எஸ்பிஎச் மீடியாவின் மறுசீரமைப்பில் தமிழ்மொழி நாளிதழான தமிழ் முரசு, மலாய்மொழி நாளிதழான பெரித்தா ஹரியான், சாவ்பாவ் போன்ற சீனமொழி நாளிதழ்கள் ஆகியவை முக்கிய இடம்பெறுவதாக திரு கோ பூன் வான் தெரிவித்துள்ளார்.
இந்த நாளிதழ்கள் ஒன்றுக்கொன்று மொழிபெயர்ப்பு செய்து ஒரே மாதிரியான செய்திகளை வெளியிடுவதில்லை என்று அவர் கூறினார்.
மாறாக, அவற்றின் தனித்துவம் வாய்ந்த வாசகர்கள், சமூகத்தின் தேவைகளை அறிந்து இந்த நாளிதழ்கள் சிறப்பான முறையில் செயல்பட்டு வருவதாக அவர் பாராட்டினார்.
"இவையெல்லாம் சிங்கப்பூர் நாளிதழ்கள். ஆனால் அவை அந்தந்த சமூகத்தினரின் தேவைகள், விருப்பங்கள் ஆகியவற்றை நன்கு புரிந்து அதற்கு ஏற்ற செய்திகளை வெளியிடுகின்றன.
உதாரணத்துக்கு, ஒரே செய்தியை வேறுபட்ட கோணங்களில் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழும் சாவ்பாவ் நாளிதழும் வாசகர்
களுக்கு வழங்குவதால் இவ்விரு நாளிதழ்களையும் தாம் கட்டணம் செலுத்தி வாசிப்பதாக திரு கோ தெரிவித்தார்.
ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளி
தழுடன் ஒப்பிடும்போது தமிழ், மலாய், சீனமொழி நாளிதழ்களுக்கு குறைவான வாசகர்கள் உள்ளனர்.
ஆனாலும் நாட்டை மேம்படுத்துவதில் இந்த நாளிதழ்களும் முக்கிய பங்கு வகிப்பதாக செய்தியாளர் கூட்டத்தில் திரு கோ கூறினார்.

