டெங்கி பாதிப்பு அதிகரிக்கலாம்

இவ்­வாண்டு ஜன­வரி மாதத்தை ஒப்­பு­நோக்க, ஏப்­ர­லில் 'ஏடிஸ்' கொசுப்­பெ­ருக்­கம் 30% கூடி­ய­தால், சிங்­கப்­பூ­ரில் டெங்கி பாதிப்பு அதி­க­ரிக்­க­லாம் என எதிர்­பார்க்­கப்­ப­டு­வதாக தேசிய சுற்­றுப்­புற வாரி­யம் தெரி­வித்து இருக்­கிறது.

கிள­மெண்டி வெஸ்ட் ஸ்தி­ரீட் 1, ஹவ்­காங் அவென்யூ 6, 8 மற்­றும் 10, ஜூரோங் ஈஸ்ட் ஸ்தி­ரீட் 32, மெய் சின் சாலை, மெய் லிங் ஸ்தி­ரீட், ஸ்டெர்­லிங் சாலை உள்­ளிட்ட சில குடி­யி­ருப்­புப் பகு­தி­களில் கொசுப்­பெ­ருக்­கம் அதி­க­மா­கக் காணப்­ப­டு­கிறது.

இவ்­வாண்­டில் இது­வரை 2,700க்கும் மேற்­பட்ட டெங்கி பாதிப்பு­கள் பதி­வா­கி­யுள்­ளன. இப்­போது 22 டெங்கி தொற்­றுக் குழு­மங்­கள் இருக்­கின்­றன.

அண்­மைய சில வாரங்­களில், கடந்த ஆண்­டின் இதே கால­கட்­டத்­தை­விட டெங்கி பாதிப்பு குறை­வாக இருந்து வரு­கிறது. ஆயி­னும், 2017, 2018ஆம் ஆண்­டு­க­ளைக் காட்­டி­லும் பாதிப்பு எண்­ணிக்கை அதி­க­மாக இருக்­கிறது.

சென்ற ஆண்­டில் 35,315 பேர் டெங்­கி­யால் பாதிக்­கப்­பட்­ட­னர். அவர்­களில் 28 பேர் இறந்­து­விட்­டனர்.

"ஆண்­டின் வெப்­ப­மான ஜூன்- அக்­டோ­பர் காலத்­தில் அடி­யெ­டுத்து வைத்­தி­ருப்­ப­தால், டெங்கி பர­வல் அபா­யம் அதி­க­மாக இருப்­பது கவலை அளிக்­கிறது," என்று வாரி­யம் கூறி­யுள்­ளது.

அத்­து­டன், கடந்த மாதம் 16ஆம் தேதி­யில் இருந்து கொவிட்-19 கட்­டுப்­பா­டு­கள் கடு­மை­யாக்­கப்­பட்­டு உள்­ள­தால் அதி­க­மா­னோர் வீட்­டி­லேயே உள்­ள­னர்; வீட்­டி­லி­ருந்­த­படி வேலை செய்­கின்­ற­னர். அத­னால் பகற்­பொ­ழு­தில் அவர்­களை 'ஏடிஸ்' கொசு கடிக்­கும் வாய்ப்பு அதி­கம் என்­றும் அவ்­வ­கை­யில் டெங்கி பர­வும் அபா­யம் அதி­க­ரிக்­கும் சாத்­தி­யம் உள்­ளது என்­றும் வாரி­யம் தெரி­வித்­துள்­ளது.

தண்­ணீர் தேங்­கா­மல் உறு­திப்­படுத்தி, கொசுப்­பெ­ருக்­கத்­தைத் தடுக்­கு­மாறு பொது­மக்­களை வாரி­யம் வலி­யு­றுத்­தி­யுள்­ளது.

இத­னி­டையே, கொசுப்­பெ­ருக்­கும் அதி­க­முள்ள பகு­தி­களில் வாரி­யம் தொடர்ந்து சோதனை நடத்­தும் என்­றும் டெங்கி தொற்­றுக் குழு­மங்­களில் தனது நட­வ­டிக்­கை­களை அதி­கப்­ப­டுத்­தும் என்­றும் தெரி­விக்­கப்­பட்­டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!