கட்டுப்பாடுகளுக்கு முக்கியத்துவம் தந்து வீட்டிலேயே வழிபாடு

நேர­லை­யில் குரு­வு­ட­னும் ஏனை­யோ­ரு­ட­னும் இணைந்து பிரார்த்­த­னை­யு­டன் நேற்று விசாக தினத்­தைத் தொடங்­கி­னார் எம் சத்­ய­நா­ரா­ய­ணன், 47.

“பௌத்த ஆல­யங்­க­ளுக்­குச் சென்று வழி­பாடு செய்­வது, கூட்­டுப் பிரார்த்­த­னை­யில் ஈடு­ப­டு­வது, தொண்­டூ­ழி­யங்­களில் ஈடு­ப­டு­வது என்று விசாக தினம் வழக்­க­மான கொண்­டாட்ட நாளாக இருக்­கும். ஆனால், கொவிட்-19 சூழல் கார­ண­மாக மிக அமை­தி­யான முறை­யில் விசாக தினத்­தைக் கொண்­டா­டி­னேன்,” என்று அவர் தமிழ் முர­சி­டம் கூறி­னார்.

2012ஆம் ஆண்­டில் சிங்­கப்­பூ­ருக்கு வந்த பின்­னர் திபெத்­திய பௌத்த சமய நம்­பிக்­கை­யைப் பின்­பற்­றத் தொடங்­கி­னார் சத்­ய­நா­ரா­ய­ணன்.

மன அழுத்­தத்­தால் பாதிக்­கப்­பட்­டி­ருந்த தமக்கு திபெத்­திய நம்­பிக்­கை­யின் போத­னை­களும் தியா­னங்­களும் அதி­லி­ருந்து மீண்­டு­வர உத­வி­ய­தா­கக் கூறி­னார் அவர்.

நிதி, முத­லீட்டு ஆலோ­ச­க­ரா­கப் பணி­பு­ரி­யும் அவர், தமது குடும்­பத்­தின­ருக்­கும் தியா­னம் மன அமை­தி­யை­யும் நிம்­ம­தி­யை­யும் தரு­வ­தா­கக் குறிப்­பிட்­டார்.

அத்­து­டன் சிங்­கப்­பூ­ரில் எந்த உற­வு­களும் இல்­லாத தமக்கு சக சீடர்­கள் குடும்­பத்­தி­னர்­போல ஆத­ரவு காட்­டி­ய­தா­க­வும் அவர் தெரி­வித்­தார்.

இவர் இப்­படி என்­றால் ராஜு குடும்­பத்­தி­னர் ஈராண்­டு­க­ளாக தங்­க­ளது வீட்­டி­லேயே விசாக தின வழி­பாட்டை நடத்­து­கி­றார்­கள்.

“விசாக தினத்­தில் வழக்­க­மாக பௌத்த ஆல­யத்­துக்­குச் செல்­வோம். அக்­கம்­பக்­கத்­தா­ருக்கு சைவ உணவு வாங்­கித் தரு­வோம்.

“இந்த ஆண்டு வீட்­டி­லேயே வழி­பாடு செய்­தோம். இணை­யத்­தில் உணவு வாங்கி அண்டை வீட்­டா­ருக்கு வழங்­கி­னோம்,” என்­றார் பானு ராஜு, 25.

கிட்­டத்­தட்ட 36 ஆண்­டு­க­ளாக பௌத்த சம­ய போத­னை­க­ளைக் கடைப்­பி­டித்­து­ வ­ரும் காப்­பு­றுதி நிபு­ண­ரும் உள்­ளூர் தொலைக்­காட்சி பாட­க­ரு­மான மோகன் ராம­கி­ருஷ்­ணன், 53, இந்­நாள் மனித குலத்­திற்­குப் பொன்­னாள் என்­

கி­றார். பௌத்த சம­யத்­தி­லேயே ‘சோக்கா’ என பர­வ­லாக அழைக்­கப்­படும் நிச்­சி­ரன் பௌத்த பிரி­வைச் சேர்ந்த இவர், இந்த நாளுக்­கென்று தனிப்­பட்ட கொண்­டாட்­டங்­களில் ஈடு­ப­டு­வ­தில்லை.

கௌதம புத்­தர் பெரு­மானை நினை­வில் கொள்­வ­தற்­காக ஒரு நாள் மட்­டும் கொண்­டா­டு­வ­தோடு போதிக்கப்பட்ட நெறிமுறைகளை வாழ்க்­கை­மு­றை­யு­டன் இணைத்­துக்­கொள்­வதே சாலச் சிறந்­தது என்று பதி­னைந்து வயது முதல் இச்­ச­ம­யத்­தைப் பின்­பற்­றி­வ­ரும் திரு மோகன் கூறு­கி­றார்.

1972ஆம் ஆண்­டில் சங்­கப் பதி­வ­கங்­களில் இடம்­பெற்ற சிங்­கப்­பூர் சோக்கா சங்­கம், சமூ­கப் பிணைப்பை ஊக்கு­விக்­கும் நிகழ்ச்­சி­க­ளுக்கு பங்­க­ளித்து வரு­கிறது.

தமது முப்­ப­தா­வது வயது முதல் சிறு­நீ­ரகச் செய­லி­ழப்பு, உயர் ரத்த அழுத்­தம் போன்ற சிர­மங்­களை உணர்ந்­த­போ­து­தான் நிச்­சி­ரன் பௌத்த வழி­மு­றை­க­ளின் மூலம் தமது மனதை மேலும் ஒரு­மு­கப்­

ப­டுத்தி கட்­டுக்­கோப்­பான வாழ்க்கை­ மு­றையை மேற்­கொண்­ட­தாக திரு மோகன் கூறி­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!