தப்­பட்டு, தனி­மைப்­ப­டுத்­தப்­பட்­ட­னர். அதன்­பின், முதன்மை சிகிச்­சைப் பிரி­வுக் கட்­ட­டத்­தில் பணி­புரியும் ஊழி­யர்­கள், உள்­நோயாளி­கள் அனை­வ­ருக்­கும் பரி­சோ­தனை விரி­வு­ப­டுத்­தப்­பட்­டது.

அதைத் தொடர்ந்து, டான் டோக் செங் மருத்­து­வ­மனை ஊழி­யர்­கள் அனை­வ­ரி­டமும் பரி­சோ­தனை மேற்­கொள்­ளப்­பட்­டது. அத்­து­டன், முதன்மை சிகிச்­சைப் பிரிவு கட்­டட ஊழி­யர்­கள், நோயா­ளி­கள் மீண்­டும் பரி­சோ­த­னைக்கு உட்­ப­டுத்­தப்­பட்­ட­னர்.

கூடு­தல் பாது­காப்பு நட­வ­டிக்­கை­யாக, பாதிக்­கப்­பட்ட கால­கட்­டத்­தில் சிகிச்சை முடிந்து அந்த ம­ருத்­து­வ­ம­னை­யில் இருந்து வீடு திரும்­பிய நோயா­ளி­களுக்கும் அங்கு வந்­து­சென்­ற­வர்­களுக்கும் பரி­சோ­தனை செய்­து­கொள்­ளும்­படி அழைப்பு விடு­க்கப்­பட்­டது.

தொற்று பாதிப்பு கண்­ட­றி­யப்­பட்ட ஒவ்வொருவருடனும் தொடர்­பில் இருந்த அனை­வரும் பரி­சோ­த­னைக்கு உட்­ப­டுத்­தப்­பட்டு, தனி­மைப்­ப­டுத்­தப்­பட்­ட­னர். பாதிக்­கப்­பட்­ட­வர் சென்று வந்த அனைத்து சிகிச்­சைப் பிரி­வு­களும் மூடப்­பட்­டன. டான் டோக் செங் மருத்­து­வ­மனைக்­குள் மேலும் கொரோனா பர­வி­வி­டா­த­படி தடுக்க அம்­ம­ருத்­து­வ­மனை பல்­வேறு நட­வ­டிக்­கை­களை எடுத்து வரு­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!